Featured Posts

அல்குர்ஆன் பார்வையில் ஈஸா (அலை)

– M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி

ஈஸா (அலை) அல்லாஹ்வின் அற்புதப்படைப்புகளில் ஒன்று. உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சி. அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் கூறும் அத்தாட்சிகளில் ஈஸா நபியின் பிறப்பும் ஒன்றாகும். ஏனைய இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டது போன்ற ஒரு அத்தாட்சி இவருக்கும் வழங்கப்பட்டது. நிச்சயமாக ஈஸா (அலை) ஒரு தூதராவார். அவர்களை முஸ்லிம்களும் கிறிஸ்வர்களும் மதிக்கிறார்கள். ஆனால் இறுதி வேதம் குர்ஆன் சொல்லுகின்ற முறையில் ஈஸா நபியை கிறிஸ்தவர்கள் நம்பவுமில்லை ஏற்கவுமில்லை.

இவர்களது நம்பிக்கைகளும் கொள்கைகளும் தவறானவை ஈஸா நபி போதித்தவைகளுக்கு முரணானவை என்று அல்குர்ஆனும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவுப்படுத்துகிறது. அல்குர்ஆன் கூறும் உண்மையை சுருக்கமாக புரிந்து கொள்ளவோம்.

ஈஸா நபியின் (அற்புத) பிறப்பு:-

إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ

மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்வார்த்தையின் மூலம் உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல் மஸீஹ் என்பதாகும். அவர் இவ்வுலகிலும் மறுமை யிலும் உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களில் உள்ளவராகவும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார் என வானர்கள் கூறியதை (எண்ணிப்பார்பீராக.)

மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் இளமை பருவத்திலும் மக்களி டம் பேசுவார். மேலும் அவர் நல்லவர்களில் உள்ளவருமாவார் என்றும் கூறினர்

அதற்கு மர்யம் எனது இரட்கசனே! எந்த ஆணும் என் னைத் தீண்டாத நிலையில் எனக்கு எவ் வாறு குழந்தை உருவாகும்? என்று கேட்டார். அவ்வாறே அது நடக்கும் என்று அவன் கூறினான். அல்லாஹ் தான் நாடுவதைப்படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அல்லாஹ் முடிவு செய்துவிட்டால் “ஆகுக” என்பான். உடனே அது ஆகிவிடும் (3:45-47)

وَالَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِنْ رُوحِنَا وَجَعَلْنَاهَا وَابْنَهَا آيَةً لِلْعَالَمِينَ

தனது கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் எனும்) பெண்ணிடத்தில் நமது உயிரிலிருந்து (ரூஹிலிருந்து) ஊதி னோம். (அவள் கருத் தரித் தாள்) அவளையும் அவளது குமாரனையும் உலகத்தாருக்கு ஓர் அத் தாட்சியாக்கினோம். (21:91)

தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியவர்:

فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا

(ஈஸாவை பெற்றெடுத்து) அவரை சுமந்தவராக தனது கூட்டத் தாரிடம் (மர்யம்) கொண்டு வந்த போது மர்யமே! விபரீதமான ஒரு செயலைச் செய்து விட்டாயே எனக் கூறினர்.ஹாரூனின் சகோதரியே உமது தந்தை கெட்ட மனிதராக இருக்குவுமில்லை.உமது தாயாரும் நடத்தைக் கெட்டவராக இருக்கவும் இல்லையே எனவும் கூறினர். அப்போது மர்யம் தம் குழந்தையை சுட்டிக் காட்னார்.தொட்டில் குழந்தையாக இருப்பவரிடம் நாம் எப்படி பேச முடியும் என அவர்கள் கேட்டனர்.(19:27.28.29.)

தொட்டில் குழந்தையாக இருக்கும் போது நபியாக ஆக்கப்பட்டவர் இன்ஜீல் வேதம் கொடுக்கப்பட்டவர்:-

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا

…(தொட்டிலிலிருந்தவாறு) நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமை யாவேன். அவன் எனககு வேதத்தை வழங்கி நபியாகவும் ஆக்கி யுள்ளான் என்று (அக்குழந்தை )கூறியது. (19:30)

மூஸா நபிக்கு கொடுக்கப்பட்ட வேதத்தை உண்மைப் படுத்தியவர்:

وَقَفَّيْنَا عَلَى آثَارِهِمْ بِعِيسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَآتَيْنَاهُ الْإِنْجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ

தமக்கு முன்னுள்ள தவ்ராத்தில் இருப்பதை உண்மைப்படுத்து பவராக மர்யமின் மகன் ஈஸாவை (நபிமார்களான) அவர்களின் அடிச்சு வட்டில் நாம் தொடரச் செய்தோம். மேலும் நாம் அவருக்கு இன்ஜீலையும் வழங்கினோம். அதிலே நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. இன்னும் அது தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப் படுத்தக் கூடியதாகவும் நேர்வழியாகவும் பயபக்தியாளர்களுக்கு நல்லுபதே சமாகவும் இருக்கிறது.(5:46, 3:48, 5:110, 57:27)

யூதர்களுக்கு மட்டும் தூதுவராக அனுப்பப்பட்டவர்:-

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ

இஸ்ராயிலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் உங்க ளுக்கு அனுப் பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என மர்யமின் மகன் ஈஸா கூறினார். (61:6, 3:49, 61:14)

ஈஸா நபி போதித்த மார்க்கம், இஸ்லாம்:-

شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَنْ يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ

நூஹுக்கு எதை அல்லாஹ் வலியுறுத் தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) மார்க்கத்தை நிலை நாட்டுங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே உமக்கு நாம் வஹி யாக அறிவித்ததும் இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததுமாகும். நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ, அது இணை கற்பிப்போருக்குப் பழுவாக இருக்கின்றது. அல்லாஹ் தான் நாடி யோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். தன்னிடம் மீளுவோரை நேர்வழியில் செலுத்துகிறான். (42:13)

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ

அல்லாஹ்விடம் நிச்சயமாக மார்க்கம் (என்பது) இஸ்லாம்; தான். வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் அறிவு வந்த பின்னரும் தமக்குள் காணப்பட்ட பொறாமையின் காரணமாகவேயன்றி முரண் படவில்லை. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக் கின்றார்களோ (அவர் களை) நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் தீவிர மானவன்.(3:19)

ஈஸா நபி போதித்த ஓரிறைக் கொள்கை:-

إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ

நிச்சயமாக அல்லாஹ்வே எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனு மாவான். எனவே அவ னையே வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும் என ஈஸா கூறினார். (3:51)

ஈஸா நபியின் சீடர்களும் முஸ்லிம்களே:-

فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ

(யூதர்களாகிய) அவர்களிடம் இறை மறுப்பை ஈஸா நபி உணர்ந்த போது அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்? என்று கேட்டார். அதற்கு ஹவாரிய்யூன் (எனும் அவரது சீடர்கள்) நாங்கள் அல்லாஹ்வின் உதவி யாளர்கள். நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் மேலும் நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சியாளராக இருப்பீராக என்று கூறினர். (3:52, 5:111)

அல்லாஹ்வின் உத்தரவுப் படி ஈஸா நபி காட்டிய அற்புதங்கள்:-

وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِ الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

நிச்சயமாக நான் உங்களுக்கு உங்கள் இரட்சகனிடமிருந்து ஒரு அத் தாட்சியைக் கொண்டு வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண் ணால் ஒருபறவையின் தோற்றத்தைப் போல் உருவாக்கி அதில் ஊது வேன். உடனே அல்லாஹ் வின் அனுமதி கொண்டு அது (உயிருள்ள) பறவையாகி விடும். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பிறவிக் குரு டரையும் குஷ்டரோகியையும் குணப்படுத்துவதுடன் இறந்தோரையும் உயிர்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும் உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பவற்றையும் உங்க ளுக்குக் அறிவிப்பேன். நீங்கள் விசுவாசம் கொணடவர்களாக இருந்தால் நிச்சயமாக இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி உள்ளது (என்றார் ஈஸா நபி). (3:49, 5:110-114)

ஈஸா நபி கடவுளல்ல:-

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ قُلْ فَمَنْ يَمْلِكُ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ أَنْ يُهْلِكَ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا يَخْلُقُ مَا يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ் என்று கூறியோர் (ஏக இரட்சகனான அல்லாஹ்வை) நிராகரித்து விட்டனர். மர்ய மின் மகன் மஸீஹையும் அவரது தாயாரை யும் பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்? என்று நபியே நீர் கேட்பீராக. வானங் கள் பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப் பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்ற லுடையவன். (5:17)

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ

நிச்சயமாக மர்யமின் மகன் அல் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இரட்சகனான அல்லாஹ்வை நிராகரித்து விட்ட னர். இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும் உங்கள் இறை வனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சுவர்க் கத்தை அல்லாஹ் தடுத்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம் தான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர் களும் இல்லை என்றே அல் மஸீஹ் கூறினார். (5:72)

ஈஸா நபி அல்லாஹ்வின் அடிமை:-

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ

நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன் என (ஈஸாவாகிய) அவர் கூறினார். (19:30)

لَنْ يَسْتَنْكِفَ الْمَسِيحُ أَنْ يَكُونَ عَبْدًا لِلَّهِ وَلَا الْمَلَائِكَةُ الْمُقَرَّبُونَ وَمَنْ يَسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهِ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا

(ஈஸா) மஸீஹோ நெருக்கமான வானவர்களோ அல்லாஹ்வுக்கு அடி மையாக இருப்பதை; தரக்குறைவாகக் கருதமாட்டார்கள். யார் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை தரக் குறைவாகக் கருதி பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (மறுமையில்) தன்னிடம் ஒன்று திரட்டுவான். (4:172)
ஈஸா நபி அல்லாஹ்வின் மகன் அல்ல மர்யம் (அலை)யின் குமாரர்):-

وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ

உஸைர் அல்லாஹ்வின் மகன் என்று யூதர்கள் கூறு கின்றனர். மஸீஹ் (ஈஸா) அல்லாஹ்வின் மகன் என்று கிறிஸ்தவர்கள் கூறு கின்றனர். இது அவர்களது வாய் களால் கூறும் (வெற்று ) வார்த் தைகளாகும். இதற்கு முன் (ஏக இரட்சகனை) நிராகரித்தோரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகின்றனர். அல்லாஹ் இவர் களை அழித்துவிடுவான். இவர்கள் எவ்வாறு திசைதிருப்பப் படுகின்றனர். (9:30)

مَا كَانَ لِلَّهِ أَنْ يَتَّخِذَ مِنْ وَلَدٍ سُبْحَانَهُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ

எந்தக் பிள்ளையையும்; தனக்கென எடுத்துக் கொள்வது அல்லாஹ் வுக்கு தகுமானதல்ல.அல்லாஹ் தூய்மையானவன். ஏதேனும் ஒரு விடயத்தை அவன் முடிவு செய்தால் அதற்கு ‘‘குன்’’ (ஆகுக) என்று கூறுவது தான் உடனே அது ஆகிவிடும்.(19:35)

முக்கடவுள் கொள்கையை போதிக்கவில்லை:-

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ

நிச்சயமாக அல்லாஹ் என்பவன் (பிதா சுதன் பரிசுத்த ஆவி என) மூவரில் ஒருவன் என்று கூறுபவர்களும் நிராகரித்து விட்டனர். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் ஒரே ஓரு இரட் சகனைத் தவிர வேறு யாருமில்லை. ஒரே இறைவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக் குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும். (5:73)

وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுளாக்கிக் கொள்ளுங் கள் என்று நீர்தான் மக்க ளுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது யா அல்லாஹ்! மிகத் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத வார்த்தையை நான் கூற எனக்கு எந்த அதிகாரமுமல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக மறைவான வற்றை நீயே அறிப வன் என்று அவர் கூறுவார்.

எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள் என்று நீ (கூறும் படி)நீ எனக்கு கட்டளையிட்டதைத் தவிர வேறு எதனையும் அவர்களுக்கு நான் கூறவில்லை.நான் அவர் களுடன் இருந்தபோது அவர்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களை கண்கானிப்பவனாக இருந்தாய். நீ தான் யாவற்றையும் கண்காணிப்பவனாக இருக் கின்றாய்.
அவர்களை நீ தண்டித்தால், நிச்சயமாக அவர்கள் உனது அடியார் களே! அவர்களை நீ மன்னித்தால் நிச்சயமாக நீ மிகைத்தவன், ஞான மிக்கவன் (எனவும் அவர் கூறுவார்). (5:116-118)

يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ انْتَهُوا خَيْرًا لَكُمْ إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ سُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதை யும்) கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையுமாவார். அவ்வார்த்தையை அவன் மர்யமிடம் போட்டான். அவனிடமிருந்து வந்த ஓர் ஆத்மாவே அவர்! ஆகவே அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசி யுங்கள். (கடவுள்கள்;) மூவர் என்று கூறாதீர்கள். அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அது) உங்களுக்குச் சிறந்ததாகும். நிச்சயமாக (வணங்கப்படத்தகுதியானவன்) அல்லாஹ ஒவனே. அவனுக்குப் பிள்ளை (மகன்) இருப்பதை விட்டும் அவன் மிகத்தூய்மையானவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. பெறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன். (4:171)

ஈஸா நபியின் அற்புதப்படைப்பு ஆதம் நபியின் படைப் புக்கு ஒப்பானது.

إِنَّ مَثَلَ عِيسَى عِنْدَ اللَّهِ كَمَثَلِ آدَمَ خَلَقَهُ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُنْ فَيَكُونُ

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும்.அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு (குன்) ஆகுக என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.(3:59)

முஹம்மத் நபி பற்றி ஈஸா நபியின் முன்னறிவிப்பு:

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ

இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவனாகவும் எனக்குப் பின் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுப வனாகவும் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதராவேன் என்று மர்ய முடைய மகன் ஈஸா கூறியதை நபியே (முஹம்மதே) நினைவூ ட்டுவீராக! ஆவர் தெளிவான சான்றுகளுடன் வந்த போது இது தெளிவான சூனியமே என அவர்கள் கூறினர்.(61:6)

ஈஸா நபி சிலுவையில் அறையப்படவில்லை:

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا

அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் மகன் ஈஸா மஸீஹை நாங்கள் கொலை செய்தோம் என்று அவர்கள் கூறியதினாலும் (சபிக்கப் பட்டனர்) அவர்கள் அவரை கொல்லவுமில்லை. அவரைச் சிலுவையில் அறையவு மில்லை. மாறாக அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கபட்டான்.நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து முரண்பாடு கொண்டோர் அவர் பற்றிய சந்தேகத்தில் இருக் கின்றனர். வெறும் யூகத்தை பின் பற்றுவதை; த் தவிர அவரைப் பற்றி எவ்வித அறிவும் அவர்களுக்கு இல்லை. உண்மையாக அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை; (4:156-157)

ஈஸா நபி அல்லாஹ்வின் பால் உயிரோடு உயர்த்தப் பட்டார்:-

بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا

மாறாக, அவரை அல்லாஹ் தன்னள வில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (4:158, 3:52-56)

ஈஸா நபியின் மீள் வருகை உலக அழிவின் ஓர் அடையாளம்:-

وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا

வேதமுடையோரில் எவரும் (அவர் பூமிக்கு வந்து ) மரணிப்பதற்கு முன்னரே அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். மறுமை நாளிலோ அவர் (வேதமுடைய)அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (4:159)

وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ

நிச்சயமாக் (ஈஸாவாகிய) அவர் இறுதிநாளின் அடையாளமா வார். அது குறித்து நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம். நீங்கள் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேர்வழியாகும் (என்று நபியே நீர் கூறும்) (43:61)

சத்தியத்தை நிராகரிக்கும் மக்களுக்கு அல்லாஹ் விடுக்கும் சவால்:

الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُنْ مِنَ الْمُمْتَرِينَ فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ إِنَّ هَذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا اللَّهُ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ عَلِيمٌ بِالْمُفْسِدِينَ

இவ்வுண்மைஉமது இரட்சகனிடமிருந்து வந்ததாகும்.ஆகவே சந்தே கம் கொள்வோரில் நீர் ஆகிவிட வேண்டாம்.(நபியே) உம்மிடம் அறிவு வந்த பின்னரும் அவர் விடயத்தில் யாரும் உம்மிடம் தர்க்கித் தால் வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளை களையும்எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும் எங்க ளையும் உங்களையும் நாம் அழைத்து பின்னர்நாம் அழிவு சத்தியம் செய்துஅல்லாஹ்வின் சாபத்தை பொய்யர்கள் மீதாக்குவோம் எனக் கூறுவீராக. நிச்சயமாக இது தான் உண்மையான சரித்திர மாகும்.(உண்மையில்)வணங்கப்படத்தகுதியானவன்அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சயமாக அல்லாஹ் தான் யாவற்றையும் மிகைத்தவன் ஞானமிக்கவன்.அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் நன்கறிவான்.(3:61;62)

ஈஸா நபியின் மரணம்:(உயிரோடு உயர்த்தப்பட்ட ஈஸா நபி உலக அழிவுக்கு முன் மீண்டும் பூமிக்கு வருவார். முஹம்மது நபியின் இஸ்லாமிய போதனை பிரகாரம் மக்களை வழிநடாத்துவார். அவரை நிராகரித்த யூதர்கள் உட்பட மக்கள் அனைவரும் விசுவாசம் கொண்டு முஸ்லிம்களாவார்கள். பூமியிலே இயற்கை மரணம் எய்துவார். அவருக்கு முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகை நடாத்தி நல்லடக்கம் செய்வார்கள் என நபி முஹம்மத் (ஸல்) கூறினார்கள் என்பதை ஹதீஸில்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *