Featured Posts

Tag Archives: இலங்கை முஸ்லிம்கள்

சுதந்திர இலங்கையும் முஸ்லிம் சமூகமும்

-எம்.ஐ அன்வர் (ஸலபி)- பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து இலங்கை சுயாட்சியைப் பெற்று 71 வருடங்களாகிறது. இலங்கை வரலாற்று நெடுகிலும் மேற்குலக நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டே வந்துள்ளது. 1505 முதல் 1658 வரை போர்த்துக்கேயரும் 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தர்களும் 1796 முதல் 1948 பெப்ரவரி 04 ஆம் தேதி வரை ஆங்கிலேயர்களும் இலங்கை மண்ணை ஆண்டு வந்துள்ளனர். தமது அதிகாரத்துக்குள் வைத்திருந்த சில நாடுகளுக்கு முதற்கட்டமாக மேலாட்சி என அறியப்படும் …

Read More »

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 02

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 01 பாவாத மலையும் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும் முதல் மனிதர் வாழ்ந்த பிரதேசம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. இஸ்லாமிய அறிஞர்கள் நூற்கள் பலவும் முதல் மனிதர் இந்து பிரதேசத்தில் செரண்டிப் எனும் பகுதியில் ஒரு மலையில் முதலில் இறக்கப்பட்டார் என்ற கருத்தை முன்வைப்பதுடன் அவர் மற்றும் அவரது சந்ததிகள் இந்தியாவில் பல பகுதிகளில் வசித்துள்ளார்கள் என்ற அனுமானத்தைத் தெரிவிக்கின்றன. …

Read More »

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும்

இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர். பொதுவாக முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற எண்ணம்தான் முஸ்லிம் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. இருப்பினும் கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு சகல துறைகளிலும் முன்னேற்றங் கண்டு வருகின்றனர் என்பதுதான் உண்மையாகும். நாம் கல்வியில் பின்தங்கியுள்ளோம். ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது மிகப் பின்தங்கி யுள்ளோம் என்ற எண்ணம் தோல்வி மனப்பாங்கை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, இந்த …

Read More »

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 01

இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது. மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். …

Read More »

இலங்கை முஸ்லிம்களும் தேசிய ஒருமைப்பாடும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இலங்கையின் இறைமைக்கு சவால் விடாத ஒரே சமூகமாக முஸ்லிம் சமூகம்தான் உள்ளது. தமிழ் சமூகமும் ஆயுதப் போராட்டமும்: தமிழ் சமூகத்திற்கு எதிராக எழுந்த இனவாத மொழிவெறி கொண்ட செயற்பாடுகளால் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர். அது பின்னர் பயங்கரவாதமாக உருவெடுத்தது. இதனால் …

Read More »

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதலுக்கு ஓமல்பே சோபித தேரர் கற்பிக்கும் காரணங்கள்

இலங்கையில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கயும்;, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் தொடந்த வண்ணமே உள்ளன. இந்த இனவாத செயற்பாடுகளுக்கு ஓமல்பே சோபித தேரர் சில காரணங்களை முன்வைத்துள்ளதாக ‘திவயின” சிங்களப் பத்திரிகையில் 21.03.2018 ஆம் திகதி வெளிவந்த செய்தியொன்றின் தமிழ் வடிவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பான எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஓமல்பே சோபித …

Read More »

இலங்கை முஸ்லிம்கள் பொறுமை செய்யும் நிலையிலா? போராட்டம் செய்யும் நிலையிலா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இந்த கட்டுரை இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போது சந்தித்து வரும் ஒரு நெருக்கடியான நிலையை பற்றி அலசுகின்றது. கட்டுரை ஆசிரியர் பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்கின்றார் இதனை முஸ்லிம் சமூகத்தின் பாரிய (உயிர், உடமைகள், பொருளதார) இழப்புக்கள் மற்றும் தூர நோக்குபார்வையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கின்றோம். (இஸ்லாம்கல்வி மீடியா குழு) வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. …

Read More »

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை!

இலங்கை சகோதரர்கள் வழங்கும் தம்மாம் இப்தார் நிகழ்ச்சி 09-06-2017 இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை! வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் Video: Bro. Ajmal – Nellai

Read More »

யா அல்லாஹ்! கசக்கிப் போடுவாயாக!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு சாம்ராஜ்யத்தைச் சரித்து வெறும் சருகாக மாற்றிய மகத்தான பிரார்த்தனை இது! பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து கொள்ள ஆட்சி அதிகாரத்தை விட அல்லாஹ்வின் அங்கீகாரம் வலிமை மிக்கது என்பதை உணர்த்தும் அழகிய நிகழ்வொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

Read More »

நெஞ்சை விட்டும் அகலாத மாறாத வடுக்கள்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் 1995 இல் அதாவது 18 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையொன்றை இங்கே மீள் பிரசுரம் செய்கின்றோம். ஒரு முறை முழுமையாக வாசித்துப் பாருங்கள். இலங்கை அரசிற்கும் புலிகளுக்கு மிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் 1995 ஏப்ரல் 19 இல் கடற்படையின் “ரனசுரு” “சூரியர்” ஆகிய பீரங்கிப் படைகளைப் புலிகள் வெடிக்கச் செய்ததுடன் முறியடிக்கப்பட்டது. மூன்றாம் ஈழப் போர் …

Read More »