உரோமர் தகர்த்தெறிந்த
உஸ்மானிய பேரரசு வேண்டாம்
மங்கோலியர் படையெடுத்த
அப்பாசியர் ஆட்சியும் வேண்டாம்
மார்க்கத்தின் பெயரால்
மரணமும்
இனத்தின் பெயரால் இயலாமையும்
இக்கணமே முடிய வேண்டும்
அது உங்கள்ட வரவால் வேண்டும்
இன்னும்,
தலைமைக்குத் தகுதி வேண்டும்
தர்க்கங்கள் தவிர்க்க வேண்டும்
தார்மீகம் கொள்கையாகி அதில்
ஆன்மீகம் ஜொலிக்க வேண்டும்
எதிரி பலம் உணர வேண்டும்
எதிரி வாழ்வியலும் நீங்களறிய வேண்டும்
சுயவிசாரணை செய்தேனும்
உங்கள்
பலவீனம் போக்க வேண்டும்
எதிர்வினைகள் சுருக்கிட்டால்
தந்திரமாய் அவிழ்க்க வேண்டும்
சுதந்திரங்கள் சுரண்டப்பட்டால்
உரிமைக் குரலும் தர வேண்டும்
பதவிக்குள் பணிவு வேண்டும்
பணிவுக்குள் நீதி வேண்டும்
படைத்தவன் கேள்விக்குக்
கணீர் விடைதர வேண்டும்
உறுதி பூண்ட நெஞ்சுரம் வேண்டும்
உமர் (றழி)யின் நீதி வேண்டும்
வேலைப் பிரிப்பு செய்வதிலே
நுட்பம் அதிகம் இருக்க வேண்டும்
தூரநோக்குப் பார்வை வேண்டும்
இலட்சியங்கள் பலவும் வேண்டும்
ஹுதைபியா உடன்படிக்கை
அங்கேயிங்கே உயிர்க்க வேண்டும்
சேவை மனம் வேண்டும்
எம் தேவைகள் குறைய வேண்டும்
வாக்களித்த பேரெல்லாம்
வாழ்த்து மொழி பகர வேண்டும்
பேச்சில் தெளிவு வேண்டும்
பேசாத செயல்கள் வேண்டும்
பெரியார்கூடி மஷுறா வேண்டும்
மஹ்ஸரிலும் மணக்க வேண்டும்
இப்படிக்கு
உண்மையுள்ள,
வாக்காளன்
– பர்சானா றியாஸ்
அருமை
நன்றி!
ஜிஹாத் மார்க்கத்தில் ஓர் முக்கிய அங்கமாக இருக்கும் போது மார்க்கத்தின் பெயரால் மரனம் வேன்டாம் என்று சொல்வது எவ்வாறு பொருந்தும்
கருத்து சரி. ஆனால், அந்த மரணம் சரியான தலைவர்/அரசியல்வாதி இல்லை என்ற காரணத்தினால் நிகழ்ந்தால் அது சமுகத்திற்கு ஆரோக்கியமற்ற நிலைதானே சகோ.
நன்றி!