அல்லாஹ்வின் பேரருளால் ரியாத், தமிழ் தஃவா ஒன்றியத்தின் தமிழ் பேசும் சகோதர, சகோதரிகளுக்கான மாதாந்த தஃவா நிகழ்ச்சியுடன் சென்ற ரமழான் மாத விஷேட போட்டிக்கான பரிசரிளிப்பு விழாவும் 07/Muharram/1433 (02 DEC 2011) வெள்ளிக்கிழமை அன்று ஜூம்ஆத் தொழுகை முதல் இரவு 7.00 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
குத்பாப் பிரசங்கம், நபித் தோழியர் பற்றிய சிற்றுரை, சுருக்கக் கேள்வி பதில் நிகழ்ச்சி, கலந்து கொண்டோருக்கான பேச்சுப் போட்டி, விஷேட சொற்பொழிவு மற்றும் பரிசளிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய மேற்படி தஃவா ஒன்று கூடலில் குளிரையும் பொருட்படுத்தாது சுமார் முன்னூறு சகோதர சகோதரிகள் பங்குகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வொன்று கூடலின் இறுதியாக மஃறிப் தொழுகையைத் தொடர்ந்து ரமழான் மாத விஷேட போட்டிக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு மௌலவி முஆஸ் தலைமை வகித்தார்.
பரிசைப் பெறத் தகுதிபெற்றவர்களாக 42 பேர் தமிழ் தஃவா ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய போட்டிக் குழுவின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 98 புள்ளிகளைப் பெற்ற பஷீர் சின்ன லெப்பை அஸனார் (ரியாத்) அவர்கள் முதல் பரிசான 1500 ரியால்கள் ரொக்கப் பணத்தை தனதாக்கிக்கொண்டார்.
மேலும் 97 புள்ளிகளைப் பெற்ற முஹம்மது மிப்ரான் (ரியாத்) அவர்கள் இரண்டாவது பரிசாக 1000 ரியால்கள் ரொக்கப் பணத்தையும்,
96 புள்ளிகளைப் பெற்ற நான்கு சகோதரிகள் சீட்டிழுப்பின் மூலம் மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் இடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டு 750, 500, 250, 200 ரியால்களை பரிசாகப் பெற்றனர். அவர்கள் முறையே பரீனா அமானுல்லாஹ் (ரியாத்), மஸிய்யா ஸிராஜ் (ரியாத்), பர்வீன் நிஸ்தார் (ரியாத்), தாஹிரா தாவூத் (ரியாத்) ஆகிய சகோதரிகளாகும்.
போட்டியில் கலந்துக்கொண்டவர்கள் மற்றும் அவர்கள் பெற்ற புள்ளிகளின் விபரங்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்.
95 முதல் 90 புள்ளிகளைப் பெற்ற ரியாத், தம்மாம், இலங்கை, இந்தியா ஆகிய இடங்களைச் சேர்ந்த 36 பேர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இறுதியாக நன்றியுரையுடனும் கப்பாரதுல் மஜ்லிஸ் துஆவுடனும் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவு பெற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நிறைவேற நல்லருள் புரிந்த வல்லவன் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.
– Riyadh Tramil Dawah Onriyam
அஸ்ஸலாமு அலைக்கும்
எனக்கு சரியான விடை தாள் வேண்டும். நான் எதில் தவறு செய்திருக்கிரேன் என்று அறிய
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
மேற்கண்ட போட்டிக்கான விளம்பரத்தை இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் வெளியிட்டதால் போட்டியின் முடிவையும் வெளியிட்டோம்.
இதுபோன்ற போட்டின் மூலமாக இஸ்லாமிய மார்க்க விளக்கததை மக்களிடம் கொண்டு செல்வதற்காக அவர்களுக்கு நன்றியையும் போட்டியின் பங்கு கொண்டவர்களுக்கு வாழ்த்துகளையும் இஸ்லாம்கல்வி.காம் தெரிவித்துக்கொள்கிறது. மார்க்க விளக்கத்தை அனைவரும் பெற்றுக்கொள்வோமாக.
கட்டுரையை சமர்பித்ததுபோலவே உங்களின் கேள்விகளையும் நேரடியாக சமர்க்கும்படி அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
நிர்வாகி – இஸ்லாம்கல்வி.காம்