ஆளோ அவளோ ஒருசிறுமி
அன்று பார்த்தேன் பயணத்தில்
நீளும் விழிகள் சிரித்திருக்கும்
நீண்ட கூந்தல் தங்கநிறம்
மாலைப் பரிதி போன்றிருக்கும்
மனதைத் தீண்டும் வண்ணமவள்
கோல மயில்போல் மகளெனக்கு
கொடுப்பாய் இறைவா என்றிறைஞ்ச
–
இறங்கிச் செல்ல எழுந்தவளும்
எடுத்தாள் செயற்கைக் கால்களையே
பறங்கிப் பூவைப் போன்றமகள்
பாவம் கால்கள் இல்லாமல்!
கிறங்கிப் போனேன் புலம்பிவிட்டேன்
கால்கள் உண்டே நான்செல்ல!
இரக்கப் பார்வை எனக்குள்ளே
இறைவா! என்னை மன்னிப்பாய்!
–
கால்கள் கண்கள் செவிப்புலனும்
கருணை இறைவன் கொடையன்றோ
நாள்கள் ஓடும் காலத்தில்
நன்றி மறத்தல் முறையாமோ?
–
இனிப்பை விற்றார் ஒருமனிதர்
எழுந்து போனேன் வாங்கிடவே
இனிமை சொல்லால் வென்றவர்க்கு
இதய வாழ்த்தை சொல்லிவிட்டேன்
பணிந்து நன்றி தெரிவித்து
பார்வை தனக்கு இல்லையென்றார்
நினைத்தேன் இறைவா என்னிலையை!
நல்ல பாடம் படித்துவிட்டேன்
–
கருணை செய்தாய் காருண்யா!
கண்கள் பனித்தே கலங்குகிறேன்
இரவைப் பகலை இவ்வுலகை
இனிதாய் நானும் பார்க்கின்றேன்
இரவும் பகலும் தொழுதாலும்
இருகண் அருளுக்(கு) இணையிலையே!
அருளைப் பொழியும் என்னிறையே
அடியேன் என்னை மன்னிப்பாய்!
–
(கால்கள் கண்கள் செவிப்புலனும்
கருணை இறைவன் கொடையன்றோ
நாள்கள் ஓடும் காலத்தில்
நன்றி மறத்தல் முறையாமோ?)
–
அழகுச் சிறுவன் ஒருவனையே
அன்று பார்த்தேன் வீதியிலே
பழகும் தோழர் விளையாட்டில்
பாவம் இவனோ தனிமையிலே!
சுழலும் பார்வை பார்த்தவனை
சேர்த்தே அணைத்து கேட்டுவிட்டேன்
அழகாய் நீயும் விளையாடேன்
ஆனால் அவனோ கேட்கவில்லை
–
நகர்ந்து சென்ற சிறுவனுக்கு
நிலையாய் செவியின் திறனில்லை
பகர்ந்தார் பிறரும் என்னிடத்தில்
பாவப் பார்வைப் பார்த்துவிட்டார்
தகர்ந்தேன் நானும் என்னிறைவா!
தந்தாய் எனக்குச் செவிப்புலனை
நுகர்ந்தேன் புலன்கள் நல்லின்பம்
நன்றி உரைக்க மறந்துவிட்டேன்
–
காதால் கேட்க முடிவதிலே
கருணை பெரிதும் உணர்கின்றேன்
நீதம் செய்தாய் என்னிறைவா
நினைத்து நினைத்து புகழ்கின்றேன்
போதம் தந்தாய் இன்றெனக்கு
பார்த்தேன்; கேட்டேன் படிப்பினைகள்
ஆத ரிப்பாய் என்றைக்கும்
அடியேன் என்னை மன்னிப்பாய்
–
(கால்கள் கண்கள் செவிப்புலனும்
கருணை இறைவன் கொடையன்றோ
நாள்கள் ஓடும் காலத்தில்
நன்றி மறத்தல் முறையாமோ?)
Inspired by Islamic Nasheed “Forgive Me” (Song by Bro. Ahmed Bukhatir – without music)
தமிழில்
Read more about the singer: http://en.wikipedia.org/wiki/Ahmed_Bukhatir
Good efforts which shows the good heart of the writer.
மனத்தில் பதிந்த கவிதை – நினைத்து நினைத்துப் புகழ்வதற்கு.
உணர்வுப்பூர்வ வரிகள். (அதிகம் பரிச்சயமில்லாத சொற்களுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுத்தால் முழுமையாகப் புரியும்)
மனதை நெகிழச் செய்யும் வரிகள்..! அருமை!
Masha Allah. Beautiful.
What is parangi poo and maalai paridi ?
As far as my tamil knowledge paridi is horse. Does it mean sun also?
If you mention the meaning of “unknown” tamil words below of the poem, we will be grateful :)
அருளாளனின் அருளை நினைத்துப் பார்க்க அருமையான சந்தர்பம்.
Dear Brother,
A real touching poem.
Anbudan
Hyder
நீ கொடுத்தற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் !!! இதில் அடுத் அடுத்கேட்பதற்க்கு அஞ்சுதே என் மனம் என்ற வரிகளுக்கேற்ப அமைந்துள்ளது.
மாற்றுத்திறனளிகளுக்கு மனதில்
வைத்து அழகிய கவிதை,தொடரட்டும்
இறைப்பணி இறையச்சத்துடன்.
SALAAM!
FANTASTIC KAVITHAI
இறைவன் நமக்களித்திருக்கும் அருட்கொடைகளை நினைக்க வைத்த கவிதை.
அருமை !!!
நீ கொடுத்தற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்
அல்லாஹ்வுடைய அருள்கொடைகளில் ஒரு அருள் கொடையுடைய பெறுமதி விளங்கி அதற்கு நன்றி செலுத்த நாள் முழுதும் சுஜூது செய்தாலும் அந்த அருட்கொடைக்கு ஈடாகாது.
யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! ஆமீன்.
அவசர உலகில் அருளாளனின் அருள்களை மறந்திருக்கும் மனித உள்ளங்களுக்கு அழகான நினைவூட்டல். மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்
கால்கள் கண்கள் செவிப்புலனும்
கருணை இறைவன் கொடையன்றோ
நாள்கள் ஓடும் காலத்தில்
நன்றி மறத்தல் முறையாமோ?
அருமை. வாழ்த்துக்கள் சகோதரரே! ஒவ்வருவரும் சிந்திக்கவேண்டியது தொடரட்டும்!
கருத்தளித்த சகோதரர்களுக்கு மிகவும் நன்றி.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
சகோ. அஹமது புகாதீர் அவர்களின் காணொளியை அனுப்பிக் காணச் செய்து தமிழில் உணர்வூட்டும் கவிதை எழுதுங்களேன் என்று உற்சாகமூட்டிய நண்பருக்கும் நன்றி.
தமிழ் சுவை மிக இக்கவிதையைய்த் தமிழாக்கி தந்த இப்னு ஹம்துன் வாழும் காலத்தில் நானும் வாழ அருள் செய்த இறைவனுக்கு நான் நன்றி சொல்லிவிட்டேன். தமிழின் மாண்பை உணரா தமிழரை இறைவா நீ மன்னிப்பாயாக.
ஐம்புலன்களும் சரியில்லையேல் கைம்பெண்ணும் கருதாள் என்று ஓரிடத்தில்
மேடைப்பேச்சில் குறிப்பிடக் கேட்டேன். இறைவன் சொத்து கொடுக்க வில்லை
சுகம் கொடுக்கவில்லை என்று புலம்புவோர்களுக்கு இக்கவிதை நல்லதொரு
பாட(லா)மாக அமையும்.
ஊடகஙளில் எளிய தமிழில் விழிப்புணர்ச்சியை பறைசாற்றும் கவிதைகள்
குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில் கவிஞரின் இந்த கவிதை மிக எளிமையாய்
அருமையாய் பள்ளி கூடத்தில் செய்யுள் படிக்கும் இனிய இசைத் தன்மையுடன்
அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் என்று கொண்டாட கண்களையும்
வெறும் கை மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்று கொண்டாட கரங்களையும்
விரல்களையும்,காலுக்கு செருப்பு இல்லையே என கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு மத்தியில் காலே இல்லாதவரை பற்றி நினைக்க வைத்து இப்படி நுகர்சுவை செவிப்புலம் என்று எல்லாமே குறைவறத் தந்திருக்கும் இறைவனை கொண்டாடத்தோணும் , நன்றி சொல்லத் தோன்றும், எப்போதும் அந்த கருணையை போற்றத் தூண்டும் விதமாக விதம்விதமாய் பத்தி பிரித்து எளிமையாய் சொன்ன
கவிஞர்க்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்..
இந்தப் பணி தொடர இன்னும் எழுத்துகள் வளர அவை ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்டு
மிளிர இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.
Tears rolled down on our face, and eyes were full of tears “innal insana li rabbihi lakanuuth”
Good effort ,Allah bless you.Bring some more other poems to pno website.
masha Allah.
ennudal parkiren athil iray arul kankiren. Alhamdhulillah.
Thanks to Almighty Allah and dua for your reminder.
Ghazali@Colombo, Srilanka.
Dear Fakhrudeen,
Greetings!
First of all, let me thank u for making me and helping me to listen the Noble song of Bro.Ahmed Bukhatir – Forgive Me.
Thanks a lot.
அஹ்மது அவர்கள் பாடிய கவிதையின் கருவை நன்கு புரிந்துகொண்டு ,
சொல்லழகு மிகுந்த தமிழ்க் கவிதையை மிகக்கவனத்தோடு வடித்திருக்கிறீர்கள் .
பாராட்டுக்கள் !
கவிஞர் அவருக்கே உரிய சொல்நயத்தோடும்,பொருளாழத்தோடும் அற்புதமாகக் கவிதையை
எழுதியிருக்கிறார் .உ .ம் “:
நீளும் விழிகள் சிரித்திருக்கும்
நீண்ட கூ ந்தல் தங்கநிறம் .”
—
“அழகுச் சிறுவன் —–
பழகும் தோழர்
சுழலும் பார்வை ”
இன்னும் நிறைய நிறைய ….
இன்னும் சிந்திக்கவும் நிறைய நிறையக் கருத்துக்கள்.
நண்பர் ஒரு கவிஞர் மட்டுமல்ல சிந்தனையாளரும் ஆவார் .
அவரும் சிந்திக்கிறார் …சிந்தித்துக் கவிதை எழுதுகிறார் …..நம்மையும் சிந்திக்க வைக்கிறார்.
‘இறைவா என்னை மன்னிப்பாயா ?’ —-கவிதை ஒரு அருமையான ‘சிந்தனைக் கவிதை’.
ஒரு அழகான சிறுமியைப் பார்க்கும்போது,தனக்கு அவளைப் போன்றதொரு குழந்தை வேண்டும்
என்று எண்ணுவதில் தவறில்லை……ஊனம் என்பது தெரிந்த பின்பு ……இரக்கப்படுவதும் மனித இயல்பு .
இதேபோலத்தான், மற்ற குறைகள் பற்றிய கவிதைச் செய்திகள்.
ஊனம் ,உடல் குறைபாடுகள் உள்ளவர்களைப் பார்க்கும்போது நெஞ்சு கனக்கத்தான் செய்யும்.
“இறைவா ” என்று நம்மையும் அறியாது, இரு கைகளையும் மேலே தூக்கிக் கும்பிடுவோம் .”எமை நன்றாய்ப்
படைத்த இறைவா உமக்கு நன்றி” என்ற குரல் நமக்குள் ஒலிப்பது நமக்குக் கேட்கத்தான் செய்யும் !
“அரிது ,அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதனினும் அரிது கூன் குருடு செவிடின்றிப் பிறத்தல் ”
என்ற ஒவைப்பிராட்டியரின் முதுமொழிக்கு ஏற்ப முழு மனிதர்களாய்ப் பிறந்திருக்கும் நாம் இறைவனை
நாள்தோறும் நினைந்து ,வணங்கி , அவருக்கு நன்றி சொல்லவேண்டும் . நம் இந்தப் பிறப்பே கடவுளின் கருணை
என்பதை உணரவேண்டும்.
இவ்வாறு முழு மனிதப்பிறவி பெற்றமைக்கு, நாம் இறைவனுக்கு நன்றி கூறும் தருணத்தில், குறையோடு
பிறந்திருக்கும் மற்றவர்களுக்காக நாம் என்ன செய்யலாம் என்று சிந்தித்துச் செயல்படலாமே என்பது எனது
இறைமைச் சிந்தனை!.
“ஊனம் உன் குறையல்ல …நீ ஊக்குவிக்கப்படும்பொழுது ” என்ற எனது சிந்தனையில் ….
“ஊக்குவித்தல் ” என்ற ‘ஊன்றுகோல்’ அவர்களுக்குக் கிடைக்க நாம் ஏதாவது ஒரு வகையில் நம்மால் இயன்றதைச்
செய்யலாமே ! (இங்கே திருமூலரின் தத்துவம் அறிக).
இன்னும் நிறைய…..
“புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
ஒப்புரவின் நல்ல பிற “.
இங்கே ….ஒப்புரவின் மேன்மையாகச் சொல்வதை ….’.சமுதாயச் சேவையின் ‘ உயர்வுக்காகவும் ……இந்தக்
குறளைச் சிந்தித்துப் பார்க்கலாம் .
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மிகச்சிறந்த நினைவுட்டல், அல்லாஹ் கொடுத்திருக்கும் அமானிதம் கால்கள், கண்கள், செவிப்புலனும்,
நம்மை நாமே கேள்வி கேட்கும் சிறந்த வரிகள் நன்றி மறத்தல் முறையாமோ?
அனிஸ்
Allah evalavu periya kirubai seidhu irukiran nandri marandhavargal naam enbadhai unarndhuvitom.
Alhamdhulillah
அஸ்ஸலாமு அலைக்கும்.
சிறந்த பதிவு .அருமையான கவிதை தந்துள்ளார் இப்னு ஹம்துன்.
தன் அழகிய குரல்வளத்தால் சிறப்பு சேர்த்திருக்கிறார் நண்பர் பாடகர் Jafarullah Jafar.. இதனைப் பதிவிட்ட நண்பர் Mufti Inayathullah வுக்கும் ஒரு சிறப்பு வாழ்த்துகள் Jazaakum’Allah Khairan.”May Allâh reward you [with] goodness.”.
ماشاءالله ممتاز, so lovely song very sweet heart touching, அருமையோ அருமை அழகு வரிகள்அள்ளி தந்த அண்பர்க்கு வாழ்த்துகள்