Featured Posts

ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.

ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது.

Read More »

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-13

ஈர்க்கும் பூமி 13 ஏ.கே.அப்துர் ரஹ்மான் பரந்து விரிந்து கிடக்கும் நமது பூமி மானிட உள்ளங்களில் தட்டை வடிவம் கொண்டிருந்தபோது அது எதன் மீது நிலை பெற்றிருக்கிறது என்ற வினாவும் எழத்தான் செய்தது. இதற்கு விடை காண முயன்ற சில கற்பனை காவியங்களும், சில போதைக் கனவுகளும் நமது பூமியை பன்றியின் மூக்கின் மீது நிற்பதாகக் கண்டன. மேலும் நில கற்பனைகள் நமது பூமியை ஒரு மீனின் வாலின் மீது …

Read More »

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 3

தமிழோவியத்தில் கடந்த இருவாரங்களாக வஹீ (வேத வெளிப்பாடு) பற்றிய தவறான புரிந்து கொள்ளுதல்களின் பெயரால் முஸ்லிம்கள் மீதான சிந்தனைத் தாக்குதல்களையும் அத்தாக்குதல்களின் பின்னனியையும் அலசினோம். இந்த வாரம் வெளியான “அடிப்படையும் அடிப்படைவாதமும்” என்ற தொடரை தமிழ்மணம் வாசகர்களுக்கு மறுபதிவு செய்கிறேன். இத்தொடருக்கான பின்னூட்டங்களை இங்கு காணலாம். அ) அடிப்படையும் அடிப்படைவாதமும் அடிப்படைவாதம் (Fundamentalism – The interpretation of every word in the Bible as literal truth …

Read More »

ஒரே ஸஹாபியின் கூற்று சான்றாகுமா?

ஒரு ஸஹாபியின் குறிப்பிட்ட தனிமையான ஒரு அபிப்பிராயத்தை மார்க்க விதிகளுக்குச் சான்றாக எடுக்கப்படுமா இல்லையா என்பதில் அறிஞர் சிலர் அபிப்பிராய பேதங்களைக் கூறியுள்ளனர். ஸஹாபாக்களில் ஒருவரின் கருத்து குர்ஆன், ஹதீஸ் நேருரைகளுக்கு (நஸ்ஸுக்கு) மாறாக இல்லையென்றால் அது ஆதாரமாகக் கொள்ளப்படும். ஒருவரின் அபிப்பிராயத்தை அனைத்து ஸஹாபாக்களும் புறக்கணிக்காமல் இருக்கின்ற போதும் அது சான்றுடையதாக மதிக்கப்படும். இதற்கு ‘இஜ்மாவுன் இக்ராரிய்யுன்’என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் தவறுதலான அபிப்பிராயம் கூறப்படுமானால் மற்ற ஸஹாபிகள் அதனை …

Read More »

இந்தியாவில் இஸ்லாம்-3

ஆண்டு – தேதிகளில் காணப்படும் குளறுபடிகள் இன்று நம் கைகளில் இருக்கும் வரலாற்று நூல்களில் காணப்படும் ஆண்டு தேதிகள் உண்மையானவையல்ல. வரலாற்று நூல்களில் கி.பி.10-ம் நூற்றாண்டிற்கு முன்புள்ள அனைத்தும் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்டவை. ஒவ்வொரு அரசர்களும் ஆட்சி பீடத்தில் ஏறும் நாள் முதல் ஆட்சி ஒழியும் நாள்வரையிலான ஆண்டுகள்தான் அன்று கணக்கிடப்பட்டு வந்தன. தொடர்ச்சியான ஒரு ஆண்டு கி.பி.10-வது நூற்றாண்டுக்கு முன்புவரை நடைமுறையில் இல்லாமல் இருந்தது. கீழே தந்துள்ள …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 7

முஸ்லிம்களை தீயிட்டு கொளுத்திய கயவர்கள் எந்த வித சலனமும் இல்லாது அமைதியாக திரும்ப சென்றனர், தங்களுடைய வேலை முடிந்த திருப்தியில். எரிந்து கொண்டிருந்த முஸ்லிம்களின் கதறல் இவர்களை இம்மி அளவும் கரைத்திட வில்லை. மாறாக எரிவதை கண்டு ரசித்தார்கள். இவர்களின் கல் மனதுக்கு இன்னொரு சான்றாக அமைந்தது சாலியா பீவி என்ற பெண்ணுக்கு இவர்கள் செய்த கொடுமை. முஸ்லிம் பெண்களே முக்கிய இலக்கு சிலுவை போரின் போது, கிருஸ்தவ மதவெறியர்கள் …

Read More »

நினைவலைகள் (சிறுகதை)

பஷீர் அஹமது உள்ளே நுழையும் போது… “மிலிட்டரி லைன் ஜும்மா பள்ளிவாசல்” என்று பெரிய பலகையில் எழுதியிருந்தது. பள்ளிவாசலுக்கும் பஷீர் அஹமதுக்கும் உள்ள தொடர்பு மிக்க ஆழமானது. பள்ளியைச் சுற்றி கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தனர். பள்ளிவாசலின் உள்ளே நுழைந்ததும் இடது கோடியில் “சிந்தா மதார்ஷா ஒலியுல்லா தர்ஹா” என்று பச்சை நிறப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. மண் வாசனையுடன் கூடிய ரம்யமான குளிர்ந்த காற்று. இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.

Read More »

சுமைதாங்கி (சிறுகதை)

ஊசியால் குத்தும் குளிர் காற்றில் ஊரே அடங்கியிருந்தது. தலையில் மஃப்ளரை சுற்றி உடல் முழுவதையும் கம்பளிப் போர்வையால் போர்த்தி வாசலில் அமர்ந்திருந்தார் காவலாளி மம்முசாலி.

Read More »

அவர்கள் உங்கள் சகோதரர்கள்! (நீதிக்கதை)

நினைவு தெரிந்த நாள் முதல் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறை வேற்றி வந்த அஹ்மது பாய் அன்று பத்து நிமிடம் தாமதமாகி வந்ததால், ஜமாஅத்தை தவற விட்டுவிட்டார். அந்த ஆதங்கத்தில் தொழுகை நேரம் முடிவதற்குள் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட வேண்டுமே என பள்ளியை நோக்கி விரைகிறார்.

Read More »

கனாக் கண்டேன்(டி) [சிறுகதை]

“சும்மா இருங்கம்மா! இப்படி பணம். பணம்ன்னு அலையறவங்களுக்கு உறைக்கிறமாதிரி நாலு வார்த்தை கேட்டால்தான் புத்தி வரும். கல்யாணங்கறது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு லட்சம் வேணும் 100 பவுன் நகை வேணும்னு வியாபார ஒப்பந்தம் போட வந்துருக்காங்க”.

Read More »