Featured Posts

நோயாளியைக் காணச் சென்றால்….

1414. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால்’ அல்லது ‘நோயாளி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்’ அவர்கள், ‘அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஃபாஅ இல்லா ஃபாஉக்க, ஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்” என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.)

புஹாரி : 5675 ஆயிஷா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *