புதிய பாதையில் இலட்சிய பயணம் என்ற தலைப்பின் கீழ் நீங்கள் நேற்று ஒரு இயக்கத்தை உருவாக்கி கொள்கை பிரகடனம் செய்து நிர்வாக கட்டமைப்பையும் உருவாக்கி விட்டீர்கள் .
TNTJ யில் இருந்து பிரிந்து ஒரு புதுப்பாதையை தெரிவு செய்துள்ள நீங்கள் புதிய பாதையின் தேவைப்பாடு என்ன? என்பதை மக்களுக்கு உணர்த்தும் போது TNTJ நிர்வாகரீதியில் விட்ட தவறுகளையும், உங்களுடைய விடயத்தில் நடந்துகொண்ட மிக கீழ்தரமான முறையையும், மார்க்க விடயங்களில் விட்ட ஒரு சில தவறுகளையும் சுற்றிக்காண்பித்து பேசியுள்ளீர்கள் வரவேற்க்கதக்க விடயம்.
உங்களின் புதிய பாதையில் இலட்சிய பயணத்தின் (YMJ) அடிப்படை கொள்கை நீங்கள் TNTJ யில் இருக்கும் போது போதித்த அதே ஹதீஸ் மறுப்புக் கொள்கையாக இருக்குமேயானால் நிச்சயமாக உங்களின் இலட்சிய பயணம் வீணானது.
காரணம் ஒரு முஃமினுடைய இலக்கு மறுமை வெற்றியாகும் மாறுமை வெற்றி என்பது நபி ஸல் அவர்களின் வாழ்கை வழிமுறைகளை வாழ்கை நெறியாக கொள்வோருக்கு மட்டுமே உண்டு.
நபியவர்கள் கூறினார்கள் ‘யூதர்கள் 71 கூட்டங்களாகப் பிரிந்தனர், கிறிஸ்தவர்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தனர், எனது சமூகம் 73 கூட்டங்களாகப் பிரியும், அதில் அனைத்தும் நரகில் நுழையும், ஒன்றைத் தவிர’ என நபியவர்கள் கூறினார்கள், அந்த ஒரு கூட்டம் யாரென வினவப்பட்ட போது, ‘நானும் எனது தோழர்களும் இன்றைய தினம் இருப்பதைப் போன்று இருப்பவர்கள்’ என்றார்கள். (இன்னும் சில அறிவிப்புக்களில் வார்த்தைகள் வித்தியாசப்பட்டு வருகின்றது) ‘. (பார்க்க : அபூதாவூத் : 4596, 4597, திர்மிதி : 2640,2641 இப்னு மாஜா : 3992, தபரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத் : 4886, ஹாகிம் : 444).
நபி ஸல் அவர்களும் நபித்தோழர்களும் இருந்த கொள்கை பீஜே (TNTJ)யின் மூலம் அறிமுகமான ஹதீஸ் மறுப்பு கொள்கை கிடையாது அது போல் அந்த நபித்தோழர்கள் மனோ இச்சையை வஹீயில் புகுத்த வில்லை அவர்களுக்கு விளக்கம் தெரியாத வசனங்களை மறுத்துரைக்க வில்லை ” கேட்டோம் ஈமான் கொண்டோம் கட்டுப்பட்டோம்” என்பதுவே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது இதே நிலைப்பாடு யாரிடமெல்லாம் உள்ளதோ அவர்களே இலட்சிய பயணத்தின் வெற்றியாளர்கள்.
அந்த ஒரு கூட்டத்தாரை தவிர உள்ள அனைத்து கூட்டங்களும் நரகம் செல்லும் பிரிவுகளே எனவே உங்களின் புது அமைப்பு என்ன கொள்கையில் உள்ளது என்பதை மீளாய்வுக்கு உட்படுத்துங்கள்.
TNTJ யின் கொள்கையானது யாருடைய வார்த்தைகளை வேத வாக்காக கொண்டு தொகுக்கப்பட்டது என்பதை எம்மை விட அறிந்தவர்கள் நீங்கள். அந்த தனிமனித வழிபாட்டை விட்டு மீண்டுள்ளதாக சொல்லும் நீங்கள் அந்த கொள்கையை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் கொள்கை மாறாத வரை உங்கள் பாதை நேரானபாதையோ புதிய பாதையோ கிடையாது. TNTJ யின் கொள்கை கொண்ட நிர்வாக அமைப்பில்
முரண்பட்ட ஒரு அமைப்பாகவே நோக்கப்படுவீர்கள்.
TNTJ யை போன்ற தூய்மயான அமைப்பு கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருந்த உங்களுக்கு அல்லாஹ் செய்த அருள் என்ன தெரியுமா..? அது போன்ற மோசமான அமைப்பு கிடையாது இப்படியுமா ஒரு இஸ்லாமிய பேரியிக்கம் என்று தன்னை அடையாளபடுத்தி கொண்டுள்ள அமைப்பு நடந்து கொள்ளும்.? என நினைத்து காரித்துப்பம் அளவுக்கு அல்லாஹ் அவர்களின் மோசடிகளை உங்கள் கண்முன்னே அம்பலபடுத்தி காட்டியமை தான் அதன் மூலம் நீங்கள் கண்விழித்து கொண்டீர்கள்.
TNTJ உறுப்பினர்களை பொறுத்தவரை ஆன்லைன் பீஜே, TNTJ அறிஞர்களின் உரைகள், புத்தகங்கள், கட்டுரைகள் என்றே அறிவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். அதற்கு காரணம் தம் அமைப்பே சத்திய கொள்கையில் உள்ள அமைப்பு, தமது ஜமாஅத்தில் உள்ள அறிஞர்கள் மாத்திரமே குர்ஆன் சுன்னா முறைப்படி நடக்கும் ஆய்வுத் திறமை மிக்க அறிஞர்கள், நீதி நேர்மை உடையவர்கள், பொய் பேசாதவர்கள், மோசடி செய்யாதவர்கள் என்ற நம்பிக்கையாகும்.
இப்படியான நிலையில் சிக்கி உள்ளோரை பொறுத்த மட்டில் அவர்களால் ஒருபோதும் அந்த அமைப்பு மார்க்க அடிப்படையில் விடும் தவறுகளை அறிந்து கொள்வது சிரமமான காரியமாகும் என்றாலும் அல்லாஹ் உங்களுக்கு இவர்களின் நீதி நேர்மை பற்றிய விடயங்களை மற்றுமின்றி கொள்கை குழப்பங்களையும் அறிந்து கொள்ள ஏற்படுத்தி தந்துள்ள வாய்ப்பே இன்றைய பிரச்சினைகளாகும்.
நிர்வாக விவகாரங்களில் பக்க சார்பாகவும் நீதி, நேர்மை அற்றவர்களாகவும் திகழக்கூடியவர்கள், பகிரங்கமாக பொய் பேசி முபாஹலா வரை இறையச்சமின்றி பொய் சத்தியம் செய்ய குடும்பத்தோடு துணிச்சலாக அடுத்தவணை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வந்தவர்கள் மார்க்க விடயங்களில் தூய்மையாக நடந்திருப்பார்கள் என்பதற்கு என்ன சான்று..? இப்படியாபட்டவர்களின் ஆய்வுகளை எப்படி நீங்கள் நம்பலாம்.?
தனக்கு பிடிக்காதவர்களை மட்டம் தட்ட பொய் பேசலாம் இன்னும் சூழ்ச்சி செய்யலாம் என்பதற்கு போர் களத்தில் தந்திரம் செய்வதை சான்றாக கொண்டவர் ஆய்வுகளில் நீதமாக நடந்திருக்க வாய்புண்டா.?
அடுத்தவனின் மானம் புனிதமானது என்று தெளிவாக வஹி கூறும் கூற்றை தூக்கி கடாசி விட்டு குர்ஆன் ஹதீஸை தவறான முறையில் பயன்படுத்தி அடுத்தவர்களின் மானத்தை போக்கியவர்களின் ஆய்வுகளை எப்படி நம்பலாம்..? சூனியம், கண்ணேரு, போன்ற ஹதீஸ்களை இவர்கள் முறையாக ஆய்வு செய்திருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.?
பீஜே நான்கு சாட்சியம் பற்றி கூரிய தகவல் மற்றும் TNTJ பிறை விடயத்தில் இம்முறை நடந்து கொண்ட விதம் , இன்னும் விவாதங்களில் மறுக்கப்பட்ட மொழிகள் போன்ற பல விடயங்கள் இவர்கள் மார்க்க விடயங்களிலும் மோசடி செய்கின்றவர்கள் என்பதை அறிந்து கொள்ள போதுமான சான்று கிடையாதா?
இப்படி பல கேள்விகளை அடுக்கிகொண்டே போகலாம் விரிவஞ்சி தவிர்கிறேன்.
அல்லாஹ்வின் ஏற்பாட்டில் இந்த மார்க்கம் நீதி, நேர்மையுடை உண்மையாளர்கள் வழியே பாதுகாக்கபட்டு எம்மை வந்தடைந்துள்ளது இந்த மார்கத்தை பாதுகாத்து தந்தவர்கள் பொய்யர்களோ அநியாயகாரர்களோ அல்ல.
உலக விடயங்களுடன் தொடர்புடைய சாதாரண ஒரு தகவலை நம்பகத் தன்மையுடன் அறிய நீதி, நேர்மை, உடைய உண்மையளர்களை தேடிச் செல்லும் நாம் 1400 வருடங்களை கடந்து வரும் மார்க்கத்தை கற்றறிய நீதி, நேர்மை, உடையை அறிஞர்களை தேடாது இருப்பது தான் எம்மில் பலர் விட்டுள்ள மாபெரும் தவறாகும்.
எனவே உங்கள் புதிய பாதையிலான இலட்சிய பயணம் வெற்றியடைய வேண்டும் எனில் மார்கத்தை உண்மையாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் பொய்யர்களிடம் நீங்கள் கற்ற சந்தேகத்துக்கு இடம்பாடானi பிழையான கொள்கையை மீளாய்வுக்கு உட்படுத்துங்கள்.
உங்களுக்கு நிகழ்ந்த அநீதியுடன் தொடர்பான விடயங்களை பொறுத்த மட்டில் அவை உங்களுக்கு மறுமையில் எந்த இழிவுகளையும் தராது அநீதி இழைத்தோர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்கள் தான் தண்டிக்கப் படுவார்கள் ஆனால் மார்க்க விவகாரங்கள் அப்படிப்பட்டது கிடையாது.
நாம் ஏமாற்றபடும் விடயங்களில் மிகப்பெரிய ஏமாற்றம் மார்கத்தின் பெயரால் ஏமாற்றப்படும் ஏமாற்றமாகும் அவற்றுக்கு மறுமையில் நாம் தான் பதில் சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் எமது அமைப்பு எம்மை பாதுகாக்க வராது எனவே கொள்கை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் .
சகோதரர் பீஜே (TNTJ) அவர்கள் வஹியை போதிக்கும் விடயத்தில் மனோ இச்சையையும் , தனது சுய சிந்தனைகளையும் வஹியினுல் நுழைத்து மார்க்க அறிவில் மிகப்பெரும் மோசடி வேலைகளை செய்துள்ளார் இன்ஷா அல்லாஹ் கொள்கையை மீளாய்வு செய்தால் அவற்றை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
எதிர்தரப்பு பார்த்தீர்களா..? இவர்கள் கொள்கை மாறி வழி தவறி விட்டார்கள் என்று விமர்சனம் செய்வார்கள் என்ற
எண்ணத்தை விட்டு விட்டு படைத்தவனின் திரு பொறுத்தத்தை பெற கொள்கையை மீள்பரிசீலனை செய்ய முன்வாருங்கள்
கொள்கையை மீளாய்வு செய்யாத வரை “புதிய பாதையில் இலட்சிய பயணம் ” என்ற உங்கள் கோஷம் போலியான கோஷமாகும் சீர்திருத்த பணியில் முதலிடம் இஸ்லாமிய அகீதாவுக்கே வழங்கப்பட வேண்டும். அகீதாவில் தெளிவற்றவர்கள் மக்களை வழி நடாத்த தகுதியற்றவர்களாவார்கள். அது மற்றுமின்றி PJ கொள்கையில் இருந்து கொண்டு உங்கள் அமைப்பு சாராத முஸ்லிம் சகோதரர்களுடன் இஸ்லாம் கூறும் உறவை பேணவும் முடியாது காரணம் அல்வலா வல்பரா என்ற அகீதா பகுதியை முஸ்லிம்களுக்கு எதிராகவே அக்கொள்கை பயன்படுத்த சொல்கின்றது.
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே.! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.
அல்குர்ஆன் 3:8
✍நட்புடன்
இன்திகாப் உமரீ
இலங்கை
10/08/2018