பீ.ஜே ஆதரவா? பச்சை சிக்னல் காட்டுவோம் – தமிழ் தவ்ஹீத் தஃவாக் களம் 1990- 2000 வரை இப்படித்தான் காணப்பட்டது
தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையிலும் சரி பீ.ஜே என்ற தனிமனிதன் தவ்ஹீத் மக்கள் மனங்களில் இடம்படித்ததன் காரணமாக இந்த மனோதிலையில்தான் மௌலவிகள், பொதுமக்கள் அனைவரும் நடந்து கொண்டனர்.
காரணங்கள்
?வசீகரமான , கவர்ச்சிகரமான , அனைத்து மக்களும் விளங்கும் வகையில் அமைந்த பேச்சு.
?எழுத்துக்கள்,
?விவாதத் திறமை,
?எளிமை,
இன்னோரென்ன…
பீ ஜே எதிர்ப்பு கருத்துக்கள்
தவ்ஹீத் ஜமாத் மௌலவிகளில் கணிசமான தொகையினர் 1990 களிலேயே ஆட்டு மந்தைகள் என்றால் மிகையாகாது.
அந்த நிலை இப்போதும் ஒரு சாராரிடம் காணப்படுவதறாலேயே பீ.ஜே யின் வழிகேடுகள் வாழ்கின்றன.
இருந்தாலும் எதிர் காலத்தில் பீ.ஜே தடம் புரளலாம் என மர்ஹூம் டாக்டர் நுஃபார் பாரூக் (ரஹ்) அவர்கள் எதிர்வு கூறி இருந்தார்கள் . அது இப்போது நடக்கின்றது.
அவர்கள் இந்த நாட்டில் சிறந்த அறிஞர்களில் ஒருவர். முறையான ஷயீஆக் கல்வி கற்றவர்களில் அவரும் ஒருவர். பண்பானவர், ஆழமான அறிவுள்ள ஒரு பெருந்தகை என்பதை அவரது உரைகள் நமக்கு கூறும் பாடங்களாகும்.
பீ.ஜே. لحم الخنزير பன்றியின் மாமிச சர்ச்சை, மற்றும் أبابيلஅபாபீல் பறவைகள் அணுகுண்டுகள்தாம் போன்ற கருத்துக்களை வெளியிட்ட போது பீ.ஜே. பிற்காலத்தில் முஃதஸிலா, கவாரிஜிய சிந்தனைகளைப் பிரதிபலிப்பார் என டொக்டர் நுஃபார் (ரஹ்) அவர்கள் கூறியதன் காரணமாக அவருக்கு திஹாரி போன்ற இடங்களில் அவரை மார்க்க உரைகள் நடத்த பீ.ஜே வின் தக்லீத் பக்கர்கள் இடம் அளிக்க வில்லை என்றால் தவ்ஹீத் ஜமாத் மௌலவிகள், பொதுமக்கள் அனைவரும் அப்போதே தக்லீத் வாதிகளாக மாறி இருப்பது புலனாகும்.
டொக்டர் நுஃபார் அவர்களின் கருத்தை கொழும்பு கமால் பிரதர் (ஹிதாயா) குழு சரி கண்டது.
பீ.ஜே அஸ்மா ஸிஃபாத் ஹதீஸில் சொன்ன விளக்கத்தைக் காரணமாக வைத்து அவரை அவர்கள் சாதாரண ஒரு பேச்சாளர் தரத்தில் பார்த்தோடு அகீதாவில் வழிகெட்டவர்களில் வருவராகவும் பார்த்தனர். நானும் அவ்வாறே.
இருப்பினும் பீ.ஜே. பக்தி காரணமாக மக்களிடம் அது அவ்வளவாக எடுபடவில்லை.
தனி வழி தேடிய பீ.ஜே.
மக்கள் தனக்குப் பின்னால் வருவார்கள் என்பதை பீ.ஜே. நன்கு விளங்கி வைத்திருந்தார்.
அரபு நாடுகளில் தனக்கு காணப்படும் அபரிமிதமான செல்வாக்கைப் பயன்படுத்தி இவ்வளவு காலமும் அந்நஜாத், அல்முபீன், அல்ஜன்னத், சமுதாய ஒற்றுமை போன்ற பத்திரிக்கைகள் மற்றும் அவை சார்ந்த அமைப்புக்களோடு கைகோர்த்தும் பிரிந்தும் பயணித்த நாம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற புதிய தவ்ஹீத் அமைப்பை உருவாக்கி பயணிக்க பீ.ஜே முடிவு செய்தார்.
அதன் விளைவாக தான் அப்போது அங்கம் வகித்த த.மு.மு.க என்ற சமுதாய அமைப்புக்கு ஆப்படித்தார்.
இல்லாத பொல்லாத பொய்களை எல்லாம் கூறி அந்த அமைப்பில் இருந்து தனது ஆதரவாளர்கள் பலயோடு வெளியேறினார்.
இந்தக் கட்டத்தில் பாக்கர், மற்றும் பலர் பீ.ஜே யின் விளம்பரப் பலகைகளாக மாறினர்.
பாக்கர் பீ.ஜே. ஒரு நவீன முஜத்தித் என்று பேசும் அளவு முத்திய பீ.ஜே. பக்தராக விளங்கினார்.
அவர் தனது உயிரைப் பணயம் வைத்து பீ.ஜே. பின்னால் கெமெரோவோடு அலைந்து திரிவார்.
இறுதியில் அவர் விபச்சாரம் செய்யாமலே பீ ஜே.வால் விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டு விலக்கப்பட்டார். அவர் INTJ என்ற ஒரு புதிய ஜமாத்தை தொடங்கினார். இருப்பினும் கொள்கை மாறவில்லை.
மௌலவிளான ஹாமித் பக்ரி, சைபுல்லா ஹாஜா, ரிஃபாயீ, அப்பாஸ் அலி போன்ற அறிஞர்கள் பீ.ஜே ஜமாத்தில் இருந்து பிரிந்தவர்களே.
இவர்களில் தம்பி அப்பாஸ் அலி மட்டும் கொள்கை பிழை என்று அறிந்து கேள்விகள் கேட்டதால் பீ.ஜே வின் அடியாட்களால் கேவலப்படுத்தப்பட்டு வெளியே வந்தவர்.
அல்லாஹ் அவரையும் இலங்கை முஜாஹித் ரஸீனையும் மிகவும் கண்ணியமாக இன்று வைத்துள்ளான்.الحمد لله
இதன் மூலம் பீ.ஜே என்ற தனிக்காட்டு ராஜாவை நீங்கள் மதிக்க வில்லையானால் பாலியல், பண மோசடி என்ற பழைய குற்றச்சாட்டுகளோடு புதிதாக தடம் புரழ்தல், கோடிக்கணக்கில் கொள்ளை, பழிவாங்குதல் போன்ற பல பொய்க் குற்றச்சாட்டுகளைச் சொல்லி மக்களை தம்பக்கம் வைத்துக் கொள்ள தன்னை அழித்துக் கொள்வார் பீ.ஜே. அதற்கு தம்பிகள் சிலர் தயார் நிலையில் இருப்பது இயல்பானதே!
2004 ல் பீ.ஜே SLTJ என்ற புதிய அமைப்பைத் தொடங்கும் முன்னர் என்ன நிலை?
1948 ம் ஆண்டு முதல் இலங்கை மண்ணில் தவ்ஹீத் பிரச்சாரம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது இலங்கை மக்கள் எல்லோருக்கும் தெரியும்.
அல்லாமா அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்கள் பரகஹதெனிய, தல்கஸ்பிட்டி, பாணகமுவ, கல்முனை, மன்னார்/ கரடிக்குளி போன்ற பல பிரதேசங்களில் அன்ஸாருஸ் ஸுன்னா என்ற பெயரில் பல கிளைகளையும் நிறுவி இருந்தார்கள். அந்த அமைப்பை மதிப்புக்குரிய அபூபக்கர் சித்தீக் மதனி அவர்கள் கையில் எடுத்து இதுகால வரை அதனை அல்லாஹ்வின் உதவியோடு கொண்டு செல்கின்றார்கள்.الحمد لله
இலங்கையில் பீ.ஜே. அறிமுகம்
1991ம் ஆண்டு பீ.ஜே வை அன்ஸாருஸ் ஸுன்னா அறிமுகம் செய்ததோடு பீ.ஜே யும் தனது உறவை அவர்களோடு நல்ல முறையில் பேணி வந்தார்.
பீ.ஜே.யின் தர்ஜுமாவில் பிழைகள் இருப்பதாக டொக்டர் முபாரக் ஸலஃபி மதனி எப்போது அல்ஹிதாயாவில் ஆடியோ பேசினாரோ அப்போதிருந்தே பீ.ஜே பழிவாங்க ஆரம்பித்து விட்டார்.
அவரது பக்தர்களும் தமது பயணத்தை திசை மாற்றிப் பயணிக்க முடிவு செய்து விட்டனர்.
இந்த நிலையை சரியாக அறிந்து கொண்ட பீ.ஜே. தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். அதுதான் புதிய ஒரு அமைப்புத் தொடங்குவதாகும்.
2004 ல் பீ.ஜே. தொடக்கிய SLTJ
இது சுனாமி ஆண்டு . இந்த ஆண்டு பீ.ஜே பாக்கரோடு இலங்கை வந்தார்.
இலங்கையில் பல இடங்களிலும் பிரச்சாரம் செய்து, இறுதியாக
மல்லிகாராமைப் பள்ளியில் SLTJ என்ற புதிய அமைப்பைத் தொடங்கி தவ்ஹீத் சமூகத்தில் பிளவை உண்டு பண்ணினார். அது சில காலம் நடக்கின்றது.
இலங்கை தவ்ஹீத் மக்கள்
பரகஹதெனியவுடன் பயணிப்பது சிறந்த தெரிவாக இருந்தும் அண்ணன் தொடங்கினால் நன்றாகச் செய்வார்தானே என்ற எண்ணத்தில் ஒரு சில தறுதலைகள் சேர்ந்து பிரச்சாரம் செய்தன. அது இலங்கை போன்ற நாகரீகமான சமூகத்தில் எடுபடவில்லை.
அதன் முக்கிய பிரச்சாரகர்களில் ஒருவரான முஜாஹித் பீ.ஜே வின் சூனியம், ஸகாத் போன்ற கருத்துக்களை எதிர்ப்பதாகக் கூறி அவர் அந்த அமைப்பில் இருந்து பெண்பலி சுமத்தல் சதி மூலம் பீ. ஜே. வால் அதிரடியாக விலக்கப்பட்டார்.
காலப் போக்கில் பீ.ஜே. தொடங்கிய SLTJ காலாவதியானது.
மீண்டும் புத்துயிர் பெறும் SLTJ
பீ.ஜே. யின் கருத்துக்களைப் பரப்பும் கொள்கை பரப்பு ஊடகங்களாக தமிழ் நாட்டில் படித்துக் கொண்டிருந்த இலங்கை மாணவர்கள் சிலரை பீ.ஜே நாடி பிடித்துப் பார்த்தே அனுப்பினார்.
அவர்கள் உண்மையில் அறிவால், பண்பால் உயர்ந்தவர்கள் இல்லை என்பதை தம்பி குதுபுல் அக்தாபின் அரபிப் புலமை, தக்லீத் விவாதம், ஷைக் பர்ஸான் குழு விவாதங்கள் தெளிவான சாட்சியங்களாகும்.
?பில்டப் ஜமாத்
இஸ்லாமிய வரலாற்றில் பல குழுக்கள் வந்து மறைந்துள்ளன.
அவைகளில் வழிகெட்ட ஷீஆக்கள், சூஃபிகள், கப்று வணக்க வழிபாடு செய்யும் குழுக்கள் போன்ற அமைப்புக்களே மக்களைப் பொய் சொல்லி தம் பக்கம் ஈர்ப்பதைக் காணமுடிகின்றது.
ஆனால் குர்ஆன், சுன்னா பேசும் ஜமாத் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதில்லை.
நபித்தோழர்களின் வழியில் பயணிக்கும் முஸ்லிம்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து தமது ஜமாத்திற்கு ஆள் சேர்க்க மாட்டார்கள்.
இவர்கள் ஓவராகவே தம்மைப் பற்றி பீற்றிக் கொள்வார்கள், தஃவாவிற்காக பொய் சொல்லலாம் என்ற அண்ணனின் தவறான விதியின் அடிப்படையில் பொய் மூட்டைகளை சமூகத்தில் சரமாரியாக அவிழ்த்து விடுவார்கள்.
?மக்களை மந்தைகளாக்க போடப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள்.
? அடுத்தவர்கள் மீதும், அடுத்த ஜமாத்கள் மீதும் அடுக்கடுகான பல பொய்களை அவிழ்த்தல்.
உதாரணங்கள்.
(1) நாம் மாத்திரமே குர்ஆன் ஹதீஸுக்கு 100% உடன்பாடான தூய ஜமாத்.
இது பீ.ஜே. தனது ஹதீஸ் மறுப்பு மற்றும் வழிகெட்ட தனது கொள்கையை பாமர மக்கள் மத்தியில் பதியவைக்க மேற்கொண்ட மிகப் பெரும் சதியாகும்.
(2) மற்றவர்கள் ஸலஃபிக் கொள்கை, நபித்தோழர்களைப் பின்பற்றுவோர்.
?நாமே அசலான ஜமாத், சுவனத்து ஜமாத்.
இவர் தனது வசதிக்காக நபித்தோழர்களை சார்ந்து கொள்வார். அது அவரது பக்தர்களுக்குப் புரியாது
உதாரணமாக உமர் அலியோடு நடந்த பைஅத் விவாதம். இதில் பாத்திமா (ரழி) புகாரியில் அவர்கள் பைஅத் செய்யாமல் மரணித்த செய்தியை ஆதாரமாகக் காட்டினார். அதாவது தான் பைஅத் செய்யாவிட்டாலும் ஒரு முஸ்லிம் என நிரூபிக்க ஒரு நபித்தோழியின் நடைமுறை ஆதாரமாக உதவலாம். பிறருக்கு அது ஆகவே ஆகாது.
?இலங்கையில் கேள்வி பதில் ஒன்றில் இப்னு உமர் அவர்கள் தாடி வெட்டினார்கள். எனவே அழகுக்காக தாடியைக் குறைக்கலாம்.
(3) காதியானிகள் விவாதத்தில் ஸஸீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்பட மாட்டாது.
விவாதம் முடிந்து சில ஆண்டுகளில் ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் பீ.ஜ. காதியானிகவும், முஃதஸிலா, கவாரிஜ் ஆகவும் மாறிய அதிசயம்.
(4) வெளிநாட்டுப் பணம் ஹராம்.
அதாவது நாம் அரபிகளிடம் பணம் எடுத்து தஃவா செய்மமாட்டோம். வெளிப்படையில்.
உள்ளால் நாம் குர்ஆன் ஹதீஸ் மற்றும் ஸலஃபிக் கொள்கையில் இருப்பவர்கள் எனக் கடிதம் எழுதி வசூல் செய்வது.
தொண்டியாரின் இலங்கைத் தொண்டர் படை சிங்கள தர்ஜுமாவிற்காகவும் இன்னும் பல பணிகளுக்காகவும் குஃபைலி என்ற சவூதி அரபி ஒருவரிடம் பல லெட்சம் ரியால்களைப் பெற்று வண்டி ஓட்டினர்.
பின்னர் தர்ஜுமா பணம் மாத்திரம் அவர்களிடம் இருந்து பறித்து எடுக்கப்பட்டது.
இப்படிப் பல அதிசயங்கள் உள்ளன .
இப்போது என்ன நிலை?
—
இப்போது தான் தொடங்கி வைத்த ஜமாத் தன்னை வெளியில் போட்டது பழிவாங்கலாகும். நான் பாலியல் மற்றும் ஏனைய குற்றங்கள் செய்யாத அப்பாவி.
தன்னை ஜமாத் விசாரிக்காமல் பழிவாங்கி விட்டது. கொள்கை மாறிவிட்டது. பலகோடிகள் கொள்ளை , ஆட்டு மந்தைகள் போன்ற வார்த்தைகள் மூலம் மீண்டும் ஒரு ஜமாத் தொடங்க முடிவில்லாத முடிவு செய்து பிரச்சாரம் செயயத் தொடங்கி விட்டார்.
அதனால் பீ.ஜே க்காவே வாழ்வோம், சாகுவோம் என்ற பைத்தியம் பிடித்து அலைபவர்கள் நிச்சயமாக பீ.ஜே வை தூயவராகக் காணுவதையும் அவர் பின்னால் செம்மறி ஆடுகள் போன்று செல்வதையும் யாராலும் தடுக்க முடியாது.
பதிவு.
✍
ரிஸ்வான் மதனி
03/08/2018