சவூதி அரேபியா, ஜித்தா மாநகரில் ஏப்ரல் 15 அன்று பழைய மக்கா சாலை கிலோ.14-ல் “இஸ்திராஹா அல் முல்தகா” என்ற இடத்தில் “இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி” நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 2500 மக்கள் கலந்துக்கொண்டனர். மாலையில் சிறுவர் சிறுமியர்களுக்கான போட்டிகளும், ஆண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியும் நடைபெற்றது.
மஃரிப் தொழுகைக்குப் பிறகு, இஸ்லாமிய சொற்பொழிவு அரங்கம் ஆரம்பமானது. ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பு மையத்தின் தமிழ் பிரிவு அழைப்பாளர் மவ்லவி இப்ராஹிம் மதனீ அவர்கள் தலைமை வகித்து முதன்மை உரையினை நிழத்தினார்.
பின்னர், டாக்டர் அஹ்மத் பாகவி Ph.D. அவர்களை “வீணாகும் காலங்கள்” என்ற தலைப்பில் பேச அழைத்தார். இத்தலைப்பை அழகிய தொடக்கத்துடன் ஆரம்பித்த பாகவி அவர்கள், அடுக்கடுக்கான புள்ளி விபரங்களை தனது சொற்பொழிவுக்கு இடையே அறிவுக்கு விருந்தாகத் தந்தார்.
இஷா தொழுகைக்குப் பின்னர் உரையாற்றிய “ஜித்தா தஃவா சென்டரின்” ஆங்கிலப் பிரிவு இயக்குனர் ஷேக் அபு முஸ்அப் வஜ்தி அல் அக்காரி அவர்கள், ஆபாசம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
இரவு உணவு இடைக்குப்பின்னர், சிறப்பு சொற்பொழிவாற்ற தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள், தனது சொற்பொழிவை “ஊசலாடுது மனசு” என்ற தலைப்பில் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் ஆரம்பித்தவர், மனித மனங்களில் ஏற்படும் ஊசலாட்டங்களை விவரித்துவிட்டு பின்னர் தனக்கு ஏற்பட்ட மன ஊசலாட்டத்தை கூறி, அது பின்னர் எவ்வாறு இயற்கை மார்க்கமான இஸ்லாத்தை கண்டுக்கொள்ள வைத்தது என்பதையும் விளக்கினார். முஸ்லிம்கள் இஸ்லாத்தை பிறருக்கு அறிமுகப்படுத்தாமல் இருப்பதை தொட்டுக்காட்டாமல் இல்லை.
அவரது சொற்பொழிவு இரவு நேரம் 12 மணியை தாண்டினாலும் அனைவரும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். குர்ஆன் சொல்லும் ஆழமான அறிவியல் கருத்துகளால் இன்று ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாத்தின் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் குறிப்பிட்டு, இது போன்ற நிகழ்வுகள் இன்ஷா அல்லாஹ் இன்னும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து வந்த கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் சுமார் இரவு 1 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது.
டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள், கேள்வி நேரத்தின் போது, “வெள்ளையான கருப்பன் என்றோ, புத்தி சாலியான முட்டால் என்றோ எதிரெதிர் அர்த்தம் உள்ளதை ஒருவருக்கு பயன்படுத்துவது எப்படி சரியில்லையோ அதுபோல், அப்துல்லாஹ் என்பதற்கும் பெரியார் தாசன் என்பதற்கும் எதிரெதிர் அர்த்தம் உள்ளதால், என்னை “அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன்” என யாரும் குறிப்பிட வேண்டாம் என்றும் “அப்துல்லாஹ்” என்ற எனது புதிய பெயரை புரிந்துக்கொள்பவர்கள் புரிந்துக் கொள்ளட்டும், புரியாதவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை” என்பதாக குறிப்பிட்டார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளில், தன்னார்வத் தொண்டர்களின் கடுமையான உழைப்பு பளிச்சிட்டது. நிகழ்ச்சி நடந்த இடம், ஜித்தா மாநகருக்கு வெளியே இருந்தாலும் கூட, பலபேர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது மக்களின் ஆர்வத்தை உணர்த்தியது. நிகழ்ச்சிக்கு மக்கா மற்றும் யான்பு நகர்களிலிருந்து மக்கள் வந்திருந்தனர். ஜித்தா நகரின் முக்கிய இடங்களில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டிருந்தன. பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியை இஸ்லாமிய அழைப்பகம் ஸனாயிய்யா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது.
I am interested to watch the videos, pls upload them ASAP.
ஜித்தாவில் இது வரை நடத்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் இவ்வளவு கூட்டம் கூடியதில்லை.அல்ஹம்துலில்லாஹ். பலதரப்பட்ட மக்களும் அமைப்பினரும் (TNTJ)தவிர கலந்து கொண்டு சிறப்பித்ததால் தஃவா நிகழ்ச்சிகளில் இது ஒரு மைல் கல்லே.
To Brother Abdul Majeed, we all are in one community. pl. don’t split in our community like TNTJ, PJ ect.
Dear admin Brothers,
Pl, upload the program videos as soon as possible.we
are waiting to know the islam.
pl. upload videos ASAP…we are waiting for watch.
இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சியின் வீடியோ மற்றும் ஆடியோவை கீழ்கண்ட சுட்டியில் காணலாம்.
https://islamkalvi.com/portal/?p=4838