அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ்
மனிதனுடைய இயற்கையான இயல்பு, ஒருவரோடு ஒருவர் நட்பு, வாஞ்சைகொண்டு பழகுவதாகவே அமைந்துள்ளது. எந்த மனிதனும் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை. மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். அவனால் தனது தேவைகளைத் தனித்து நின்று நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்வதன் மூலம் மனிதனுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
அந்தவகையில் நட்பு என்பது ஒரு மகத்தான உறவு. வாழ்வில் நாம் நலிவடையும் காலங்களில் எமக்குக் கை கொடுக்கும் உறவு ஒன்று இருக்குமாயின், உண்மையில் நட்பு ஒன்றேதான்.
மனிதன் எப்போதும் தனது உள்ளத்து உணர்வுகளைக் கொட்டித் தீர்த்திட ஒரு துணையையும் தனக்கு ஆபத்தில் துணை நிற்கக் கூடிய நண்பர்களையும் தேடிய வண்ணமே உள்ளான். எனவே, நட்பு மனித வாழ்வில் மிக முக்கிய அங்கமாகவும் பலமாகவும் அமைகிறது. நல்ல நட்பும் நண்பனும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. கட்டுரையை முழுமையாப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.