Featured Posts

அரபி படிக்கலாமே!

Articleதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் முடிந்து தற்போது மாணவர்களும், பெற்றோர்களும் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பின் மேற்படிப்புகளை எப்படித் தொடரலாம், எங்கே தொடரலாம் என்று ஆங்காங்கே கல்வி ஆலோசனை முகாம்கள், கையேடுகள், குறுந்தகடுகள் என பல வகையிலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போது வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் துறை தகவல் தொடர்புத் துறையா? மருத்துவமா? உயிர்-வேதியிலா? என்று பலரும் ஆலோசனைகள் செய்து கொண்டிருக்கக்கூடும்.

தற்போது தேர்ந்தெடுத்துப் படிக்கப்போகும் மேற்படிப்புதான் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வெற்றியின் வழிகாட்டிகாக அமையக்கூடும். வளைகுடாவில் இருக்கும் பெற்றோர்களுக்கான ஒரு சிறிய ஆலோசனைதான் பின்வரும் குறிப்புகள்:

உங்களுடைய பிள்ளைகள் மருத்துவம், பொறியியல் சார்ந்த மேற்படிப்புகளைத் தொடர தேவையான மதிப்பெண்கள் இல்லையெனில் அவர்களை ஏதாவது ஒரு படிப்பில் சேர்ப்பதைவிட இளங்கலை அராபிக் (BA. ARABIC) பட்டப்படிப்பில் சேர்த்து விடுங்கள்.

வளைகுடா நாடுகளில் அராபிக் மொழி தெரிந்தவர்ளுக்கு நிர்வாகம், மொழிபெயர்பு, மேற்பார்வையாளர் ஆகிய பல துறைகளிலும் வேலை வாய்ப்புகள் மிகுந்து கிடக்கின்றன.

அரசுத் துறை வேலைவாய்ப்புகளனாலும் சரி, தனியார் நிறுவனங்களானாலும் சரி அராபிக் தெரிந்திருப்பின் அவர்களுடைய எதிர்காலம் பிரகாசமடையும் என்பதை வளைகுடா நாட்டில் பணிபுரியும் ஒவ்வொறுவருக்கும் தெரிந்த உண்மையே.

உங்களுடைய பிள்ளைகளின் வேலைவாய்ப்புகளை வளைகுடா நாட்டில் அமைத்துத் தர நீங்கள் விரும்புபவராக இருப்பின் அவர்களை இளங்களலை அராபிக் (BA. ARABIC) படிக்க ஆர்வமூட்டுங்கள். மூன்று வருட இந்த படிப்பிற்குப் பின் 2 வருட பட்ட மேற்படடிப்பான முதுகலை அராபிக் படித்தால் இன்னும் அதிகமான வேலைவாய்ப்புகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன என்றே கூறலாம். BA.Arabic படிக்கும் போதே கம்ப்யூட்டர் மற்றும் ஆங்கிலப் புலமையை சற்று அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

BA. Arabic படிப்பை படிக்க ஆர்வமூட்டுவதன் காரணம், முஸ்லிம் சமுதாய சகோதரர்கள் கம்ப்யூட்டர், பொறியியல், ஆகிய பல படிப்புகளையும் படித்துவிட்டு வளைகுடா நாடுகளில் வந்து சாதாரண பணியாளர்ளுக்குக் கிடைக்கும் ஊதியத்தைவிட மிகக் குறைந்த ஊதியத்திற்கு பணிபுரியும் நிலை நிலவி வருகின்றது. அரபி மொழி எழுதவும், படிக்கவும் தெரியாத காரணத்தால் போதிய கல்வித்தகுதி இருந்தும் அதற்குத் தகுந்தாற் போல வேலைவாய்ப்புகள் அமைவதில்லை.

வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை மத்திய கிழக்கு நாடுகளான எக்ப்தியர்கள், லெபனான், சிரியா, யமன் மற்றும் பல பகுதிகளிலிருந்தும் வேலைவாய்ப்புகளுக்காக மக்கள் அணிதிரண்டு வருகின்றார்கள். எந்த அடிப்படைக் கல்வித்தகுதியும் அவர்களிடத்தில் இல்லை எனினும் மொழி அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தங்கள் வேலைவாய்ப்புகளை சிறந்ததாக தக்கவைத்துக் கொள்கின்றனர். எனினும் அவர்களுக்கு இலக்கண மற்றும் இலக்கிய நடையில் அலுவலகம் சார்ந்த கடிதங்கள் மற்றும் ஆவணங்களை உருவாக்க இயலாதவர்களாகத்தான் இருக்கின்றனர்.

நம் சமுதாயத்தவர்கள் அராபிக் மொழிப்பாடத்தை பிரத்யேக மேற்படிப்பாக தேர்ந்தெடுத்துப் படித்தால் கண்டிப்பாக அவர்களுடைய வேலைவாய்ப்புகள் சிறந்ததாக அமையும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

BA. Arabic இளங்கலைப் படிப்பு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி மற்றும் சென்னை நீயூ காலேஜ் ஆகியவற்றில் இருக்கின்றது.

-அப்துல் அஜீஸ். எம்.ஏ(அராபிக்)

21 comments

  1. அபூ சுமையா

    சமுதாயத்திற்கு மிக அவசியமான ஆலோசனை. நல்ல ஒரு கட்டுரை என்ற அளவில் எடுத்துக் கொள்ளாமல் வேலை வாய்ப்பிற்காக வளைகுடாவைக் குறி வைக்கும் சமுதாய இளவல்கள் இதனை செயல்படுத்த முன்வந்தால் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் ஓரளவேனும் வளைகுடாவில் குறிப்பிடத்தக்க இடங்களைத் தக்கவைக்கலாம்.

    – அபூ சுமையா.

  2. Please let me know any web related guides to study arabic with tamil meanings. It will be helpful for me. I am a sri lankan & if you can suggest any books even appreciated. Jazzakkallah.

    Wassalam
    Hassan

  3. Assalamu Alaikkum,

    In which colleges offering Quran Hafeez and a Degree in Tamilnadu for ladies. Please provide useful details so that I can do both.

  4. சமுதாயத்திற்கு தேவையான நல்லதொரு ஆலோசனையை வழங்கி இருக்கிறீர்கள்.காரணம் நான் நேரடியாகவே இதில் அனுபவப்பட்டிருக்கிறேன்.பெற்றோர்கள் இந்த கருத்தை சிந்தித்தால் ஆரோக்கியமான இளைஞர் சமூகம் ஒன்றை உருவாக்கலாம்.

  5. salam,
    Now i,m working in doha, but i dont know Arabic language so i,m lose great jobs.The details in artical hundred persondage correct.Everyone if known Arabic can get a good job with suitable salary package.Every perents want to think about this.
    Ramzan

  6. omar abdul latheef

    only with arabic knowledge , we cant do there better , we r in need to learn ENGLISH definitely to speak/write fluently to be in better palecement . offcourse arabic could be an added advantage along with other knowledge in gulf countries

  7. அரபி மொழியை கற்பதனால் இலாபம் தரும் மொழியாக மட்டுமல்லாமல் படைத்த அல்லாஹ் படைப்பினங்களுக்கு வழிக்காட்டும் திருக்குரானுடன் தொடர்புடைய இளைய தலைமுறையினரை எளிதாக உருவாக்கும் வாய்பினையும் பெறலாம்,இன்ஷாஅல்லாஹ்

  8. I didn’t get any reply from you for my below comment. Can you pls send me the required infor. to my email addr below
    hassan@fidelity.eureka.lk

    wassalam

    hassan
    on 27 Apr 2008 at 11:29 pm
    2Please let me know any web related guides to study arabic with tamil meanings. It will be helpful for me. I am a sri lankan & if you can suggest any books even appreciated. Jazzakkallah.

    Wassalam
    Hassan

  9. நிர்வாகி

    There is in English

    http://www.madinaharabic.com

  10. Thank you for good msg this msg usefull to all our muslim brothers.

    jazzakallah
    wassalam.

  11. Dear, Assalamu Alaikim Varah…

    Your Suggestion highly useful to who comes to abroad as Arabic countries.

    thanks and regards

  12. It is really useful message those who wants job in abroad & who are not get necessary marks to get other groups.

    Thanks for good advice

  13. Basheer Ahamed (Delhi)

    Alhamthulillah. I am going to Oman on March 2009. After I read this article only, I plan to learn Arabic. Even this Author Mowlana Abdul Azeez was very near to me in past few years. I had missed the chance. InshaAllah D’oa for me. Atlease I learn spoken Arbic.
    Basheer from New Delhi

  14. i need to study arabic so.please help me to study.i finished my A/L at2008

  15. Assalmu alaikkum brother !
    Arabic is very must to us.
    any summer course available in chennai pls display it.
    else
    pls teach to us through this website.
    because it will help to read quran with meanning.
    why don’t start ?

  16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்……..
    அரபு மொழியினை மனிதனாகப் பிறந்த அனைவரும் கட்டாயம் படித்திருக்க வேண்டும் ஏனெனில் ஏக இறைவனின் இறுதி வேதமாம் அல்குர்ஆனை அதன் மூல மொழியில் படிப்பது போல வேறு எந்த மொழியில் படித்தாலும் ஒரு சிறு விளக்கக் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் முஸ்லிம்கள் இம்மொழியைத் தெரிந்து வைத்திருப்பது பர்ளு ஜன் என்றே நான் கருதுகிறேன்.
    அந்த வகையில் அதற்கான ஏற்பாடுகள் நடைமுறையில் பல இருப்பினும் தற்போதைய அவசர உலகில் தம்மை இணைத்துககொண்டுள்ள மனிதன் அதற்கான நேரத்தை ஒதுக்குவதிலும் அரபு மொழி தெரிந்தவர்களைத் தேடிப் படிப்பதற்கு தயாரில்லை. ஆகவே அன்றாடம் மனிதனுடைய வேலைகளை செய்யும் போது இதனையும் இணைத்துக்கொள்ள முடியுமாயின் அது வரவேற்கத்தக்கது. அதாவது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் இணையத்தின் மூலமே தமது அனைத்து தேடல்களையும் கொண்டிருப்பதால் அரபுமொழியினையும் அவரவர் மொழிகளில் (அரபு-தமிழ்ரூபவ் அரபு-சிங்களம்ரூபவ் அரபு-தெலுங்கு) படிப்பதற்கு வசதியாக இணையத்தில் இலவச மென்பொருளை உருவாக்கி இடுவதன் மூலம் இதற்கான முன்னேற்றத்தை காணலாம். இதன் மூலம் என்னைப் போன்ற ஆர்வமுள்ளவர்களும் பயனடைவோம். Free Arabic learning software in Tamil ஐ இணைப்பீர்களா?

  17. பேச்சு வழக்கில் உள்ள அறபு மொழியை ஓரளவுக்காவது தெரிந்து கொண்டால் இந்த அறபு நாட்டில் வாழும் எம்மவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே தாங்கள் தளத்தில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மிகவும் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.

  18. Assalamu ‘Alaikum wa Rahmatullahi wa Barakatuhu,
    Please learn Arabic to understand Qur’an and Hadeeth. Classical Arabic is very important. Bit difficult also.

  19. Assalamu Alaikkum,

    My sister is finishing 12th this year 2012.In which colleges offering Quran Hafeez and a Degree in Tamilnadu for ladies. I am in search for this type of studies only for my sister. Please provide details what are the colleges having this both courses in tamil nadu.
    Also if its available in tirunelveli Alhamdhulillah it will be very useful for our ladies.

    Personally asking the admin give me a quick reply becaz at march end exam will be end so that i can make a decision where to join my sister.

    jazzakallah

  20. வஜ்ஹுதீன்

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. சகோதரரே தங்களின் இப்பணி தொடர ஏக இறைவனை பிரார்த்திக்கின்றோம். அப்படியே கல்வி வழிகாட்டியில் மதனீ ஆவதற்கான வழிகாட்டியும் தெரிவித்தால் நிச்சயமாக இளையசமுதாயத்திர்கு நன்றாக இருக்கும். வளர்ச்சி பாதையில் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்க துவா செய்வோம்..

  21. thirunavukkarasu.s

    நன்பரே மூலிகையின் அரபிப்பெயர் பதிவிடவும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *