Featured Posts

மதரஸாக்கள்- தீவிரவாதப் பட்டறைகளா?

வானத்துக்கு மேலே-பூமிக்கு கீழே நடப்பவைகளைப் பற்றியே மதரஸாக்களில் போதிக்கப் படுகின்றன; உலகம் பற்றியும் நிகழ்வுகள் பற்றியும் அறியும் ஆர்வம் துளியும் இவர்களுகில்லை என்று கேலியாகச் சொல்லப்பட்ட மதரஸாக்கள், சமீபகாலங்களில் மதரஸாக்களையும் அதில் பயிலும் மாணவர்களையும் தீவிரவாதத்துடனும் தீவிரவாதிகளுடனும் இணைத்து பேசப்படுகிறது.


“என்னவாயிற்று இவர்களுக்கு? காலங்காலமாக மதரஸாக்கள், இஸ்லாமியக் கல்வியை போதித்து வருவதாகத்தானே அறிந்திருந்தோம். ஏன் திடீரென்று அவை குண்டு வெடிக்கவும், தற்கொலை தாக்குதல் நடத்தவும் பயிற்சி கொடுக்கும் தீவிரவாத தொழிற்சாலையாகின?” என்று கேட்பவர்கள், மதரஸா என்றால் என்ன? அதன் பாடத்திட்டங்கள், பயன்பாடுகள் பற்ரி விளங்கிக் கொண்டால் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும் என்ற ஆவலில் சில கருத்துப் பரிமாற்றம்.

‘மதரஸா’ என்ற அரபிப் பதம், மற்ற மொழிகளில் சொல்லப்படும் பள்ளி,ஸ்கூல் ஆகியவற்றின் நேர்மொழியாக்கமே. இதர மதங்களின் அல்லது மதங்களல்லாத கல்விக்கூடங்களுக்கு எப்படி பள்ளி/School என்று அழைக்கிறோமா, அதே அர்த்தம்தான். மதரஸா என்பதற்கும் பொருந்தும்.மதரஸா (مدرسه) என்றால் “கல்விக்கூடம்” என்று பொருள். மூலம் அரபி என்றாலும் உர்தூ, பார்ஸி, துருக்கி, குர்திஸ், இந்தோநேசியன், மலேசியன் ஆகிய மொழிகளிலும் கல்விக் கூடங்களுக்கு இச்சொல் பிரயோகிக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் இதை மொழியாக்கம் செய்யும் போது பிரிட்டிஷார் “பள்ளிக்கூடம்” என்ற அர்த்தத்திலும் அமெரிக்கர்கள் “பல்கலைக் கழகம்” என்ற அர்த்ததிலும் பிரயோகிக்கின்றனர்.(பல்கலைக் கழகத்திற்கு அரபியில் ‘ஜாமிஆ’ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது)

உலக நாடுகளில் சாதாரணக் குடிமக்களுக்கு அந்தந்த அரசுகளால் கல்வி வசதியை பரவலாக வழங்க முடியாத சூழலில், மதம் சார்ந்த சேவை நிறுவனங்களும் மிஷனரிகளும் இப்பணியை இலாப நோக்கின்றி அல்லது குறைந்த செலவில் வழங்குகின்றன. இதர மதங்களின் வேதாகமப் பள்ளிகளில் எப்படி அந்தந்த மதவேதங்கள் போதிக்கப் படுகின்றனவோ, அதேபோல்தான் மதரஸாக்களில் குர்ஆன் போதிக்கப் படுகிறது.

மதரஸாக்களில் இரண்டு வகையான பாடத்திட்டங்கள் போதிக்கப் படுகின்றன. சரியான உச்சரிப்புகளுடன் முழுக் குர்ஆனையும் அரபியில் மணனம் செய்பவர்களுக்கு “ஹாபிழ்/ஹாபிஸ்” என்ற பட்டமும், குர்ஆனையும் ஹதீஸையும் பொருள் அறிந்து மணனம் செய்வதுடன் ஷரீஅத் சட்டங்களையும், விளக்க உரைகளையும், இஸ்லாமிய வரலாற்றையும் முழுமையாகக் கற்றவருக்கு “ஆலிம்/உலமா” என்ற பட்டமும் வழங்கப் படுகின்றது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி மதரஸாக்கள் நடத்தப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப கணினிப் பயிற்சி, பிறமொழிப் பயிற்சியும் வழங்கப் படுகின்றன. ஹாபிழ்/ஹாபிஸ் பட்டம் பெற 1-2 வருடங்களும் ஆலிம்/உலமா பட்டம் பெற 7-12 வருடங்களும் ஆகும். இப்பட்டம் பெற்றவர்களே பெரும்பாலும் மஸ்ஜிதுகளில் தொழுகை நடத்துவர். இவர்கள்தான் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இந்தியாவிலும் தமிழகத்திலும் மத்ரஸாக்களில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் மற்ற உலகக் கல்வி கற்க வசதி இல்லாததாலோ அல்லது நல்லொழுக்கப் பயிற்சிக்காகவோ சேர்கின்றனர். 90% மாணக்கர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்.

மற்ற கல்வி நிறுவனங்களில் அந்தந்த மத
போதனைகளுடன் தற்கால படிப்புகளையும் கற்று கொடுக்கின்றார்கள். ஆனால் மதரஸாக்களில் இஸ்லாமியக் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமையை பிற கல்விகளுக்குக் கொடுப்பதில்லை. போட்டி உலகில் முஸ்லிம்கள் பின்தங்கி இருப்பதற்கு, மதரஸாக்களின் கல்வி முறையில் உலகக் கல்வியையையும் மார்க்கக் கல்வியையும் வேறுபடுத்தி பார்த்தது மிகப்பெரும் தவறு.

உத்திரப் பிரதேசத்திலிருக்கும் இரு நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்ட தேவ்பந்தி (சமீபத்தில் இம்ரான வழக்கில் சர்ச்சைக்குறிய தீர்ப்பை வழங்கியவர்கள்) மதரஸா, இந்திய தேசிய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, ஆங்கிலம் கற்பதை ‘ஹராம்’ என்றதும் இங்கே குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. இப்படித்தான் மேற்கத்திய அடக்குமுறையாளர்களுக்கு எதிரான பத்வாக்கள் மற்றும் ஒத்துழையாமை மூலம், மதரஸாக்கள் அவர்களின் கண்களை உருத்த ஆரம்பித்தன.

இது புறமிருக்க, ஆப்கானிஸ்தானில் ரஷ்ய அக்கிரமிப்பிற்கு எதிராக வெகுண்டெழுந்த தாலிபான்கள், ரஷ்யாவையும் அதன் அடிவருடிகளாக இருந்த மன்னர்களையும் ஆப்கான் மண்ணிலிருந்து விரட்டியடித்து ஆக்கிரமிப்புகளாலும், இனச்சண்டைகளாலும் சிதைந்திருந்த ஆப்கானிஸ்தானின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்து, “ஓபியம்” (Opium) எனும் போதைப் பொருளின் உற்பத்திக்கூடமாக இருந்த ஆப்கானை, ஒரேயொரு அரசானையின் மூலம் ஒழித்து அமெரிக்கா மற்றும் ஐ.நாவின் பாரட்டைப் பெற்ற தாலிபான்களின் எழுச்சி, மக்களை அடக்குமுறைக்காளாக்கி அரண்மனை சுகம் கண்டவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

‘தாலிப்’ (طالب) என்ற அரபுச் சொல்லுக்கு மாணவர்/கற்றுக் கொள்பவர் என்று பொருள். மாணவர்கள் என்பதற்கு இணையான சொல்லாக்கமே தாலிப் அல்லது தாலிபான். தாலிபான்களளில், ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இயங்கிக் கொண்டிருந்த பஸ்தூன் இனப்போராளிகள் மற்றும் பாகிஸ்தானின் வடமேற்கு மாகானப் போராளிகளும் இருந்தனர். இங்கிலாந்தின் சர்.வின்ஸ்டன் சர்ச்சில் 1897 இல் எழுதிய “Malakand Field Force” என்ற நாவலில் தாலிபான்களை, தாலிவான் என்று குறிப்பிடுகிறார்.

1994 ஆம் ஆண்டுவாக்கில் கந்தஹார் அருகிலுள்ள ஷாங் ஹெசார் கிராமத்திலிருந்த சோதனைச்சாவடியில் Harakat-i Inqilab-i Islami என்ற ஆப்கான் தீவிரவாதக் குழுவினர், சில குடும்பப் பெண்களை கடத்திச்சென்று கற்பழித்ததை, அப்பகுதியின் சாதாரண இமாமாக (ஆலிம்) இருந்த முல்லா உமர் தலைமையிலான மாணவர்கள் காப்பாற்றியதோடு அந்தத் தீவிரவாதிகளை பொதுமக்கள் முன்னிலையில் கொன்றனர்.

இவ்வாறாக ரஷ்யாவின் கைக்கூலியாக இருந்த முந்தைய ஆப்கான் மன்னராட்சி 1992 இல் வீழ்ந்ததும் கடுமையான இனச்சண்டைகளால் சின்னாபின்னமாகி இருந்தது. இந்த சூழலில்தான் தேசபக்தி கொண்ட இஸ்லாமிய கல்வி பயின்ற ஆப்கான் மாணவர்கள் புரட்சிமூலம் அதிகாரத்தையும் மக்கள் செல்வாக்கையும் கைப்பற்றினர்.

ரஷியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் நடக்கும் வரை ரஷ்யாவை நிம்மதி இழக்கச் செய்ய, இதே தாலிபான்களை அமெரிக்கா ஆயுதம் கொடுத்து கொம்புசீவி ரஷ்யாவை ஆப்கான் மண்ணிலிருந்து விரட்டப் பயன்படுத்தியதும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா என்பது போல அதே தாலிபான்கள் பின்னர் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டதால், அமெரிக்காவின் கோபத்திற்காளாகி இன்று அமெரிக்க கைப்பொம்மை அரசுடன் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறது!!!

இப்படியாக மதரஸா மாணவர்கள், அராஜகத்திற்கெதிராக வெகுண்டெழுந்தது உலக கவனத்தை ஈர்த்ததோடு, இந்த எழுச்சி மற்ற நாடுகளிலும் தலைதூக்கி விடக்கூடாது என

19 comments

  1. நல்லடியார்,

    Even more alarming for our security forces is the fact that hundreds, if not thousands, of the young British Muslim men and women who are sent to study at Pakistan’s madrassas return to these shores filled with the conviction that it is their Islamic duty to sacrifice their lives as suicide bombers.

    http://www.telegraph.co.uk/opinion/main.jhtml?xml=/opinion/2005/07/17/do1701.xml&sSheet=/portal/2005/07/17/ixportal.html

  2. Tanweer, it now transpires, had spent his time studying at a madrassa, a religious establishment where the students are required to devote their entire energy to studying the Koran.

    இந்த தன்வீர் பாகிஸ்தானில் உள்ள மதரஸா ஒன்றில் படித்தவன் தான்.

    இவன் 7/7-லண்டன் தற்கொலைபடை “ஜிஹாதி”களில் ஒருவன்.

  3. samudra,
    if one or two becoming suicide bombers(not even 5 or 10percent frm madrasas)..its absolutely out of their independent anger on the particular society…not for the sake of religion but they painted with the religion for their actions…But in RSS/VHP etc every cadres are trained with hatred/killing muslims/destroying mulims property..same thing is taught by all western leaders to the innocent peoples….
    SALAMI

  4. சந்தோஷ் aka Santhosh

    என்ன நல்லடியாரே,
    மதராசாக்களைப்பற்றி நன்றாக விளக்கிஉள்ளீர்கள் பாராட்டுக்கள், இதுல சங்க பரிவார் எங்க சார் வந்தது. அது சரி ஏதோ சங்க பரிவார் மட்டும் தான் மதராசாக்களை எதிர்க்கிற மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்ணிறிங்க, உலகமே எதிர்க்குது. எத்துனை வருடம் சார் வருடம் கூட வேண்டாம் நாட்கள் சார் சங்க பரிவாரில் இருந்து இருக்கிங்க. சுட்டி தருவது, படம் போடுவது பெரிய விசயம் இல்ல சார், முழுவதுமாக தெரிஞ்சிகனும். அப்புறம் பேசணும் நுனிப்புல் மேயக்கூடாது. மத துவஷத்தை வளர்க்ககூடாது சார். தெரிஞ்சதை பேசுங்க. சும்மா கூகிளில் தேடி வருகிற படத்தையும் சுட்டிகளையும் போடுவது பெரிய விஷயம் இல்ல.

  5. ஆரோக்கியம் kettavan

    //இந்த தன்வீர் பாகிஸ்தானில் உள்ள மதரஸா ஒன்றில் படித்தவன் தான்.//

    Couldn’t control laugh at your abysmally ignorant comparison..

    Would you say somebody who had graduated from IIM had been arrested for some felony charges, it seems you would blame IIM…

  6. நல்லடியார்

    //இந்த தன்வீர் பாகிஸ்தானில் உள்ள மதரஸா ஒன்றில் படித்தவன் தான். இவன் 7/7-லண்டன் தற்கொலை படை “ஜிஹாதி”களில் ஒருவன்.//

    சமுத்திரா,

    In actual fact, it is still uncertain whether the three bombers visited any madrasas while they were in Pakistan: madrasas only entered the debate because the bombers told their families they were going to Pakistan to pursue religious studies, just as they told them they were going to a religious conference when they set off to bomb London. According to sources at the prime minister’s offices in Downing Street there is in fact no evidence that any madrasa was visited by any members of the cell at any point on their journey. Still less is there any proof that madrasas were responsible for “brainwashing” the trio, as the British press assumed after the bombings. Instead there is considerable evidence to show that the trio were radicalized in Yorkshire through the Islamist literature and videos that were available beneath the counter of their local Islamic bookshop. And while it is now certain that the group made contact with al-Qaeda in Pakistan, there is no reason to assume that a madrasa acted as the conduit.

    http://www.nybooks.com/articles/18514

    //Islamic duty to sacrifice their lives as suicide bombers//

    காலங்காலமாக சொல்லப்படும் வழக்கமான பொய்தான் இது. மேற்கண்ட உங்கள் கூற்றில் உண்மை இருப்பின் குர்ஆன், ஹதீஸிலிருந்து சுட்டுங்கள்.

  7. நல்லடியார்

    //இந்த தன்வீர் பாகிஸ்தானில் உள்ள மதரஸா ஒன்றில் படித்தவன் தான்.//

    //Would you say somebody who had graduated from IIM had been arrested for some felony charges, it seems you would blame IIM…//

    Omar Sheikh, the kidnapper of the Wall Street Journal reporter Daniel Pearl, had studied at the LSE and was the product of the same British public school that produced the film-maker Peter Greenaway.

    Samudra,

    Any justification?

  8. Nalladiyar,
    My earlier comments were a reaction to your assertion that no 7/7 terrorists were trained in Madrassas.(Your explicit referance to Pakistan)

    Here is what you have written.

    //அமெரிக்க மற்றும் இலண்டன் தாக்குதல்களில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் எவருக்கும் மதரஸா பின்னனி இல்லை.
    //

    Ever wondered why Musharaff would ban foreign students studying in Madrassas?

    (I’d like to hear a better answer than the usual “conspiracy” theory that the world is slowly becoming tired of)

    You need not put your words into my mouth reg the generalisation of people studying in madrassas.

    //இந்தியாவின் எதிரி நாடாகச் சொல்லப்படும் //

    I thought they ARE our enemies.

    Would Musharaff categorically declaring Laskhar to be a NON-Terrorist organisation convince you? I can get you his interview transcripts where he said the same.

    I’m rather surprised by the affection showered upon Pakistanis.

    And please find out why Musharaff is trying so hard to get these madrassas registered.

    What next? A post telling me to go to Pakistan?

    Facts help, rhetoric doesnt.

  9. //Omar Sheikh, the kidnapper of the Wall Street Journal reporter Daniel Pearl, had studied at the LSE and was the product of the same British public school that produced the film-maker Peter Greenaway.

    Samudra,

    Any justification? //

    I see your point.

    But I’d greatly appreciate if you can show me where I have generalised people studying in madrassas as budding terrorists.

    Let me guess, you CANNOT do that.Because I’m not indulging in generalisation while you are.

    That being said, its high time these medieval madrassas are shown the door.

    No madrassa produced a Kalam.

  10. நல்லடியார்

    //இதுல சங்க பரிவார் எங்க சார் வந்தது. அது சரி ஏதோ சங்க பரிவார் மட்டும் தான் மதராசாக்களை எதிர்க்கிற மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்ணிறிங்க, உலகமே எதிர்க்குது.//

    சந்தோஷ் குமார்,

    பாபர் மசூதி இடிப்பிலும் அதனைத் தொடர்ந்த கலவரங்களுக்கும் சூத்திரதாரியான L.K.அத்வானி, துவேசமாகப் பேசி அப்பாவி இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டும் ப்ரவீன் தொக்காடியா, ஆப்கன் – இராக் ஆக்கிரமிப்புகளின் சூத்திரதாரிகள் ரம்ஸ்ஃபெல்டு,காலின் பாவல் இவர்கள்தான் மதரஸாக்களை தீவிரவாதக் கூடங்களாக சொல்லி வருகிறார்கள். கூட யூத மற்றும் ஆரிய ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன.

    //எத்துனை வருடம் சார் வருடம் கூட வேண்டாம் நாட்கள் சார் சங்க பரிவாரில் இருந்து இருக்கிங்க.//

    என்ன கேள்வி இது சந்தோஷ்? சங் பரிவார வரலாற்றில் மத உணர்வுகளைத் தூண்டாமல், அமைதியை நிலைநாட்ட செய்த ஏதேனும் ஒரே ஒரு முயற்சியாவது உண்டா?

    சுதந்திரப் போராளிகளைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சிலைவைத்ததும், பிரதமராக்கியதும்தானே இவர்களின் மிகப்பெரும் சாதனை!

    //சுட்டி தருவது, படம் போடுவது பெரிய விசயம் இல்ல சார், முழுவதுமாக தெரிஞ்சிகனும். அப்புறம் பேசணும் நுனிப்புல் மேயக்கூடாது. மத துவஷத்தை வளர்க்ககூடாது சார். தெரிஞ்சதை பேசுங்க. சும்மா கூகிளில் தேடி வருகிற படத்தையும் சுட்டிகளையும் போடுவது பெரிய விஷயம் இல்ல//

    கோட்சே, காந்தியைக் கொன்றதை கூட நியாயப்படுத்தவும், RSS ஒரு சேவை இயக்கம் என்று சொல்லி காதில் பூ சுற்றவும், சாகா பயிற்சியில் யோகாவும் சிலம்பமும்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்றும் சொல்ல சிலர் இருப்பதால் அத்தகைய போட்டோக்களை தேடி எடுத்தேன். எந்த மதரஸாவிலாவது ஆயுதப் பயிற்சி கொடுப்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருந்தால் சுட்டவும்.

    அப்புறம், ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும் முன் அது பற்றிய குறிப்புகளை முடிந்தவரை அறிந்த பிறகே எழுதுகிறேன். என் தவறுகளை சுட்டினால் திருத்திக் கொள்வதில் தயக்கமில்லை.

  11. “… குர்ஆனையும் ஹதீஸையும் பொருள் அறிந்து மணனம் செய்வதுடன் ஷரீஅத் சட்டங்களையும், விளக்க உரைகளையும், இஸ்லாமிய வரலாற்றையும் முழுமையாகக் கற்றவருக்கு “ஆலிம்/உலமா” என்ற பட்டமும் வழங்கப் படுகின்றது.”

    நம் புதுக்கல்லூரியில் நான் சமீபத்தில் 1962-63 கல்வியாண்டில் புகுமுக வகுப்பு படித்தபோது இருந்த முதல்வர் மாண்புமிகு அல் ஹஜ் அஃப்சல் அல் உலேமா சையத் அப்துல் சாஹேப் புகாரி அவர்கள் பெயரில் உள்ள அஃப்சல் என்பது என்னப் பட்டம் என்று கூற முடியுமா? ஹஜ் போயிருப்பதால் அல் ஹஜ் என்பது புரிகிறது, அல் உலேமாவும் இப்போது விளங்கி விட்டது. அஃப்சல்?

    இப்பின்னூட்டமும் என் வழமையான தனிப் பதிவில் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  12. //அல் உலேமாவும் இப்போது விளங்கி விட்டது. அஃப்சல்?//
    Dondu Sir,
    ‘Afzal’ differs with an ‘Aalim’ as that of B.A (Hons) with B.A.

  13. அபூ முஹை

    ந.ராகவன் அவர்களே!

    ஆலிம் என்றால் அறிஞர் இது ஒருமையைக் குறிக்கும்.

    உலமா என்றால் அறிஞர்கள் இது பன்மையைக் குறிக்கும்.

    அஃப்சல் என்றால் சிறந்த, சிறப்பு என்று பொருள்.

    அஃப்சலுல் ஆலீம் என்றால் சிறந்த அறிஞர் என்று பொருள்.

    அஃப்சலுல் உலமா என்றால் அறிஞர்களில் சிறந்தவர் என்று பொருள்படும். அறிஞர்களில் சிறந்தவர் என்று பொருள்படும். இப்படிச் சொல்லாமா என்பதில் என்க்கு நெருடல் உண்டு.

    அதுபோல் ஹஜ்ஜுக்கு சென்று வந்தால் ஹாஜி என்று சொல்லிக்கொள்வதிலும் எனக்கு உடன்பாடில்லை.

    அன்புடன்,
    அபூ முஹை

  14. வஹ்ஹாபி

    மிஸ்டர் டோண்டு ராகவன் (4800161),

    ‘ஆலிம்’ (அறிந்தவர்) என்று சுருக்கிக் கூறப் படும் அரபுச் சொல்லின் முழுமை ‘ஆலிம் அல் குர்ஆன்’ (குர்ஆனை அறிந்தவர்) என்பதாம்.

    அவ்வாறே, ‘ஹாபிழ்’/’ஹாபிஸ்’ என்பதன் முழுமைச் சொல் ‘ஹாபிழ்/ஹாபிஸ் அல் குர்ஆன்’ (குர்ஆனை மனனமிட்டவர்)என அறிக!

    மேலும் ‘உலமா’ (அறிந்தவர்கள்) எனும் அரபுச் சொல், ‘ஆலிம்’ என்பதன் பன்மையாம். ‘ஃபழ்லு/ஃபஸ்லு’ எனும் சொல்லுக்கு, ‘சிறந்த’ என்ற பொருளையும் ‘அஃப்ழல்/அஃப்ஸல்’ என்பதற்கு ‘மிகச் சிறந்த’ என்ற பொருளையும் தமிழில் தழுவலாம். எல்லாமும் சேர்த்து, ‘அஃப்ஸலுல் உலமா’ என்றால் ‘அறிந்தவர்களுள் மிகச் சிறந்தவர்’ எனப் பொருள் கொள்ளலாம்.

    மேற்காண்பவை எல்லாம் மொழி சார்பு விளக்கங்கள் மட்டுமே.

    இனி, நடைமுறையைப் பார்ப்போம்:
    தங்களின் ஐயத்திற்குரிய ‘அஃப்ஸலுல் உலமா’ என்பது அரசு அங்கீகரித்துள்ள பாடத் திட்டமாகும். இப்பட்டம் பெறுவதற்குக் குர் ஆனை அறிந்திருக்க வேண்டுமென்பது கட்டாயமன்று; அரபு மொழியின் அடிப்படை இலக்கணமும் சற்றே அரபு இலக்கியமும் (கஸ்ஸாலி) தெரிந்திருந்தால் போதும். ஆனால், தொடக்கக் கல்வியில் (எஸ்எஸ்எல்ஸி) தேறியிருக்க வேண்டும். இத்தேர்வில் கடுமையானதாகக் கருதப் படுபவை இரண்டாகும்: 1. ஓர் ஆங்கிலச் சொற்றொடரை அரபியில் மொழி பெயர்த்து எழுதுதல். 2. ஓர் அரபுச் சொற்றொடரை ஆங்கிலத்தில் தருதல்.

    அரபியில் (தங்களைப் போன்ற அதிகாரப் பூர்வமான) மொழி பெயர்ப்பாளாரகச் செயலாற்றுவதற்கு, ‘அஃப்ஸலுல் உலமா’ என்ற இரண்டாண்டுப் பட்டப் படிப்பு இன்றியமையாத ஒன்றாகும்.

  15. நல்லடியார்

    //No madrassa produced a Kalam//

    1) Abu Ali al-Husain ibn Abdullah ibn Sina (980-1037 C.E.) – doctor of doctors

    2)Abu al-Qasim Khalaf bin ‘Abbas el-Zahrawi (940? – 1013 C.E.) -(Albucasis) – father of surgery

    3) Jabir Ibn Haiyan (Died 803 C.E.), the alchemist Geber of the Middle Ages, is generally known as the father of chemistry

    Samudra,

    I liested a few for your information and you can find more here!

  16. நல்லடியார்

    //அஃப்சல்?//

    1) ‘Afzal’ differs with an ‘Aalim’ as that of B.A (Hons) with B.A.

    2) அஃப்சலுல் உலமா என்றால் அறிஞர்களில் சிறந்தவர் என்று பொருள்படும்

    3) அரபியில் (தங்களைப் போன்ற அதிகாரப் பூர்வமான) மொழி பெயர்ப்பாளாரகச் செயலாற்றுவதற்கு, ‘அஃப்ஸலுல் உலமா’ என்ற இரண்டாண்டுப் பட்டப் படிப்பு இன்றியமையாத ஒன்றாகும்.

    திரு.ராகவன் (டோண்டு) அவர்களுக்கு விளக்கம் கொடுத்த ராஜா, அபூமுஹை மற்றும் வஹ்ஹாபி அவர்களுக்கு நன்றிகள்.

    //அதுபோல் ஹஜ்ஜுக்கு சென்று வந்தால் ஹாஜி என்று சொல்லிக்கொள்வதிலும் எனக்கு உடன்பாடில்லை.//

    அபூமுஹை,

    நானும் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். ஹஜ் என்பது உடல்+செல்வ தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமேயான கட்டாயக் கடமை. இதில் ஹஜ் செய்தவரை ஹாஜி என்று கூறிக்கொள்வது அல்லது அழைப்பது இந்தக் கடமையை செய்தவரை மற்ற கடமைகளை செய்தவர்களை விட உயர்த்திச் சொல்வது போன்றுதான். இது தவறானது என்பது என் அபிப்ராயம்.

  17. //Samudra,

    I liested a few for your information and you can find more here!//

    Nalladiyar,

    So where are the “Doctors” and “Chemists” produced by the madrassas from the 10th Century to 20th Century?

    Please show us a few from India,if you can.

  18. சுல்தான்

    The answer for Mr. Samudra’s last question is laready there. Please read it once again.
    //மற்ற கல்வி நிறுவனங்களில் அந்தந்த மத போதனைகளுடன் தற்கால படிப்புகளையும் கற்று கொடுக்கின்றார்கள். ஆனால் மதரஸாக்களில் இஸ்லாமியக் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமையை பிற கல்விகளுக்குக் கொடுப்பதில்லை. போட்டி உலகில் முஸ்லிம்கள் பின்தங்கி இருப்பதற்கு, மதரஸாக்களின் கல்வி முறையில் உலகக் கல்வியையையும் மார்க்கக் கல்வியையும் வேறுபடுத்தி பார்த்தது மிகப்பெரும் தவறு.//

  19. Muse (# 5279076)

    பொத்தாம் பொதுவாகக் கூறப்படுகிற கருத்துக்கள் எல்லாம் பொய்யான கருத்துக்கள் என்பது என் கருத்து. அதே போல மதராஸாக்கள் எல்லாமே தவறானவை என்பதும் தவறான கருத்து என்றுதான் தோன்றுகிறது.

    ஜிஹாதி என்ற வார்த்தையானது எங்கனம் உலக அளவில் தவறாக வியாக்யானப் படுத்தப்படுகிறதோ, அதே போல தவறாக புரிந்து கொள்ளப்படுபவை “இந்தியாவில்” ஏழை இஸ்லாமிய குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் மதராஸாக்கள்.

    ஆனால் மத வெறியை மதராஸாக்கள் தூண்டவே இல்லையா என்ற கேள்விக்கும் நாம் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. சூடான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள மதராஸாக்கள் தீவிரவாதிகளைத் தயாரிக்கும் கூடங்கள் என்பதில் தங்களுக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்காது என்றே தோன்றுகிறது.

    அதே சமயத்தில் தாலிபன்கள் பின்பற்றிவரும் மதக்கொள்கைகளின் பிறப்பிடம் உத்திர பிரதேசத்திலுள்ள சில மதராஸாக்கள்தான் என்கிற உண்மையை நான் இங்கே ஒரு எக்ஸெப்ஷனாகத்தான் பார்க்க விரும்புகிறேன்.

    எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அதை விளக்குமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன்.

    1. ஆர் எஸ் எஸ்ஸும் தீவிரவாத இயக்கம்தான் என்றும், ஏனென்றால் அது தன்னுடைய உறுப்பினர்களுக்குப் போர் பயிற்சி அளிக்கிறது என்றும் விளக்கி இருந்தீர்கள். நன்றி. ஆனால் அவர்கள் ஏன் பாகிஸ்தான் இந்தியாவில் செய்வது போல, அல்-கயிதா உலக அளவில் செய்வது போல மற்ற அண்டை நாடுகளில் குண்டு வைப்பதோ, சாதாரண பொதுமக்களையும், குழந்தைகளையும் கொல்வதையோ செய்வதில்லை.

    நான் இங்கே பேசுவது மதக் கலவரங்களில் நடக்கும் தீவிரவாதம் இல்லை. மதக் கலவரங்கள் எதுவும் இல்லாமல் இருக்கின்ற ஒரு ஊரில், நாடுகளில் நடக்கும் வன்முறை பற்றியது. இந்த ஹிந்துத்துவ சக்திகள் வெளி நாடுகளிலும், இந்தியாவிலும் செய்யும் அணுகுண்டு வெடிப்புகளைப் பற்றிய தகவல்களை ஊடகங்கள் மறைத்துவிடுகின்றன என்று நீங்கள் கூறுகிறீர்களா?

    2. எந்த விதமான கலவரங்களிலும் மக்களை கொல்லாமல் இருப்பதுதான் சரி. அப்படியில்லாமல் மக்களை கொல்லுகிற ஹிந்துக்களும், முஸ்லீம்களும் நரகத்திற்குத்தான் போவர்கள் என்று நான் கருதுகிறேன். ஹிந்து மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் மிகக் கொடுமையான நரகத்திற்கு போவார்கள் என்று கூறி அமைதி மார்க்கத்தை பின்பற்றுபவர் நீங்கள் என நிரூபிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *