Featured Posts

"கோலங்கள்" காட்டாதீர்கள் குழந்தைகளிடம்

உடை உடுத்துவது தொலைக் காட்சிக்கு முன் – தலை வாருவது தொலைக் காட்சிக்கு முன் – சாப்பிடுவது தொலைக் காட்சிக்கு முன் – விளையாடுவது தொலைக் காட்சிக்கு முன் – படிப்பது தொலைக் காட்சிக்கு முன்

http://chudar.blogspot.com/2005/03/blog-post_20.html

ஒரு காலத்தில் தெருக்களில் குழந்தைகளின் விளையாட்டு சப்தம் இருக்கும். அதுவே அவர்களுக்கு உடற்பயிற்சியாக – கிட்டுப்பிள்ளை, சில்லுக்கோடு, ஓடிப்பிடிச்சி, கபாடி மற்றும் பம்பரம் என சீசனுக்கு தகுந்தார்போல் மாறுவதுண்டு. கடைசியாக பம்பரம் சுற்றும் இடம்பார்த்து அதிர்ச்சிதான் மிச்சம். பிறகு அது ஆம்லேட் போடும் இடமாக மாறிவிட, தற்போது நிலவரத்தை கேட்காதீர்கள்.

நண்பர்களுடன் இருக்கும்போது வெளிநாட்டு வாழ்க்கையிலிருந்து விடுபடும்நேரத்தில் என்ன தொழில் செய்யலாம் என்ற பேச்சு வந்துவிட்டது.

“மக்கள் ரொம்ம்ம்ப பிஸி. வீட்டு தேவைகள் (ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்குவது உட்பட) அனைத்தும் நிறைவேற்றும் சர்வீஸ் செய்யலாம்” என்றார் ஒருவர்.”

மக்கள் தற்பொழுது தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கி உள்ளார்கள். பாவம், அவர்களுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு பொட்டலம் செய்து கொடுக்கும் சர்வீஸ் செய்யலாமே” என்றார் இன்னொருவர்.

“ஊட்டிவிடும் சர்வீஸ்” வரை பேச்சு வந்து நின்றது.

தொலைக்காட்சியில் செய்தி நேரத்தில்தான் பெண்கள் மற்றவேலைகள் பார்ப்பது வழக்கம். இவர்களைச்சொல்லி குற்றமில்லை. தொலைக்காட்சி தொடர்களில் வரும் பாத்திரங்களுக்குரிய பிரச்சினைகளின் கவலை தாய்மார்களுக்கு. உணவுப் பாத்திரங்கள் காலியாக நமக்கு.

சன் டீவியில் மட்டுமா “ஆனந்தத்”திற்கு பிறகு “கோலங்கள்” காட்டுகிறார்கள்.

நிஜவாழ்க்கையிலும்தான்.

செய்திகள் வந்தவுடன் நல்லடக்கம். (டீவிக்குத்தான்).

உருப்படுமா குழுந்தைகள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *