“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா”
(“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)
அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்
தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ
18. அல் குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் நாம் விளங்கும் போது இந்த உம்மத்தினுடைய ஹதீஸ் கலையைச்சார்ந்த ஸலபுகளின் விளக்கத்தைக்கொண்டு விளங்க வேண்டும் என்று நாம் வரையறுத்து வைத்திருக்கின்றோம். அவர்களில் இருக்கக்கூடிய தனி நபர்களில் எவரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற மாட்டோம். மாற்றமாக எவர் சத்தியத்தைக் கொண்டு வருகின்றாரோ அதனை நாம் எடுத்துக்கொள்வோம். மேலும் தாம் ஸலபிக்கொள்கையில் இருப்பதாக வாதிடுகின்ற சிலரை நாம் அறிந்திருக்கின்றோம், ஸபிக்கொள்கை அவர்களை விட்டும் நிரபராதியாக இருக்கின்றது. ஏனெனில் அல்லாஹ் ஹராமாக்கிய விடயங்களை ஹலாலாக்கிக்கொண்டு இந்த சமுதாயம் சென்றுகொண்டிருக்கின்றது.
(அவர்கள் அப்துர் ரஹ்மான் அப்துல் ஹாலிக்குடையவும் மேலும் முஹம்மத் ஸுரூருடையவும் தோழர்களைப்போன்றவர்களாவர்.)
19. நிச்சயமாக அரசியல் மார்க்கத்தில் இருக்கின்ற ஒரு பகுதி என்று நாம் நம்பிக்கை கொள்கின்றோம். அரசியலை விட்டும் மார்க்கத்தைப் பிரிப்பதற்கு முயற்சி செய்கின்றவர்கள்; மார்க்கத்தை உடைத்துத் தரைமட்டமாக்கி பிரச்சினைகளைப் பரப்பிவிடுவதற்குமே முயற்சி செய்கின்றனர். இவ்வாறே சில இஸ்லாமிய நாடுகளில் பரவிக்காணப்படும் “மார்க்கம் அல்லாஹ்வுக்குறியது நாடு அனைவருக்குமுறியது” என்ற இந்தக் கோஷம் மடமைக்காலத்தின் ஓர் அழைப்பாகும். மாற்றமாக அனைத்தும் அல்லாஹ்வுக்குறியதாகும்.
20. அல் குர்ஆன் மற்றும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவின் பக்கம் திரும்பும் வரைக்கும் முஸ்லிம்களுக்கு எந்தவொரு சக்தியும் கிடையாது. மேலும் எந்தவொரு வெற்றியும் கிடையாது என்று நாம் நம்பிக்கை கொள்கின்றோம்.
21. தற்காலத்தில் இருக்கக்கூடிய கட்சிகளை நாம் வெறுக்கின்றோம். அவைகளிலிருந்தும் உள்ளவைகள் தான்; நாத்தீகக் கொள்கைகளைச் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சி, இருதித்தீர்ப்பு நாளை மறுக்கக்கூடிய கட்சி, நாஸிர் என்பவனுடைய கட்சி, இதே கொள்கையைச் சார்ந்த சோசலிசக் கட்சியும், மேலும் மார்க்கத்தை விட்டும் வெளியேறிய ராபிழாக்களைச் சேர்ந்த கட்சிகளுமாகும்.
நாம் பார்க்கின்றோம் நிச்சயமாக மக்கள் இரு பிரிவினர்களாகப் பிரிந்து காணப்படுகின்றார்கள்.
ரஹ்மானுடைய பிரிவு: அவர்கள் இஸ்லாத்தினுடைய தூண்களோடும், ஈமானுடைய தூண்களோடும் ஒத்துப்போகக்கூடிய நிலையிலும், அல்லாஹ்வுடைய மார்க்கத்திலிருந்து எந்தவொரு விடயத்தையும் மறுக்காத நிலையிலும் இருப்பார்கள்.
ஷைத்தானுடைய பிரிவு: அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு எதிராகப் போராடக்கூடியவர்களாக இருப்பார்கள்.
22. மார்க்கத்தை தொலிகள் என்றும் பழங்கள் என்றும் பிரிப்பவர்களின் மீது நாம் மறுப்புத் தெரிவிக்கின்றோம். அது மார்க்கத்தை இடித்து விடக்கூடிய ஒரு அழைப்பாகும் என்பதையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.
23. மக்களை ஸுன்னாவுடைய அறிவிலிருந்து எவன் பற்றற்றவர்களாக்கி, இது அதற்குறிய நேரமில்லை என்று கூறுகின்றானோ அவனுடைய விடயத்தில் நாம் மறுப்புத் தெரிவிக்கின்றோம். மேலும் இவ்வாறே எவன் (மக்களை) ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவைக்கொண்டு அமல் செய்வதை விட்டும் பற்றற்றவர்களாக்கி விடுகின்றானோ அவனின் மீதும் நாம் மறுப்புத் தெரிவிக்கின்றோம்.
24. எது மிக முக்கியமானதாக இருக்கின்றதோ அதனை முற்படுத்த வேண்டும் என்பதை நாம் காணுகின்றோம். எனவே கொள்கைக் கோட்பாடுகளை சீர் செய்து கொள்வதில் முக்கியத்துவம் காட்டுவது முஸ்லிம்களின் மீது கடமையாக இருந்து கொண்டிருக்கின்றது. பிறகு கம்யூனிஸ்ட் வாதிகளையும், மேலும் இறுதித் தீர்ப்பு நாளை மறுக்கக்கூடிய கட்சியையும் இல்லாமல் செய்து விட வேண்டும். அவ்விடயம் அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் பற்றிப்பிடிப்பதைக்கொண்டு ஒற்றுமைப்படுவதின் மூலமாகவே அன்றி ஆகி விடமாட்டாது.
25. நிச்சயமாக ராபிழாக்களின் கொள்கையைச் சார்ந்தவனையும், ஷீயாக்களின் கொள்கையைச் சார்ந்தவனையும், சூபிய்யாக்களின் கொள்கையைச் சார்ந்தவனையும் மேலும் சுன்னாவை பற்றிப்பிடிக்கக்கூடியவனையும் இணைத்து செயற்படக்கூடிய கூட்டமானது, எதிரிகளுக்கு முகங்கொடுப்பதற்கு சக்தி பெற மாட்டது என்பதை நாம் காண்கின்றோம். ஏனெனில் எதிரிகளுக்கு முகங்கொடுக்கின்ற விடயமென்பது, உண்மையான சகோதரத்துவத்தைக்கொண்டும்; கொள்கைக்கோட்பாட்டில் ஒன்றுபடுவதைக்கொண்டுமே அன்றி ஆகி விடமாட்டாது.
26. அல்லாஹ்வின் பாதையின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளர்கள் வஹ்ஹாபிய்யாக்கள்; (அஷ்ஷேய்ஹ் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் அந்நஜ்தீ ரஹிமஹுல்லாஹ் அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடியவர்கள்) பணத்திற்காக வேலை செய்யக்கூடியவர்கள் என்று நினைத்துக்கொண்டு; பெருமையடித்து, பிடிவாதமாக இருக்கின்றவர்களுக்கு நாம் மறுப்புத்தெரிவிக்கின்றோம். நிச்சயமாக அவர்கள் பொதுமக்களுக்கும் மேலும் அறிஞர்களுக்கும் மத்தியில் ஒரு பிரிவை ஏற்படுத்தி விடுவதற்கு நாடுகின்றார்கள் என்ற அவர்களுடைய கெட்ட நோக்கத்தையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.
இன்ஷாஅல்லாஹ்
தொடரும்…