- அதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்றல்.
- கடந்த ரமழானில் விடுபட்ட நோன்புகளை அவசரமாக நோற்றல்.
- ஒவ்வொரு மாதமும் பிறை 13,14,15 நோன்பு நோற்கும் வழமையுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ஷஃபான் மாதத்தின் 15 நாளை பராஅத் என்ற பெயரில் அமல்களைக் கொண்டோ நோன்பைக் கொண்டோ சிறப்பிக்காமல் இருத்தல். ஏனெனில் அது தொடர்பாக ஆதாரப் பூர்வமான எந்த செய்திகளும் இல்லை.
- ஷஃபானின் 15க்கு பிறகு சுன்னத்தான நோன்புகளை நோற்கக்கூடாது என வரும் செய்தி ஆதாரமற்றது. எனவே சுன்னத்தான நோன்புகளை நோற்பவர்கள் ஷஃபான் பிறை 27 வரை நோற்றுக் கொள்ளலாம்.
- ரமழானுக்கு இரு நாட்கள் எஞ்சியிருக்ககும் போதே சுன்னத்தான நோன்புகளை நோற்கக் கூடாது, எனினும் திங்கள், வியாழன் நோன்பு வைக்கும் ஒருவர், ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு வைக்கும் ஒருவர் அந்த நாட்களில் கூட நோன்பு வைத்துக் கொள்ளலாம்.
எனவே ஷஃபானில் அதிகமதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்று ரமழானனுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்வோம்.
ஷஃபான் மாதம் 30 ஏன் நோன்பு நோற்க கூடாது?