“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா”
(“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)
அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்
தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ
15. தற்காலத்தில் அதிகமாகக் காணப்படுகின்ற இந்த கூட்டங்கள், முஸ்லிம்களைப் பிரிப்பதற்கும், மேலும் அவர்களைப் பலவீனப்படுத்துவதற்கும் ஒரு காரணமாக இருக்கின்றன என்பதை நாம் காண்கின்றோம்.
16. அல் இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற கூட்டத்தினுடைய அழைப்புப்பணி இந்த சமூகத்தை சீர்திருத்துவதற்கு சீரான ஒன்றாகவும், மேலும் அதற்கு சக்தி பெற்ற ஒன்றாகவும் இல்லை என்பதை நாம் காண்கின்றோம். ஏனென்றால் திட்டமாகவே அது உயிரோட்டமுள்ள ஒரு அழைப்புப்பணியாக இல்லாமல் அரசியல் சார்ந்த ஒரு அழைப்புப்பணியாக மாறிவிட்டது.
மேலும் அது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட ஒரு அழைப்புப்பணியாகவும் மாறிவிட்டது. ஏனென்றால் அது அறியப்படாத ஒருவரிடம் உறுதிமொழி கொடுப்பதின் பக்கம் அழைக்கக்கூடியதாக இருக்கின்றது. மேலும் அது குழப்பத்தின் பக்கம் அழைக்கின்ற அழைப்புப்பணியாகவும் மாறிவிட்டது. இன்னும் அது மடமையின் மீது நிற்கக்கூடியதாகவும், அதன் மீதே செல்லக்கூடியதாகவும் இருந்துக் கொண்டிருக்கின்றது. அக்கூட்டத்திலே வேலை செய்யக்கூடிய சில சிறப்புக்குறிய சகோதரர்கள் முஸ்லிம்களுக்கு எந்தவித பிரயோசனத்தையும் தராத அந்த விடயத்திலே அவர்களுடைய நேரத்தை வீணடிக்காமல் இருப்பதற்காக அதை விட்டு விலகி நடந்துக்கொள்ளட்டும் என்று நாம் அவர்களுக்கு உபதேசம் செய்கின்றோம். மேலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நிச்சயமாக அல்லாஹ் வெற்றியைக் கொடுப்பான் என்பதே ஒரு முஸ்லிமுடைய எண்ணமாக இருக்க வேண்டும்.
17. மேலும் தப்லீக் ஜமாஅத்தை பொருத்தமட்டில், அவர்களைப்பற்றி சிறப்புக்குறிய சகோதரர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அல் உஸாபீ அவர்கள் எழுதியவற்றை நான் உங்களுக்கு முன்வைக்கின்றேன்.
(மொழிபெயர்த்தவர் கூறுகின்றார்: முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அல் உஸாபீ என்று அழைக்கப்படுகின்ற இந்நபர் அஷ்ஷேய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய மாணவர்களில் ஒருவராக இருந்தார். பிறகு அவருடைய மரணத்திற்குப் பின்னால் ஒரு இயக்கவாதியாக மாறிவிட்டார். மேலும் இவரை விட்டும் பல உலமாக்களும் எச்சரித்திருக்கின்றனர். அந்த உலமாக்களின் வரிசையில் எங்களுடைய ஷேய்ஹான அல் அல்லாமாஹ் யஹ்யா இப்னு அலீ அல் ஹஜூரீ ஹபிழகுல்லாஹ் அவர்களும் ஒருவராவார்.)
எனவே அவர் அதிலே கூறுகின்றார்: – (அவரை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)
1. அவர்கள் [ தப்லீக் ஜமாஅத்தினர் ] பலவீனமான ஹதீஸ்களைக்கொண்டும், மேலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட, அடிப்படையே இல்லாத ஹதீஸ்களைக்கொண்டும் அமல் செய்கின்றனர்.
2. அவர்களிடத்தில் அதிகமான பித்அத்துக்கள் [மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட விடயங்கள்] காணப்படுகின்றன. இன்னும் நிச்சயமாக அவர்களுடைய அழைப்புப்பணி பித்அத்துகளின் மீதே அமைக்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் அவர்களுடைய அழைப்புப்பணியின் ஏழ்மையான அடிப்படைகளாக, வரையறுக்கப்பட்ட சில காலங்களுக்கு வெளியேறிச்செல்வது இருந்துக்கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் வெளியேறிச் செல்வது. ஒரு வருடத்தில் நாற்பது நாட்கள் வெளியேறிச் செல்வது, மேலும் வாழ்நாளில் நான்கு மாதங்கள் வெளியேறிச் செல்வது, இன்னும் ஒவ்வொரு கிழமையிலும் இரண்டு சுற்றுக்கள் இருக்கின்றன, ஒரு சுற்று நீ தொழுகின்ற பள்ளியிலும், இரண்டாவது சுற்று வேறு பள்ளிகளுக்கு இடம்மாறுவதாகவும் இருக்கும்.
ஒவ்வொரு நாளும் இரண்டு சபைகள். ஒரு சபை நீ தொழுகின்ற பள்ளியிலும், இரண்டாவது சபை வீட்டிலுமாக இருக்கும்.
அதனை விட்டுவிடாமல் தொடராக கடைபிடித்து வரக்கூடிய நபரையே அன்றி வேறு எவரையும் அவர்கள் பொருந்திக்கொள்ள மாட்டார்கள்.
மேலும் நிச்சயமாக அது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டதாகும். அவ்விடயத்திலே எந்தவித ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கிவைக்காத ஒன்றாக அது இருந்துக்கொண்டிருக்கின்றது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
3. நிச்சயமாக ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பு விடுப்பது இந்த உம்மத்தை விரண்டோடச்செய்யக்கூடியதாகும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
4. நிச்சயமாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சுன்னாவின் பக்கம் அழைப்பு விடுப்பது இந்த உம்மத்தை விரண்டோடச்செய்யக்கூடியதாக இருக்கின்றது என்று அவர்கள் கருதுகின்றனர்.
5. ஹுதைதா எனும் ஊரிலே இருக்கக்கூடிய அவர்களுடைய தலைவர் மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய ஒரு பித்அத், அவர்களுக்கு மத்தியில் பிரிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு சுன்னாவை விட மிகச்சிறந்ததாகும் என்று கூறுகின்றார்.
6. அஹ்லுஸ்ஸுன்னாவுக்கு எதிர்ப்பை காட்டக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
7. மறைவாகவும், மேலும் தெளிவாகவும் பிரயோசனமான அறிவை விட்டும் மக்களை பற்றற்றவர்களாக ஆக்கிவிடுகின்றனர்.
8. நிச்சயமாக அவர்களுடைய பாதையை விட்டால் மக்களுக்கு வேறு பாதைகளில் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர். மேலும் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய கப்பலை அதற்கு உதாரணமாக காட்டுகின்றனர். அதிலே எவர் ஏறி விட்டாரோ அவர் பாதுகாப்பு அடைந்து விடுவார், எவர் ஏறி விடவில்லையோ அவர் அழிந்து விடுவார். இன்னும் அவர்கள் கூறுகின்றனர்: நிச்சயமாக எங்களுடைய அழைப்புப்பணி நூஹுடைய கப்பலை போன்றதாகும். இந்த உதாரணத்தை நான் ஜோர்தானிலும், யெமனிலும் அவர்களிடமிருந்து செவியுற்று இருக்கின்றேன்.
9. அல்லாஹ்வே வணங்கப்படத்தகுதியானவன் என்ற அந்த ஏகத்துவத்திலும், மேலும் அவனது பெயர்கள், பண்புகள் சம்பந்தப்பட்ட ஏகத்துவ விடயங்களிலும் முக்கியத்துவம் காட்டமாட்டார்கள்.
10. நிச்சயமாக அவர்கள் அறிவைத்தேடுவதற்கு தயாரானவர்களாக இல்லை. அறிவைத்தேடுவதற்காக செலவளிக்கப்படக்கூடிய நேரத்தை வீணானதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
மேலும் மேற்சொல்லப்படாத இன்னும் பல விடயங்களும் அவர்களிடத்தில் இருக்கின்றன.
இன்ஷாஅல்லாஹ்
தொடரும்…