கட்டுரை ஆசிரியர்: சையத் உஸ்மான்
ஜனவரி 10, 2018 அன்று ஆசிஃபா பானு, தன் குதிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த புல்வெளியிலிருந்து வீடு திரும்பவில்லை. அவளது பெற்றோர் அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்தனர். ஜனவரி 12, 2018 அன்று காவல்துறையிடம் புகார் அளித்த பெற்றோர், அப்பகுதியில் இருந்த சஞ்சீவ் ராமின் மீது சந்தேகம் தெரிவித்துள்ளார். அந்த புல்வெளிப் பகுதியின் அருகில் இருந்த சஞ்சீவ் ராமின் கோவிலுக்கு சென்று காவல்துறை விசாரித்துள்ளனர். அப்போது சஞ்சீவ் ராம், “நான் அந்த சிறுமியை பார்க்கவே இல்லை” என்று கூறி இருக்கின்றான்.
காவல்துறை அதிகாரி கூறுகையில், “விசாரிக்கும் நேரத்தில் நேரத்தில் கோவில் பூட்டப்பட்டிருந்தது. சஞ்சீவ் ராம் ஆசிஃபாவை கோவிலின் உள்ளே ஒரு மேஜைக்கு அடியில் பிளாஸ்டிக் பாய்களைக் கொண்டு மறைத்து வைத்து இருந்திருக்கின்றான்”. இச்சூழலில் ஜனவரி 17, 2018 அன்று ஆசிஃபா பானுவின் சிதிலமடைந்த உடல் அருகிலிருந்த காட்டில் கிடப்பது போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது. அந்தக் குழந்தை சீரழிக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். இதைத் தொடர்ந்து போலீசார் இரண்டு நபர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர். சஞ்சீவ் ராம் அவர்கள் இருவரையும் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து மீட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.
சட்டசபையில் போராட்டம்:
இதையடுத்து போலீசாரின் மெத்தனப் போக்கைக் கண்டித்து ஜனவரி 18, 2018 அன்று காஷ்மீர் மாநில சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாநில அரசு இவ்வழக்கை குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறது. போலீசாரின் புலன்விசாரணையில், சஞ்சீவ் ராம் மற்றும் எட்டு பேர்கள் கொண்ட குரூர கும்பல் ஆசிஃபாவை அருகில் உள்ள ஒரு கோவிலில் அடைத்து அவளின் கழுத்தைப் பிடித்து தூக்க மாத்திரைகளைத் திணித்துள்ளனர். அதன்பின் அடுத்த மூன்று நாட்களுக்கு அவளைத் தொடர்ந்து மாறிமாறி பாலியல்
வன்கொடுமை புரிந்துள்ளனர். கடைசியாக அவள் கற்பழிக்கப்பட்ட போது அவள் இறந்து போனாள். மறுநாள், ஆசிஃபாவின் சிதைக்கப்பட்ட உடல் அந்தக் காட்டுப் பகுதியில் அதே ஊதா நிற உடையில் இரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டதாக
காவல்துறையினர் கூறுகின்றனர்.
வெறுப்புணர்வு:
புலனாய்வுத் துறையினரின் கூற்றுப்படி, அவர்கள் ஆசிஃபாவை சீரழித்ததற்கான நோக்கம் அவளின் நாடோடி சமூகத்தின் மீது இருந்த வெறுப்புணர்வே ஆகும்.”இந்த வழக்கு சம்பந்தமாக எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எட்டு நபர்களும் ஹிந்துத்வா சிந்தனைக் கொண்டவர்கள். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 15 வயது சிறுவன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையின் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு 19 வயது இருப்பதாக கூறுகின்றனர். ஜம்முவில் இதுபோல பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக கூறுகின்றனர். பலவீனமான ஒரு சிறுமியை மிருகக் குணம் கொண்ட சில ஆண்கள் அரங்கேற்றிய பாலியல் வன்முறை இந்தியாவில் பாலியல் வன்முறைகளின் மாற்று முகத்தை காட்டியுள்ளது. ஆசிஃபாவின் நாடோடி சமூகமான பக்கர்வால் மக்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் ஆவர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஹிந்துக்கள் என்பதால் இந்துத்துவா அமைப்புகள் குற்றவாளிகளுக்கு ஆதரவு தந்து காப்பாற்ற போராடுகின்றார்கள். ஆசிஃபாவிற்கான நீதியைப் பற்றி அவர்கள் கவலைக் கொள்ளவில்லை.
இந்த வாரம் ஹிந்துத்துவ வழக்கறிஞர்கள், குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வந்த காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்திற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கிருந்து திரும்பிய அந்த அதிகாரிகள் மாலையில் நீதிபதியின் இல்லத்திற்குச் சென்று குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
தொடர் போராட்டங்கள்:
தற்போது ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் பரவி வருகின்றன. புதன்கிழமையன்று ஜம்முவின் சிறிய நகரமான கத்துவா பகுதி போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டது. இந்த நகரம் ஆசிஃபா கொல்லப்பட்ட பகுதியை ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பல ஹிந்து பெண்களும் கலந்துகொண்டு குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டக்காரர்களை ஆதரித்துள்ளனர். “பக்கர்வால் சமுதாய மக்கள் எங்கள் மதத்திற்கு எதிராக உள்ளனர்” என்று எதிர்ப்பாளர்களில் ஒருவரான பிம்லா தேவி கூறியுள்ளார். மேலும் “குற்றவாளிகளை நீதிமன்றம் விடுவிக்காவிட்டால் நாங்கள் தீக்குளிப்போம்” என்று மிரட்டியுள்ளனர். “இந்த வழக்கை விசாரிக்கக் கூடிய அதிகாரிகளில் சிலர் முஸ்லிம்களாகவே உள்ளனர்.
அதனால் எங்களுக்கு நம்பகத்தன்மை இல்லை” என்று ஹிந்துத்வா அமைப்பினர் கூறுகின்றனர். ஆனால் காவல் துறை ஆய்வாளர்களோ ஆசிஃபாவின்
கொலைக்கு அவர்கள்தான் காரணம் என்பதற்கு உடற்கூறுகளின் சாட்சியங்கள், ஸீஷீபீμ பரிசோதனை மூலம் கிடைத்த சாட்சியங்கள் என்று 130க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் உள்ளது என்று அம்பலப்படுத்தியுள்ளனர். இந்துத்துவ மேலாதிக்கத்தை இலட்சியமாகக் கொண்ட பாரதீய ஜனதா கட்சி இந்த வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து கையகப்படுத்தி மத்திய புலனாய்த்துறையிடம் ஒப்படைக்குமாறு கூறுகின்றது. குற்றம்சாட்டப்பட்ட ஹிந்துத்துவவாதிகளுக்கு சாதகமாகவே இந்த முடிவை முன்னெடுக்கிறது மத்திய அரசு. மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) ஆளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் குற்றவாளிகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிட பா.ஜ.க முயல்கிறது.
மையமான கோவில்:
ஆசிஃபா கொலை வழக்கில் ஒரு ஹிந்து கோவில் மையமாக உள்ளது. இந்தக் கோவிலின் பாதுகாவலனான சஞ்சீவ் ராம் என்பவன், பக்கர்வால் சமூகத்தின் மீது வன்முறைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான். அதற்காகத்தான் அவனுடைய நண்பர்களின் உதவியைக் கொண்டு ஆசிஃபாவை கடத்தி கற்பழித்து கொன்றுள்ளனர் என்று காவல்துறை கூறுகிறது. மிக எளிமையாக ஆசிஃபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாள். பககர்வால் சமுதாய மக்கள் வட இந்தியாவின் சமவெளிகளிலும், மலைகளிலும் உள்ள தங்களது மந்தைகளோடு நகர்ந்து செல்லும் நாடோடிகள் ஆவர். குளிர் காலங்களில் தங்கள் விலங்குகள் மேய்ச்சல் கொள்ள இந்து விவசாயிகளிடமிருந்து நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளனர். ஆனால் சமீப ஆண்டுகளாக கத்துவா பகுதியில் சில இந்துக்கள் நாடோடிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மேலும் அந்தக் கிராமத்தில் உள்ள இந்துக்கள் திரு. சஞ்சீவ் ராம் மிகச்சிறந்த எழுச்சியாளர் என்றும் கூறுகின்றனர்.
“என் மகள் கொல்லப்பட்டதற்கான காரணம் பகர்வால் முஸ்லிம் சமூகம் இங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆகும். ஆனால் இது தான் எங்கள் வாழிடம். இங்கு தான் எங்கள் வாழ்க்கை. மேலும் இது தான் எங்கள் வீடு” என்கின்றார். “அவளுக்கு சகோதரர்கள் இருக்கின்றனர். அவள் எப்போதும் பள்ளியில் இருந்ததில்லை. அவளுக்கு புல்வெளிகளில் மந்தைகளை மேய்ப்பதுதான் பிடித்தமான செயல்” என்று ஆசிஃபாவின் தந்தை முஹம்மது யூசுஃப் புஜ்வாலா ஆழ்ந்த சோகத்தில் சோர்வாக பதில் கூறினார். 8 வயது குழந்தை ஆசிஃபாவின் மரணத்திற்கு நீதி கேட்டு டெல்லியில் போராட்டம் வெடித்தது. ஏப்ரல்12, 2018 நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெற்ற போராட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா, குலாம் நபி ஆசாத் உட்பட ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். “ஆசிஃபா கொலைச் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும்” என காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி உறுதி அளித்துள்ளார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைக் கிடைக்க வேண்டும், அது சங்பரிவார கூட்டத்திற்கு சாவுமணியாக அமைய வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
நன்றி: மக்கள் உரிமை
நான் எப்ப வேண்டுமானாலும் கொல்லப்படலாம் – ஆசிஃபா-வின் வழக்கறிஞர் அச்சம்
ஆசிஃபா வழக்கில் இந்து – முஸ்லிம் சாயம் பூசப்படுகிறது. நான் ஒரு காஷ்மீரி பண்டிட். காஷ்மீரில் பிறந்தேன். நானும் இந்து சமூகத்தை சேர்ந்தவள் தான். அவ்வப்போது எனக்கே அதை நினைத்து வெட்கமாக இருக்கிறது. நான் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைக்காக பல காலமாக வேலை செய்து வருகிறேன். நான் இந்த வழக்கை முதலில் இருந்தே கவனித்து வந்தேன். எனக்கும் ஐந்து வயது பெண் குழந்தை இருக்கிறாள். பாதிக்கப்பட்ட சிறுமியை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது. எனவே, நானே அவர்களை சந்தித்து வழக்கை எடுத்துக் கொள்ள முன் வந்தேன். இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞராக நான் இருப்பதால் எனக்கு பல மிரட்டல்கள் வருகின்றன. நீதிமன்ற படிகளில் வைத்தே, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் என்னை மிரட்டினார். நான் எப்போது வரை உயிருடன் இருப்பேன் என எனக்கு தெரியாது.
“இந்த வழக்கு காரணமாக நான் கொல்லப்படலாம். பலாத்காரம் கூட செய்யப்படலாம்” என்கிறார் வழக்கறிஞர் தீபிகா ராஜாவத்.