எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே! திண்ணமாக அல்லாஹ் சில விஷயங்களைக் கடமையாக்கியுள்ளான். அவற்றைப் பாழாக்கி விடக் கூடாது. சில வரம்புகளை நிர்ணயித்துள்ளான். அவற்றை மீறக் கூடாது. பல விஷயங்களை தடை செய்துள்ளான். அவற்றைக் குலைக்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் தன் வேதத்தில் எவற்றை ஹலாலாக்கியுள்ளானோ அவை ஹலாலாகும். எவற்றை ஹராமாக்கியுள்ளானோ அவை ஹராமாகும். எவை பற்றி அவன் ஒன்றுமே கூறவில்லையே அவை சலுகையாகும். அல்லாஹ் அளித்திருக்கும் சலுகையை ஏற்றுக் கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் எதையும் மறப்பவனல்ல. பிறகு “உமது இறைவன் எதையும் மறப்பவனல்ல” (19:64) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி). நூல்: ஹாகிம்.
விலக்கப்பட்டவைகள் தான் அல்லாஹ்வின் வரம்புகளாகும். அல்லாஹ் கூறுகிறான்: “இவை அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட வரம்புகளாகும். எனவே அவற்றை நீங்கள் மீறாதீர்கள்” (2:187). தான் ஏற்படுத்திய வரம்புகளை மீறுபவர்களையும், தான் விலக்கிய காரியங்களைச் செய்பவர்களையும் திண்ணமாக அல்லாஹ் எச்சரித்துள்ளான். அல்லாஹ் கூறுகிறான்: “எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்து, அவனுடைய வரம்புகளை மீறுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நரகில் தள்ளுவான். அதில் அவர்கள் நிலையாக வீழ்ந்து கிடப்பார்கள். அவர்களுக்கு அங்கு இழிவுபடுத்தும் தண்டனையும் இருக்கிறது” (4:14).
விலக்கப்பட்டவைகளைத் தவிர்ப்பது கடமையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘நான் உங்களுக்கு எதைத் தடுத்துள்ளேனோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதை முடிந்த அளவு செய்யுங்கள்’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.
மனோ இச்சையைப் பின்பற்றக் கூடிய, பலவீனமான உள்ளங்களுடைய, சில குறைமதியுடையோர் தொடர்ந்து ஹராமானவற்றைச் செவியுகிறபோது வெறுப்படைந்து, கடுப்பாகி இவ்வாறு கூறுவதைக் காண முடிகிறது: எல்லாம் ஹராம் தானா? நீங்கள் எதையும் ஹராமாக்காமல் விடுவதில்லை. இதனால் எங்களின் வாழ்வை சோர்வடையச் செய்து விட்டீர்கள், எங்கள் வாழ்க்கையை வெறுப்படையச் செய்து விட்டீர்கள், எங்களுடைய உள்ளங்களில் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டீர்கள். ஹராம் – ஹராமாக்குதல் என்பதைத் தவிர வேறு எந்த வேலையும் உங்களுக்கு இல்லை! இறைமார்க்கம் எளிமையானது. மார்க்க விஷயங்கள் விசாலமானவை. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிக்க கருணை உள்ளவனும் ஆவான்.
இத்தகையவர்களுக்கு நாம் கூறும் பதில் இதுதான்: உண்மையில் அல்லாஹ், தான் நாடியவற்றைச் சட்டமாக்குகிறான். அவனுடைய சட்டத்தை மறுபரிசீலனை செய்பவர் யாரும் கிடையாது. அவன் யாவற்றையும் அறிந்தவன், நுண்ணறிவாளன். அவனே தான் நாடியவற்றை ஹலாலாகவும் தான் நாடியவற்றை ஹராமாகவும் ஆக்குகின்றான். அவனுடைய சட்டத்தை நாம் பொருந்திக் கொள்வதும் அதற்கு முழுமையாக கீழ்படிவதுமே அல்லாஹ்வுக்கு நாம் அடிமை பட்டிருப்பதன் அடிப்படைகளில் உள்ளவையாகும்.
இறைச்சட்டங்கள் யாவும் இறைவனுடைய ஞானம், விவேகம் மற்றும் நீதியின் மூலம் பெறப்பட்டவையாகும். அவை வீண் விளையாட்டானவையல்ல. இதோ அல்லாஹ் கூறுகிறான்: “உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும், நீதியும் முழுமையாக உள்ளன. அவனுடைய கட்டளைகளை மாற்றக் கூடியவர் எவருமிலர். அவன் அனைத்தையும் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கிறான்” (6:115)
மேலும் அல்லாஹ் ஹலால் ஹராமுக்கு ஒரு அடிப்படைச் சட்டத்தை நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளான். “(இந்த இறைத்தூதர்) அவர்களுக்குத் தூய்மையானவற்றை ஆகுமாக்குகிறா