Featured Posts

சஹருக்கு பல மணி நேரங்கள் முன்பாக எழுந்து ‘விடி சஹர்’ செய்வோர் விடுகின்ற தவறுகள்! [உங்கள் சிந்தனைக்கு… – 026]

சஹருக்கு பல மணி நேரங்கள் முன்பாக எழுந்து ‘விடி சஹர்’ செய்வோர் விடுகின்ற தவறுகள்!

“இன்னும் fபஜ்ர் (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல், (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்!” (அல்குர்ஆன், 02: 187)

அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சஹர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள்!” என்று ஸைத் இப்னு சாபித் (ரழி) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், “பாங்கிற்கும் சஹருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?” என்று கேட்டேன். அதற்கவர், “ஐம்பது குர்ஆன் வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!” என்று பதலளித்தார்கள்.{ நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் – 1921 }

அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“மக்களில் சிலர், (சஹருக்குரிய சரியான நேரத்திற்கு முன்னதாக) முன்கூட்டியே சஹர் செய்து விடுகின்றனர். ஏனெனில், இரவின் பெரும்பாலான நேரங்களில் வீணாக இவர்கள் விழித்திருந்து, பின்னர் சஹர் செய்து விட்டு, fபஜ்ருக்கு சில மணி நேரங்கள் முன்பாக தூங்கி விடுகின்றனர். இதன் மூலம் பல தவறுகளை இவர்கள் செய்கின்றனர்.

  1. நோன்பு நோற்பதற்குரிய (சரியான) நேரம் வர முன்னரே நோன்பை நோற்று விடுகின்றனர்.
  2. fபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதை விட்டு விடுகின்றனர். தம் மீது அல்லாஹ் கடமையாக்கியிருக்கும் ஜமாஅத் தொழுகையை விட்டதன் மூலம் அல்லாஹ்வுக்கு இவர்கள் மாறு செய்து விடுகின்றனர்.
  3. சில வேளை fபஜ்ர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாது பிற்படுத்தி சூரியன் உதித்ததன் பின்னரே இவர்கள் தொழுகின்றனர். இது, கடுங்குற்றமும் மிகப்பெரிய பாவமுமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: “தமது தொழுகையில் பராமுகமாக இருக்கும் தொழுகையாளிகளுக்குக் கேடுதான்!”. (அல்குர்ஆன், 107: 4,5)
{ நூல்: ‘அல்முலஹ்ஹஸுல் fபிக்ஹீ’ லில்fபவ்ஸான், 01/379 }

 قال الله تعالى: { وكلوا واشربوا حتى يتبيّن لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتمّوا الصيام إلى الليل } (البقرة: الآية – ١٨٧)
 عن أنس عن زيد بن ثابت رضي الله عنه قال: [ تسحّرنا مع النبي صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة، قلت: كم كان بين الأذان والسحور؟ قال: قدر خمسين آية ] (بخاري- ١٩٢١)
قال العلامة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-
[ وبعض الناس يبكّرون بالتّسحّر لأنهم يسهرون معظم الليل، ثم يتسحّرون وينامون قبل الفجر بساعات، وهؤلاء قد ارتكبوا عدة أخطاء:
أولا: لأنهم صاموا قبل وقت الصيام.
ثانيا: يتركون صلاة الفجر مع الجماعة، فيعصون الله بترك ما أوجب الله عليهم من صلاة الجماعة.
ثالثا: ربما يؤخرون صلاة الفجر عن وقتها، فلا يصلّونها إلا بعد طلوع الشمس. وهذا أشد جرما وأعظم إثما؛ قال الله تعالى: [ فويل لّلمصلّين، الذين هم عن صلاتهم ساهون ] (الماعون : ٤،٥)
{ الملخص الفقهي للشيخ فوزان، ١/٣٧٩ }

தமிழில்
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *