கோள்’ செய்தி கொண்டு வந்தவரிடம் மூன்று குற்றங்கள் கண்டுபிடிப்பு!
“ஸாலிஹான நல்ல மனிதரொருவரிடம், (அவர் பற்றிக் கூறப்பட்ட) கோள் செய்தியுடன் ஒருவர் வந்தார். வந்து சொன்னவருக்கு அந்த நல்ல மனிதர் கூறினார்:
‘மூன்று குற்றங்களுடன் என்னிடம் நீ வந்திருக்கின்றாய்.
- எனக்கும், (என்னைப் பற்றி கோள் சொன்ன) எனது அந்த சகோதரருக்குமிடையில் நீண்டதோர் இடைவெளித் தூரத்தை நீ ஏற்படுத்தி விட்டாய்!
- வெறுமனே காலியாகயிருந்த எனது உள்ளத்தை வேலை செய்ய வைத்துவிட்டாய்!
- எனது உள்ளத்தில் உன்னைப் பற்றி இருந்த (நல்ல) இடத்தைப் பாழாக்கி விட்டாய்!”
இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: “புறம்பேசுதல் குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன். எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அந்த அல்லாஹ் மீது ஆணையாக! நெருப்பு விறகைச் சாப்பிடுவதை விட, நன்மைகளை அழிப்பதில் இது மிக வேகமானதாகும்!”
{ நூல்: الغيبة والنّميمة , பக்கம்: 163 }
[ جاء رجل بنميمة إلى أحد الصالحين، فقال له: جئتني بثلاث جنايات :-
الأولى: باعدت بيني وبين أخي.
الثاني: وشغلت قلبي الخالي.
الثالث: وأفسدت مكانتك في قلبي.
وقال الإمام الحسن البصري رحمه الله تعالى: [ إيّاكم والغيبة! والذي نفسي بيده لهي أسرع في الحسنات من النار في الحطب ]
{ الغيبة والنّميمة، ص – ١٦٣ }
தமிழில்
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
[ 05/07/2018 ]