கல்வியைத் தேடிப் பயணிப்பவருக்குக் கிடைக்கும் சிறப்பு இவருக்கும் உண்டு!
“யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் பயணிக்கின்றாரோ அவருக்கு அதன் மூலம் சுவர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்” என நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் – 5231)
இந்த நபிமொழிக்கு, அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:-
“மார்க்க விளக்கச் சட்டம் ஒன்றைப் பெறுவதற்காக ஒருவர் புத்தகங்களை வாசித்து மீட்டிக்கொண்டிருந்தால், அவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் பயணித்தவராகவே இருப்பார்; அப்போது அவர் தனது கதிரையில் உட்கார்ந்தவராக இருந்திருந்தாலும் சரியே!. இவ்வாறே, கற்பதற்காக ஒருவர் ஆசிரியரொருவரிடம் இருந்தாலும் கல்வியைத் தேடி ஒரு பாதையில் பயணித்தவராகவே அவரும் இருப்பார்; கீழே அமர்ந்திருந்தவராக (அப்போது) அவர் இருந்தாலும் சரியே!.
எனவே, கல்வியைத் தேடி பாதையில் பயணித்தல் என்பது இரு வகைப்படும்:
01) பாதங்களால் நடந்து சென்று பயணித்தல் என்று நாடப்படுகின்ற பாதை.
02) கல்வியைப் பெறுவதற்குக் கொண்டு சேர்க்கின்ற வழிமுறையே நோக்கம் என்று நாடப்படுகின்ற பாதை; (இந்நோக்கத்தை அடைந்து கொள்ள) அவன் உட்கார்ந்தவனாக இருந்திருந்தாலும் சரியே!”
{ நூல்: ‘ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்’, 05/434 }
عن أبي هريرة رضي الله عنه قال، قال رسول الله صلّى الله عليه وسلم: { من سلك طريقا يلتمس فيه علما سهّل الله له به طريقا إلى الجنة } (مسلم – ٥٢٣١)
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى في شرح هذا الحديث: [ فالّذي يراجع الكتب للعثور على حكم مسألة شرعية وإن كان جالسا على كرسيه فإنه قد سلك طريقا يلتمس فيه علما، ومن جلس إلى شيخ يتعلم منه فإنه قد سلك طريقا يلتمس فيه علما ولو كان جالسا!
فسلوك الطريق ينقسم إلى قسمين:
الأول: يراد به الطريق الذي تقرعه الأقدام.
الثاني: يراد به الطريق الذي يتوصل به إلى العلم وإن كان جالسا ]
{ شرح رياض الصالحين، ٥/٤٣٤ }
தமிழில்…
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)