பேராசிரியர் ஷாம்(தருமி) அவர்கள் எழுதிய பதிவைப்பற்றிய என்னுடைய ஒரு எதிர்வினையில், நான் அவரைத் தனிமனித தாக்குதல் செய்துள்ளதாக நொந்து கொண்டுள்ளார். இங்கு ‘நொந்து கொண்டுள்ளார்’ என்பதையும் தனிமனிதத் தாக்குதலாகக் கருத மாட்டார் என்று நம்பிக்கையில் ‘முடிந்தவரை’ என் தரப்பு விளக்கத்தைச் சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் வலைப்பதிவுலகில் மதிக்கப்படும் ஒருசில வலைப்பதிவர்களில் தருமி என்ற புனைப்பெயர் கொண்ட திரு.ஷாம் அவர்களை எள்ளலோ ஏளனமோ செய்து அவரின் கேள்விகளையோ பதிவுகளையோ புறந்தள்ள வேண்டிய …
Read More »Tag Archives: தருமி
தி.நகரில் தருமிக்கு என்ன வேலை?
தருமியின் சென்ற மாதப்பதிவில்”குண்டு எல்லாம் எதற்கு?” என்ற நாத்திகப் பதிவைக் காண நேர்ந்தது. உடனடியாக நாமும் கொஞ்சம் பகுத்தறிவைக் கொட்டி எதையாச்சும் பொதுநல நோக்கில் எழுதலாம் என்று ஆசைதான். ஆண்டு விடுமுறையில் ஊருக்குச் செல்லும் பரபரப்பில் இருந்ததாலும் தருமி தான் கடைசியாக வாங்கிய நோக்கியா போனை விட்டு இனி வேறெங்கும் செல்லப் போவதில்லை :-) என்ற நம்பிக்கையில் ஆறஅமர எழுதிக் கொள்வோமே என்று அப்பதிவுக்கான பின்னூட்டங்களை மட்டும் வாசித்து வந்தேன். …
Read More »தருமி வாங்கிய Nokia போன்
நண்பர் தருமி அவர்கள் ஏற்கனவே உபயோகித்த மொபைல் போன் சரியில்லை என்று புதிதாகச் சந்தைக்கு வந்த மொபைல் போன் ஒன்றை வாங்க விரும்புகிறார்.(Nokia N95 என்று வைத்துக் கொள்வோம்)நோக்கியா தயாரிப்புகளைப் பற்றிய மதிப்பீடு பலராலும் சிறப்பாகவே சொல்லப்பட்டிருப்பதாலும் பலரிடமும் விசாரித்த வகையில் மற்ற போன்களை விட ஓரளவு பரிச்சயமான மற்றும் நம்பகத்தன்மை பெற்ற (கூடுதலாக நம் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் ஆதரவு பெற்ற:-) Nokia தயாரிப்பே சிறந்தது என்ற …
Read More »ஒரு பயணியின் குழப்பம்
நீண்ட பயணத்திற்கான வாகனம் மெதுவாக நகரத்தொடங்கியது. அருகே சில வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. பயணிகள் தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். சிலர் ஜன்னலோரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் இருக்கையை சரி செய்து தூங்குவதற்கு தயாராகினர். ஒருவர் மட்டும் ஓடும் வண்டியிலிருந்து இறங்கினார். சாலையில் சற்று நிலை தடுமாறியவர், சற்றே நிதானித்தார். சாலையில் நின்று கொண்டிருந்த போக்குவரத்துக் காவலர் அவரின் அருகில் வந்து காரணம் கேட்டார். உரையாடல் இதோ: காவலர்: ஓடும் …
Read More »