Featured Posts

மக்கா-மதினா அதிவேக நவீன இரயில் திட்டம்

write.jpgமக்கா-மதினா இரயில் திட்டம்மக்கா-மதினா அதிவேக இரயில் போக்குவரத்து திட்டத்திற்கு சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணங்களில் புதிய வசதியை ஏற்படுத்தித் தரும் இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 20 பில்லியன் சவுதி ரியால் (சுமார் 5.33 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்.

இப்புதிய திட்டம் தரும் வசதியின்படி, மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதி நவீன இரயிலில், 30 நிமிடத்தில் மக்காவிலிருந்து ஜித்தாவிற்கும், 2 மணிநேரத்தில் மதினாவிற்கும் செல்ல முடியும் என்று சவுதி அரேபியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் டாக்டர் ஜபாரா அல் ஸராய்ஸ்ரி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 கி.மீ புதிய அதிநவீன மின்சார இரயில் பாதை மக்கா-ஜித்தா-மதினாவிற்கு இடையே போடப்படும். இப்புதிய இரயில்பாதை அதிநவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த தகவல் தொடர்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். சவுதி அரேபியாவின் நவீன போக்குவரத்தை இத்திட்டம் மேலும் அதிகப்படுத்தும் என்பதாகத் தெரிகிறது.

இரயில் பாதை அமையும் இடங்களுக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களை மதிப்பிட பிரத்யேக கமிட்டி அமைக்கப்பட்டு உரிய தொகையை நிலத்தின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஜித்தா இஸ்லாமிய துறைமுகம், மன்னர் அப்துல் அஜீஸ் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் ராபிக் நகரில் உள்ள மன்னர் அப்துல்லாஹ் தொழிற்நுட்பப் பூங்கா ஆகிய இடங்களில் இதற்கான இரயில் நிலையங்கள் அமையும்.

அல்-ராஜி குழுமம், சவுதி பின்லாடின் குழுமம், சவுதி ஓஜர் குழுமம், சவுதி ஜப்பானிஸ் குழுமம், அல்ஷோலாஹ் குழுமம் மற்றும் OHL பன்னாட்டு குழுமம் ஆகிய ஆறு பெரிய குழுமங்கள் இத்திட்டத்திற்கான டென்டர்களில் போட்டியிடும் என்று தெரிகிறது.

இத்திட்டத்தின் கீழ் குறைந்த நேரத்தில் நவீன வசதியுடன் பாதுகாப்பான முறையில் சுமார் வருடத்திற்கு 10 மில்லியன் உம்ரா மற்றும் ஹஜ் பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தினால் 2010-ல் சுமார் 500 மில்லியன் சவுதி ரியால்கள் ஆண்டு வருமானமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டமானது சவுதி அரேபியாவின் மிகப் பெரிய இரயில் திட்டங்களான (சுமார் 950 கி.மீ. தூரம்) ஜித்தா-ரியாத் மற்றும் (சுமார் 115 கி.மீ. தூரம்) தம்மாம்-ஜுபைல் இரயில் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

நன்றி: அரப் நியூஸ்

25 comments

  1. இன்ஷா அல்லாஹ் இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது ஹாஜிகளின் சிரமங்கள் குறையும். செலவும் நேரமும் மிச்சமாகும். ஆண்டு தோறும் பல இலட்சக்கணக்கான ஹாஜிகள் பயன்பெறுவர். புனிதப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தரும் சவூதி அரசின் செயல் திட்டங்களைப் பாராட்ட வேண்டும்.

  2. Mohamed Musthafa

    its very best plan to pilgrims especially in ramadan & haj period……my very sincere thanks to saudi government….Musthafa, makkah.

  3. good work,do fast

  4. ALHAMDULLILAH , VERY GOOD , THIS IS ALL WE PRAY, THIS IS SHOWS THAT HOW SAUDI GOVERNMENT GIVE IMPORTENS FOR HAJ AND UMRA PILGRIMS, MAY ALLAH BLESS KING ABDULLAH AND ACCEPT HIS GOOD DEEDS- AMEEN

  5. S.Mohamed Thajudeen

    Time saving and more helpful to the pilgrims.I really appreciate this project.

  6. Excellent work. may allah bless to finish this project as soon as possible.
    also allmighty allah accept King Abdullah & his team good deeds.

  7. இன்ஷா அல்லாஹ் இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது ஹாஜிகளின் சிரமங்கள் குறையும். செலவும் நேரமும் மிச்சமாகும். ஆண்டு தோறும் பல இலட்சக்கணக்கான ஹாஜிகள் பயன்பெறுவர். புனிதப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தரும் சவூதி அரசின் செயல் திட்டங்களைப் பாராட்ட வேண்டும்.

  8. Mohamed Althaf Hussain

    ALHAMDULLILAH, THIS IS A VERY GOOD PROJECT, NOT ONLY FOR PILGRIMS ITS HELPFULL, IT ALSO HELPS TO AVOID ROAD TRAFFIC ACCIDENTS, TRAFFIC CONGESTIONS, & TIME SAVING TOO . MAY GOD BLESS ALL THOSE WHO HAVE TAKEN PAIN TO MAKE THIS DREAM PROJECT COME TRUE.

  9. alhamdulillah I am realy appreciate this project to fulfilled by saudi govrnment with god grace.insha allah this project willbe able to come 2010 as early as to me. may allah reward to king and helpful him guys and definately allah will give to them prosperity life and good health and hereafter life also.

  10. This is a very Good News for Muslim Muma Thanks To ALLAH

  11. sirajudeen bin tmh guthoose

    alhamdulillaah

  12. A.R.Mohamed Rafeek,

    Insha allah…All muslims will pray for this project to saudi government and King Abdullah.

  13. Haja Mohideen,Dubai

    Alhamdulillah.,ALLAH will help for this project. We pray ever.

  14. Alhamdulillah these project will be very useful for Saudis and expatriates Allah will shower his mercy on all of US

  15. The most awaited plan. Lets pray for faster completion. All the best.

  16. Assalamu allaikum.
    Alhamdulillah. this is one of sweet news for all over the muslim world. really there are millian of Hajis suffering every year travel makkah to madina.

  17. assalamu alaikkum.
    Alhamdhulillah this project is very useful for hajis and also all of muslim people.very good project may allah help for king abdullah.

  18. Alhamdulillah

    Assalamu allaikum.
    Alhamdulillah. this is one of sweet news for all over the muslim world. really there are millian of Hajis suffering every year travel makkah to madina.

  19. அஹமது மைதீன்

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

    இன்ஷா அல்லாஹ் இத் திட்டம் மிக விரைவாக ஆரம்பிக்கப் பட்டு மிக விரைவில் முடிந்து நடை முறையில் வர எல்லாம் வல்ல அல்லாஹ் துனை புரிவானாக.

    ஆமீன்

  20. assalamu alaikkum,

    this project is very good. this is very helpfull for haajis. especially old people.

  21. الحمد لله, هذا من فضل الله ثم من جهود خادم الحرمين الشريفين الملك عبد الله , جزاهم الله خير الجزاء في الدارين

  22. الله يجزاك خيرا ياأبو متعب

  23. சவுதி அரசின் திட்டங்களை எப்போதும் விமர்சனக்கண்ணோடு பார்ப்பவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டும். இச்செய்திகளைப் பார்த்தாவது இந்நாட்டின் ஆட்ச்சியாளர்களுக்கு மேற்படி விமர்சன மன்னர்கள் துஆ செய்வார்களோ என்னவோ!

  24. أبو عبد الله

    نسأل الله أن يجزي خادم الحرمين الشريفين خير الجزاء في الدارين

  25. Alhamdulliah These is very Good Project,Please pray for complete very soon and success.
    Ameen…..

    Mohamed Shabeer
    Alcatel Lucent India Ltd, Chennai, Tamil Nadu, India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *