சொற்ப தேவைக்காக “டெப்” இனை (TAP) வேகமாகத் திறந்துவிட்டு, நீரை வீணாக்குவோரைப் பார்த்தால் அவர்களின் கவனயீனத்தின்மீது கவலை ஏற்படுகின்றது. எமது வெற்றுக் கண்களுக்கு நீர் அதிகம் இருப்பதுபோல் தோன்றினாலும், உயிரினங்களின் நீர்த்தேவை அதைவிட அதிகமாக இருப்பதை உணர்ந்தாலே நீர் ஒரு பொதுச்சொத்து என்ற உணர்வு அனைவருக்குள்ளும் ஏற்படும்.
சமைப்பது, உடுப்பு துவைப்பது, குழந்தைகளை குளிக்க வைப்பது என்று நீருடன் கூடுதல் தொடர்பு படுவது பெண்களே. தண்ணீர் இறைவனின் அருட்கொடைகளிலொன்று. என்பதைப் பிள்ளைகளுக்கும் தெளிவுபடுத்துவதுடன், அது விரயமாகாதவாறான நுணுக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
கால் இஞ்சிக் கனத்திலும் குறைவாக நீரை ஓடவிட்டு அதில் சிக்கனமாக எமது தேவைகளை நிறைவேற்றலாம். அதற்கு “டெப்” இனைத் திறக்க ஆரம்பிக்கும்போதே பொறுமையும் அவசியப்படுகின்றது.
எமது உயிர்நாடியான நீருக்காக நாம் செய்யும் சின்னச் சின்ன பொறுமைகள் நாளை எமக்குப் பெருமைகளைத் தரலாம். அதற்கு பங்களிப்புச் செய்தமைக்காக உள்ளம் குளிரலாம்.
ஓடும் நதியில் உளூச் செய்தாலும், அதனை விரயம் செய்யாதீர்கள்” என அண்ணலார் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
பர்சானா றியாஸ்