Featured Posts

மானம் இழந்திருத்தல்

அதாவது மனைவியைக் கூட்டிக் கொடுத்தல். இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாவது: ‘மூன்று பேருக்கு அல்லாஹ் சுவனத்தை தடை செய்திருக்கிறான். அவர்கள், மதுவுக்கு அடிமையானவன், பெற்றோரை நிந்திப்பவன், தன் மனைவியிடம் பிறர் மானக்கேடாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளும் அளவு மானம் இழந்தவன் ஆகியோராகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அஹ்மத்)

நமது காலத்தில் இதற்கு உதாரணமாவது:

வீட்டிலுள்ள மனைவி அல்லது மகளின் செயல்களைக் கண்டு கொள்ளாதிருத்தல். அவர்கள் அந்நிய ஆடவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பரஸ்பரம் காதல் உரையாடலைப் பகிர்ந்து கொள்கின்றனர். அதுபோல தம் வீட்டுப் பெண் ஒரு அந்நிய ஆணுடன் தனித்திருப்பதை அனுமதிப்பது, மேலும் வீட்டு டிரைவர் போன்ற அந்நிய ஆடவருடன் தனியாக அவளைப் பயணம் செய்ய விடுவது, இன்னும் பர்தா இல்லாமல் அவள் வெளியேறுவதை அனுமதிப்பது, அதனால் வருவோர் போவோரின் கண்களுக்கு அவள் விருந்தாக நேரிடும். மேலும் தீமைகள் மற்றும் ஆபாசங்களைப் பரப்புகின்ற பத்திரிக்கைகளையும், சினிமா கேசட்டுகளையும் வீட்டில் நுழைய விடுவது போன்றவையாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *