நூல் அறிமுகம்
- நூல் பெயர்: அஹ்லுஸ் ஸுன்னா கொள்கையின் அடிப்படைகள்
- நூலாசிரியர்: மௌலவி பஷீர் ஃபிர்தௌஸி
- பக்கம்: 232
- விலை: ரூ.120
- வெளியீடு: அஹ்லுஸ் ஸுன்னா பதிப்பகம், வேளச்சேரி
- தொடர்புக்கு: 98412 00682
“இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அழைப்புப்பணி செய்பவர்கள், தனித்து இயங்குபவர்கள், சிறு குழுக்களாகச் செயல்படுபவர்கள், கல்வியைத் தேடுபவர்கள், கற்றுக்கொண்டிருப்பவர்கள், கற்க விரும்புபவர்கள் என அனைவரும் “அகீதாவைப் படித்தே ஆக வேண்டும். சுவனத்தின் மீது ஆதரவு வைப்பவர்கள், நபியும் நபித்தோழர்களும் பயணித்தப் பாதையைக் கண்டுபிடித்து, அந்தப் பாதையில் தங்களது பயணத்தைத் தொடர வேண்டும்!
வாருங்கள் பயணிப்போம்… இன்ஷா அல்லாஹ்…”
மேற்குறிப்பிட்ட வாக்கியங்களைச் சுமந்து காணப்படும் புத்தகத்தின் பின்அட்டை மனதைக் கவர்ந்து, புத்தகத்தின் மீதான வாசிப்பின் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.இறை நம்பிக்கையாளனின் வாழ்க்கை ஓட்டத்தில், அவன் எங்கெலெ்லாம் தடம் பிறழ்வானோ, அங்கெல்லாம் அவனைத் தூக்கிப் பிடிக்கும் ஆயுதமாக இந்த நூல் அமைந்துள்ளது. 43 உசூல்களை வெவ்வேறு தலைப்புகளில் விலாவாரியாக உள்ளடக்கி, தெளிவுபடுத்தி தெள்ளியதோர் பாதையை வகுத்துத் தருகிறது. அனைத்து தலைப்புகளும் திருக்குர்ஆன் வசனங்களோடு, நபிகளாரின் விளக்கங்களோடு, நபித்தோழர்களின் புரிதலோடு, நேர்வழிப் பாதையில் பயணித்த அறிஞர்களின் கூற்றோடு சுவனத்தைத் தேடி பயணிக்கிறது இந்நூல். இதுவரை தமிழில் வெளிவந்த “அகீதா” புத்தகங்களின் வரிசையில் இது சற்று மாறுபட்டு நிற்கிறது.
ஆம்! காலச்சூழல், கலாச்சாரச் சீர்கேடு, நேர்வழியின் தேலையின்மை, அறிஞர்களை அலட்சியப்படுத்துதல், பகுத்தறிவு வாதம் போன்ற தற்கால நவீன பிரச்னைகளை மனதில் கொண்டு, நயம்பட அதற்கான விடைகளை உளவியல் ரீதியாகத் தொகுத்து, நேர்வழித் தேடலின் ஆர்வத்தை அதிகப்படுத்தி, பக்கங்களை திருப்புதலில் ஆர்வமூட்டுகிறார் ஆசிரியர்.
எளிய தமிழ் நடை, இலகுவாக புரிந்துகொள்ளும் வாக்கிய அமைப்பு, நூலின் வடிவமைப்பு ஆகியவை பாமரர்களும் படித்து பயன்பெறத் தக்க வகையில் அமைத்திருக்கிறது. எல்லா வீடுகிளிலும் இந்தப் புத்தகம் அவசியம் இடம்பெற வேண்டும். மஸ்ஜிதுகளில், மதரஸாக்களில், இஸ்லாமிய கல்வி நிலையங்களில் இந்த சிறப்பான நூலை வாங்கி பாடத்திட்டங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு.
நான் இலங்கையைச் சார்ந்தவன். எனக்கும் மௌலவி பஷீர் ஃபிர்தௌஸி அவர்கள் எழுதிய அஹ்லுஸ் ஸுன்னா கொள்கையின் அடிப்படைகள் என்ற நூல் வேண்டும். எப்படி பெற்றுக்கொள்வது ?
I want ahlus sunnah book pdf in Tamil