Featured Posts

உளவியலும் கசப்பான உண்மைகளும்

ஆண்கள் அன்னியப்பெண்களை பார்க்கின்ற இயல்புடையவர்கள் என்பதை விட முஃமீன்கள் பார்வையை தாழ்த்தக் கூடியவர்கள், என்ற கருத்தே உளவியலாளர்களால் பெண்களுக்கு மத்தியில் முன்வைக்கப்பட வேண்டும்.

பெண்களே..!
உங்கள் கணவர் ஒரு ஆண், அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா..? அவன் பஸ்ல எப்படி போவான் தெரியுமா..? அவனுக்கு பக்கத்தில் யார் அமர்கின்றாள் தெரியுமா..? அவன் நிண்டு போனால் எப்படி போவான் தெரியுமா..? பிரேக் பிடித்தால் என்ன செய்வான் தெரியுமா..?

என்ற பல கேள்விகளை அடுக்கி அதற்கு தாமே வர்ணனைகளை செய்து பேசும் ஒரு சில உளவியலாளர்களின் உணர்ச்சிகரமான பேச்சுக்கள் பல நல்ல குடும்பங்களை தேவையற்ற சந்தேகங்களை கொண்டு பிரித்துள்ளது.

ஒரு ஆண் எப்படிபட்டவன் என்பதை விட, ஒரு முஃமினான கணவன் எப்படிபட்ட பண்புடையவன் என்ற தலைப்பில் பேசினால் எம் சமூகத்தில் சிறந்த மாற்றங்கள் நிச்சயம் ஏற்படலாம்.

நபிகளார் முஃமீன்களுக்கு மத்தியில் சந்தேகம் ஏற்படுகின்ற விதத்தில் உபதேசங்களை நான் அறிந்த வரை செய்தது கிடையாது, தடைகளை தெளிவாக சொன்னார்கள். உங்கள் கணவனும் ஒரு மனிதனே..! அவனையும் முழுமையாக நம்பிவிட வேண்டாம் என்ற தோரணையில் அவர்கள் எங்கும் பேசியது கிடையாது.

ஒரு முஃமீன் மற்ற முஃமீனை முழுமையாக நம்ப வேண்டும் அவனிடம் தெளிவாக தவறை காணும் வரை இதுவே இஸ்லாம் எமக்கு கற்றுத் தரும் பாடமாகும்.

சந்தேகங்களை மனதில் வைத்து கொண்டு வாழ இஸ்லாம் எமக்கு எங்கும் கற்றுத்தர வில்லை

குறிப்பு:
இவை நான் சமூகத்தில் கண்ட, என்னுடன் தொடர்பு கொண்டு பலர் சொன்ன பிரச்சினைகளை வைத்து எழுதிய கருத்தாகும். பிழைகள் இருந்தால் யாரும் சுட்டிக்காண்பிக்க முடியும்.

ஆசிரியரின் ஏனைய கட்டுரைகளை காண: https://islamkalvi.com/?author=172

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *