Featured Posts

தி.நகரில் தருமிக்கு என்ன வேலை?

தருமியின் சென்ற மாதப்பதிவில்”குண்டு எல்லாம் எதற்கு?” என்ற நாத்திகப் பதிவைக் காண நேர்ந்தது. உடனடியாக நாமும் கொஞ்சம் பகுத்தறிவைக் கொட்டி எதையாச்சும் பொதுநல நோக்கில் எழுதலாம் என்று ஆசைதான். ஆண்டு விடுமுறையில் ஊருக்குச் செல்லும் பரபரப்பில் இருந்ததாலும் தருமி தான் கடைசியாக வாங்கிய நோக்கியா போனை விட்டு இனி வேறெங்கும் செல்லப் போவதில்லை :-) என்ற நம்பிக்கையில் ஆறஅமர எழுதிக் கொள்வோமே என்று அப்பதிவுக்கான பின்னூட்டங்களை மட்டும் வாசித்து வந்தேன்.

பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதை சட்டமீறலாகவும் அதை சகித்துக் கொள்ளும் மனநிலைக்கு மக்கள் வந்து வெகுகாலமாகி விட்டதென்றும் தங்கள் ஆற்றாமையைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். பாவம் சமய சகிப்பாளர்கள்! பரபரப்பான யுகத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதால் சிரமப்படும் முஸ்லிம் அல்லாதவர்களையும்,நாத்திகர்களையும் நினைத்தால் பரிதாபப் படவேண்டும்.

சர்.தியாகராயர் நகர் என்பதை தி.நகர் என்று சுருக்கிப் புரிந்துகொள்ளும் அவசர யுகத்திலும் உஸ்மான் சாலை,ஹபீபுல்லா சாலை என்று ஒருசில முஸ்லிம் பெயர் கொண்ட (தாலிபான்?!?) சாலைகளை இன்னும் அப்படியே விட்டு வைத்திருப்பதற்காக இந்து தேசபக்தர்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்!

தருமியின் பதிவைப் பற்றி சொல்ல வந்துவிட்டு எங்கோ சென்றுவிட்டேன். பொதுமக்களுக்கு இடைஞ்சல் என்ற நன்னோக்கில் எழுதப்பட்ட பதிவில், அதுவும் முஸ்லிம்கள் சாலையிலும் ஜும்ஆ தொழுவதால் ஏற்படும் இடைஞ்சல் பற்றி எழுதப்பட்ட பதிவில் பிரபல சமூக (?) ஆர்வலரும் இஸ்லாமிய விமர்சகருமான நேசகுமார் பின்னூட்டாமல் இருந்தால் அந்தத் தொகுதிக்காரர் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை. (எஸ்.கே முன்பு கற்பனையில்(!) சொல்லியிருந்தபடி நேசகுமார் நுங்கம்பாக்கம்வாசி! அனேகமாக இது தி.நகர் தொகுதியில்தான் வரும் என்று நினைக்கிறேன்). அவர் சொல்கிறார்:

“தருமி,நல்ல பதிவு. இப்படி நடுரோட்டில் தொழுகை செய்வது ஒரு விதமான மதவிளம்பரம். பர்தா போடுவது, மீசையை மழித்து தாடியை நீளமாக வைத்துக் கொள்வது – இது போன்ற ஒருவிதமான அட்வர்டைஸ்மன்ட்.

உடனடியாக இந்து மதம் பற்றி கேள்வி எழும் என்பதால் அதையும் சொல்லி விடுகிறேன். உச்சஸ்தானியில் லவுட் ஸ்பீக்கரில் அலறுவது குரானாக இருந்தாலும், எல்.ஆர்.ஈஸ்வரியாக இருந்தாலும் தவறுதான். விடியற் காலையில் கேட்கும் அபஸ்வரம் கோவிலிலிருந்து வந்தாலும், மசூதியிலிருந்து வந்தாலும் தவறே.

மற்ற மதத்துக்காரர்கள் அதே தவறைச் செய்யும்போதுதான் நமக்கும் புரிகிறது. என்ன செய்வது?

மும்பையில் இப்படித்தான் தெருவை மறித்து முஸ்லீம்கள் தொழுகை செய்வதைப் போல சிவசேனாக்காரர்கள் தெருவில் ட்ராஃபிக்கை நிறுத்தி ஆரத்தி செய்ய ஆரம்பித்தனர். உடனடியாக கலவரம் ஆரம்பித்தது.”

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது எப்படி என்று நேசகுமாரிடம்தான் கேட்க வேண்டும். முஸ்லிம்கள் ஐவேளை தொழ அழைக்கும் பாங்கொலியும் L.R.ஈஸ்வரியின் கற்பூர நாயகியே கனக வல்லியோ அல்லது குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் கும்மிப் பாட்டும் ஒன்றா?

முஸ்லிம்கள் லவுட் ஸ்பீக்கரில்தான் பள்ளிக்குத் தொழ அழைக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்பது வேறு விசயம். அப்படியே முஸ்லிம்கள் லவுட் ஸ்பீக்கரில் அழைக்காமல் இருந்து விட்டால் மட்டும் பொதுமக்கள்? செவிக்கு இடைஞ்சல் இல்லாமல் இருந்து விடுமா என்ன?

போக்குவரத்திற்கு இடையூறாக தொழுகை நடத்துதை வேண்டுமானால்
குறையாகச் சொல்லலாம். (ஒரு சில நிமிடங்கள் அமைதியாக தியானம் செய்வதை இடையூறு என்று சொன்னால், நிரந்தரமாக சாலைகளை ஆக்கிரமித்திருக்கும் தெருக்கோவில்களையும் திடீர் பிள்ளையார்களையும் என்னவென்று சொல்வது?) முஸ்லிம்கள் முடிந்தவரை இத்தகைய தற்காலிக இடையூறுகளையும் தவிர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியுலுள்ள முஸ்லிம்கள் இவ்விசயத்தில் மாற்று மதத்தவரின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்வதில் நியாயமிருக்கிறது.

பர்தா,தாடி,மீசையெல்லாம் கூட நேசகுமார் போன்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதாம்! ஒருவிதமான அட்வர்டைஸ்மெண்டாம்!! ஆகவே, முஸ்லிம் விளம்பரதாரர்களே இனிமேல் தயவு செய்து மீசையை வளர்த்தும், தாடியை ஷேவ் செய்தும், பெண்கள் பர்தா அணியாமலும் இருந்து நேசகுமார், தருமி போன்றவர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்!

சமூக அக்கறையில் எழுதுவதாக நம்பச் சொல்லும் தருமி மாதிரியான என்றாவது குடிக்கும் பழக்கமுள்ள நாத்திகராக இருந்தாலும்கூட முஸ்லிம்களின் தொழுகைக்கான பாங்கொலி இவர்களின் பகுத்தறிவு செவிக்கு இடைஞ்சலாகக் கேட்கும்! அண்ணா மேம்பாலத்திலிருந்து சிம்ஸன் வரைக்கும் இருக்கும் ஆபாச சினிமாப் போஸ்டர்கள் மற்றும் அரைகுறை ஆடை விளம்பரங்களால் பொதுமக்களின் விழிகளுக்கு இடைஞ்சல் என்று யாராவது சொல்லிவிட்டால் அவ்வளவுதான்! நீங்கள் பெண்ணுரிமைக்கு எதிரான ஆணாதிக்க+மதஅடிப்படைவாதி என்று தனிமை படுத்தப்படும் அபாயம் உண்டு! எப்படித்தான் இத்தகைய நிரந்தர இடையூறுகள் பாழாய்போன பகுத்தறிவுக் கண்களுக்குப் படாமல் இருக்கின்றனவோ!

இத்தனை இடைஞ்சல்களையும் சகித்துக் கொண்டிருக்கும் திருவாளர் பொதுஜனம் யார்? அவர்கள் ஏன் முஸ்லிம்கள் வீதியில் தொழும்போதும், இந்துக்கள் மசூதிக்கருகில் தாரை தப்பட்டையுடன் வினாயகருக்கு சதுர்த்தி எடுக்கும் போதும்,அதிகாலையில் மணியடித்து சூலமங்கலம் சகோதரிகளின் பாடலைப்போட்டு பூசை செய்யும் போதும், கிறிஸ்தவர்கள் அமைதியாக திருஓலை ஏந்தி ஜெபப்பாடல்களைப் பாடிச்சென்றாலோ பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது ? என்று என்றைக்காவது யோசித்து இருக்கிறோமா?

மாட்டோம். ஏனென்றால் நாமெல்லாம் சமய சகிப்பாளர்கள் !

அப்படீன்னா தருமியும் நேசகுமாரும் யார் என்கிறீர்களா? யாருக்குத் தெரியும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் !

7 comments

  1. //சமூக அக்கறையில் எழுதுவதாக நம்பச் சொல்லும் தருமி மாதிரியான என்றாவது குடிக்கும் பழக்கமுள்ள நாத்திகராக இருந்தாலும்கூட முஸ்லிம்களின் தொழுகைக்கான பாங்கொலி இவர்களின் பகுத்தறிவு செவிக்கு இடைஞ்சலாகக் கேட்கும்! அண்ணா மேம்பாலத்திலிருந்து சிம்ஸன் வரைக்கும் இருக்கும் ஆபாச சினிமாப் போஸ்டர்கள் மற்றும் அரைகுறை ஆடை விளம்பரங்களால் பொதுமக்களின் விழிகளுக்கு இடைஞ்சல் //

    லவுடு ஸ்பீக்கரில் காதடைக்க பொது இடத்தில் கத்துவதற்கும், சுவரில் ஆபாச போஸ்டர் ஒட்டுவதையும் பொது மக்களுக்கு இடைஞ்சல் என்று ஒரு தராசில் நிறுக்க முயலும் நல்லடியாரை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

    நடுநிலையாக சிந்திப்பது போல் காட்டிக் கொள்ள நன்றாக முயல்கின்றீர்கள். ஆனால் அந்த இடத்திலேயே சறுக்கவும் செய்கின்றீர்களே.

    சுவரில் இருக்கும் போஸ்டர் திரும்பிப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இடைஞல்; ஆனால் லவுடு ஸ்பீக்கரில் கத்துவது? காதை திறந்து வைத்திருப்பவர்களுக்கு அனைவருக்குமே இடைஞ்சல்.

    போஸ்டரை பார்க்காமல் போக வேண்டும் என உங்களைப்போன்ற ரொம்ப யோக்கியவான்கள் நினைத்தால் அது நடக்கக் கூடிய காரியமே.

    ஆனால் லவுடு ஸ்பீக்கரில் ஒலிக்கும் அசமந்தமான கத்தல்கள் என் காதை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என நான் நினைத்தால் அது நடக்கக் கூடிய காரியமா நல்லடியாரே?

    நன்றாக கம்பேர் செய்கின்றீர்கள்?! உங்கள் பகுத்தறிவே அறிவு.

    அழகேசன்.

  2. வாசகன்

    நல்ஸய்யா..,
    நல்ல கட்டுரை!
    இடைஞ்சல் என்பது எப்போது வருகிறது என்றால் அடுத்தவனை மதிக்காத போது தான். (மதிக்காதவன், அடுத்தவன் செய்வதை இடையூறாகவே கருதுவான், அல்லது அவனுக்கு எப்படியேனும் இடையூறு செய்ய முயல்வான்).

    நான் எப்போதோ படித்த ஒரு சிறுகதையில், பக்கத்துவீட்டிலிருக்கும் ஒரு பிறமத நோயாளிக்கு சிரமம் கொடுக்கக்கூடாதே என்று ‘தொழுகை அழைப்பின்’ சப்தத்தை மிகவும் சன்னப்படுத்துகிறார் ஒரு மவுலவி!

    ஆச்சரியமாக, ‘தொழுகை அழைப்பைத் தொடரவேண்டும்’ என்ற கோரிக்கையோடு அதே நோயாளி அடுத்தநாள் பள்ளிவாசலுக்கு வந்து ஒரு ஒலிபெருக்கியை அன்பளிப்புச் செய்கிறார், ஒலிபெருக்கிதான் கெட்டுப்போய்விட்டதோ என்று நினைத்துக்கொண்டு!

    வரலாற்றின் சுவடுகளில் பார்த்தாலும், தன் கிறிஸ்தவ ஆலயத்திலேயே தொழ வேண்டிக்கொண்ட பாதிரியாரும், பின்னர் வருபவர்களின் ‘புரிதலை’ கருத்தில் கொண்டு அதை நாசூக்காக மறுத்த கலீஃபா உமர்(ரலி) யும் நினைவுக்கு வருகிறார்கள்.

    இப்படி பரஸ்பர மதிப்புகள் இருப்பின் தலைவிரித்து ஆடும் இனப்பகைகளை வென்று விடலாம். ஆனால் ஒரு

    அவலமான உண்மை என்னவென்றால்,
    இனப்பகையை பரப்புரை செய்தும், விசிறி விடவும் செய்பவர்களில் ஏராளமானோர் எழுத்தாளர்கள்/அறிவாளிகள் என்பது தான். இவர்களுடைய எழுத்தின்அரசியல் நல்லிணக்க சக்திகளால் முறியடிக்கப்படவேண்டியது, காலத்தின் கட்டாயமும், சமூகப்பற்றாளர்களின் கடமையுமாகிறது!

    அவர்களுக்கு எழுத்திலும்,பேச்சிலும், தன் கருத்தை வலிந்து நாட்ட முற்படுவதிலும் திறமை இருக்குமளவுக்கு சுமூகமான சமூகங்காணும் ஆர்வமோ, நேர்மையோ இருப்பதில்லை. (நான் எத்தகைய எழுத்தாளர்களைச் சொல்கிறேன் என்று விளங்குகிறதல்லவா?)

  3. நல்லடியார்

    அழகேசன்,

    உலக அளவில் Noise pollution க்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முதலிடம்
    வகிப்பது வாகனங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியாகும்
    இரைச்சல்களே. மட்டுமின்றி நம்நாட்டில் அதிகாலை பஜனைகள்,அரசியல்,ஆன்மீக
    பொதுக் கூட்டங்களிலும் லவுட் ஸ்பீக்கர் மூலம் Noise Pollution
    ஏற்படுகிறது. இதனாலெல்லாம் கிழியாத சிலரின் காது ஜவ்வு, கோபுர (மினாரா)
    உச்சியில் கட்டப்பட்டிருக்கும் லவுட் ஸ்பீக்கரிலிருந்து ஒரு நாளில் 20-25
    நிமிடங்கள் மட்டுமே ஒலிக்கும் பாங்கோசையில் கிழிகிறது என்பதை நம்பச்
    சொல்கிறீர்களா?

    அரபு நாடுகளில் திரும்பிய பக்கமெல்லாம் மசூதிகளில் கட்டப்பட்டுள்ள லவுட்
    ஸ்பீக்கரிலிருந்து ஐவேளை தொழுகைக்கும் பாங்கோசை கேட்ட போதிலும் Noise
    Pollution என்றோ காது ஜவ்வு கிழிந்து விட்டது என்றோ எவரும் சொல்லக்
    கேள்விப் படவில்லையே?

    நியாயமாகச் சொல்வதென்றால் கோவில் பஜனைகளை விட மசூதியிலிருந்து வெளியாகும்
    பாங்கோசை வெகு குறைவே. தீபாவளி சீசனில் அதிக டெசிபல் வெடிசத்தங்களால்
    இழக்கப்படும் செவித்திறனை விட பாங்கொலியால் எவரும் செவித்திறன்
    இழந்ததாகச் சொல்ல முடியுமா உங்களால்?

    ஒரு சிலநிமிடங்கள் அழைக்கப்பட்ம் பாங்கோசையையும் L.R.ஈஸ்வரியின் ஏழு
    கட்டைகுரலில் பாடப்படும் பாடலையும் ஒப்பிட்டு விஷமமாக எழுதி
    இருப்பதையும்,பொது மக்களுக்கு முஸ்லிம்களின் தொழுகையால் இடையூறு என்பது
    போன்றும் எழுதியுள்ளதையும்தான் சுட்டினேன்.

    பதிவை மீண்டும் ஒருமுறை படித்து முரனான ஒப்பீடு செய்திருப்பது யாரென்று
    உங்கள் பகுத்தறிவைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

  4. நல்லடியார்

    தருமியின் பதிவிலிடப்பட்ட எனது பின்னூட்டம்.

    //தி.நகர் உஸ்மான் ரோட்டின் நெரிசல் யாருக்குத்தான் தெரியாது. அந்த நெரிசலான தெருவில் ஒரு பள்ளிவாசல். நாங்கள் போனதும் வெள்ளிக் கிழமை மதியம். தொழுகை நேரம் போலும். மசூதியின் தரைத் தளத்திலும், இரண்டுமாடிகளிலும் மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். இடம் பற்றாத காரணத்தால் தெருவில், அகலத்தில் ரோட்டின் பாதிவரையிலும், நீளத்தில் பள்ளிவாசலின் நீளத்தையும் தாண்டி, தரையில் செய்தித் தாள்களை விரித்து தொழுகையில் இருந்தனர்.//

    தருமி,

    நெரிசலான தெரு, வெள்ளிக்கிழமை, தொழுகை நேரம், இடம் பற்றாத காரணத்தால் என்ற பல நியாயமான !? காரணங்களை நீங்களே அடுக்கி விட்டு அடுத்தவனுக்கு உபகாரமாக இல்லாவிட்டாலும், உபத்திரமாக இராதே என்பதில் என்ன நியாயம் இருக்கிறது சார்?

    முஸ்லிம்களாவது அதிகபட்சம் 10 நிமிடங்கள் (மக்கள் ஷாப்பிங் செய்யும் பீக்அவர் மாலை 4-7 மணி எனக் கொண்டால் இருவேளை தொழுகைக்கு 20 நிமிடங்கள் மட்டுமே. வெள்ளிக் கிழமை நன்பகல் தொழுகைக்கு 30 நி்மிடங்கள்) ஜனநாயக,மதசார்பற்ற ?! நம்நாட்டில் பொது இடத்தில் தொழுகிறார்கள். ஆனால் நிரந்தர இடையூராக சாலையை அடைத்துக் கொண்டு வீற்றிருக்கும் தெருப்பிள்ளையார்,உண்டியல்களும், தாரை தப்பட்டையுடன் சிவலோகம் செல்லும் சவ ஊர்வலங்கள் பற்றி உங்கள் நாத்திகம் என்ன சொல்கிறது? சாமி சிலைகளுக்குப் போட்டியாக நிற்கும் பகுத்தறிவுச் சிலைகள் பற்றியும் சொல்லுங்களேன்.

    எனது பதிவிலும் சில கேள்விகள் இருக்கலாம். பொடிநடையா வந்து வாசித்து செல்லுங்கள்.

    அன்புடன்,

  5. இப்னு பஷீர்

    இப்னு பஷீர் said…
    தருமி அய்யா, இந்த விஷயத்தில் நீங்கள் நொந்து கொள்ள வேண்டியது உங்களையேத்தான்!

    //நீங்கள் ‘எங்கேடா இவன் இஸ்லாத்தை / இஸ்லாமியரைப் பற்றி எழுதுவான்; அதை மட்டும் வாசிப்போம்’ என்றிருந்தால் நான் என்ன சொல்ல?//

    உங்கள் ஆ……ரம்ப கால பதிவுகளையும் (குறிப்பாக மதங்கள் பற்றியவை..) அவை தொடர்பாக மற்ற பதிவர்கள் உங்களிடம் முன்வைத்த கேள்விகளையும் அவற்றுக்கு நீங்கள் சொன்ன (அ) சொல்ல மறந்த (அ) சொல்ல முடியாமல் போன பதில்களையும் ஓரளவுக்கு ஞாபகத்தில் வைத்திருப்பவன் என்ற முறையில் சொல்கிறேன்..

    ‘நான் ஏன் மதம் மாறினேன்?’ என்ற தலைப்பில் தொடர் பதிவுகள் எழுதினீர்களே, நினைவிருக்கிறதா? அதில் மற்ற மதங்களை ஒப்புக்கு சப்பாணியாக தொட்டு விட்டு இஸ்லாம் பற்றி கேள்விகளை அடுக்கினீர்களே, நினைவிருக்கிறதா? அந்த கேள்விகளுக்கு முஸ்லிம் பதிவர்கள் விளக்கமாக பதில் சொன்ன பிறகும் சில மாதங்கள் கழித்து அதே கேள்விகளை தூக்கிக் கொண்டு வந்தீர்களே.. அதுவாது நினைவிருக்கிறதா? கிருஸ்துவரான நீங்கள் நாத்திகராக மாறுவதற்கும் இஸ்லாம் பற்றிய உங்கள் அபத்தக் கேள்விகளுக்கும் என்ன தொடர்பு என்பதையாவது உங்களால் விளக்க முடிந்ததா? கிருஸ்துவம், பைபிள் பற்றி உங்களிடம் சிலர் கேள்விகள் கேட்டபோது, ‘நான் அதில் அத்தாரிட்டி இல்லை’ என்று நழுவினீர்களே, நினைவிருக்கிறதா? கிருஸ்துவத்தைப் பற்றியே சரியாக அறிந்திருக்காத நீங்கள், அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுமுன் அதை விட்டு வெளியேறியதாக சொல்வது நம்பும்படி உள்ளதா? நீங்கள் பிறந்து வளர்ந்த மதத்தைப் பற்றியே சரியாக பதில் சொல்ல முடியாத நபர், இன்னொரு மதத்தைப் பற்றி விமரிசனம் செய்ய வந்தால் அவரது உள்நோக்கம் என்னவாக இருக்கும்? இஸ்லாம் பற்றிய உங்கள் கருத்துக்கள், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்கப்படும் கேள்விகள் அல்ல..! ‘இது இப்படித்தான்’ என்று ஏற்கனவே நீங்கள் முடிவு செய்திருப்பதைத்தான் உங்கள் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. கிருஸ்துவம் பற்றியே சரிவர அறியாத தருமி அய்யா அவர்கள் இஸ்லாத்தில் ஒரு அத்தாரிட்டி மாதிரி எழுதுவது முறையா? தெ.கா.வின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் கருத்து //எந்தவொரு விசயத்தையும் ஒரு தீர்க்கமான முடிவோடு அணுகும் பட்சத்தில், சொல்லப்பட்டிருக்க கருத்திலிருந்து எதுவுமே உள்வாங்கப் படுவதில்லை. ஏனெனில், வாசிப்பவரின் பின் மண்டையில் ஓட்டப் படும் படம் அந்த தீர்க்கமான முடிவு மட்டுமே.// இந்த கருத்து தருமி அய்யா அவர்களுக்கும் அப்படியே பொருந்துகிறதே!

    துரதிருஷ்டவசமாக இவ்வளவு விஷயங்களும், எங்களைப் போன்றவர்களுக்கு நினைவில் இருப்பதால், நீங்கள் எவ்வளவுதான் நாத்திகர் என்ற போர்வையில் எல்லா மதங்களையும் சமமாக மதிப்பிடுவதாக சொல்லிக் கொண்டாலும், என் மனதில் உங்களைப் பற்றி ‘நாத்திகவாதி’ என்பதைவிட ‘இஸ்லாமிய எதிர்ப்புவாதி’ என்ற பிம்பம்தான் படிந்திருக்கிறது. சகோதரர் நல்லடியாருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். அதனால்தான் நீங்கள் எழுதுவதில் இஸ்லாம் பற்றி எழுதுவது மட்டும் கவனிக்கப் படுகிறது. அவற்றுக்கு முஸ்லிம் பதிவர்களால் பதில் சொல்லப்படுகிறது.

    உங்களைப்பற்றி இப்படி ஒரு பிம்பம் உருவாவதற்கு உங்கள் பதிவுகள்தான் காரணம் என்கிறபோது, நீங்கள் உங்களையே நொந்து கொள்வதுதானே முறை?

    சகோதரரின் நல்லடியாரின் பதிவுகளின் எள்ளல் அதிகமிருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். பாவம்.. அவருக்கு உங்களைப்போல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கலையில் அனுபவமில்லை போலிருக்கிறது. அதற்காக அவரது பதிவுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். எள்ளல் வார்த்தைகளை கருவேப்பிலைகள் போல எண

  6. பகுத்தறிவாளன்

    அய்யா தருமி அவர்களே,

    என்னை நினைவிருக்கின்றதா? இருக்கும். கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா?

    நான் பகுத்தறிவாளன்.

    நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற காரணங்களை அடுக்கியதில் மிக முக்கியமான காரணமான //இயேசுவை கர்த்தர் காப்பாற்றாததைக்// குறித்து ஒரு கேள்வி – ஒரே ஒரு கேள்வியை உங்களிடம் கேட்டு நான் போட்ட பின்னூட்டத்திற்கு விளக்கம் அளிக்காதது மட்டுமின்றி, இந்த நிமிடம் வரை அந்த பின்னூட்டத்தை உங்கள் “அந்த 9” பதிவில் அனுமதிக்கவும் செய்யாமல் மறைத்தீர்களே, அதே பகுத்தறிவாளன்.

    சொந்தமாக நான் பட்ட சோகக்கதைகளை(!) எழுத நினைத்து ப்ளாக் உலகத்துக்கு வந்த என்னை, பர்தாவைக் குறித்து நான் என் வாழ்வில் பட்ட ஓர் அனுபவத்தை வைத்து ஒரு பதிவு எழுதியதில் அழைக்காமலே வந்த விருந்தாளி போன்று வந்து எள்ளி விட்டு என்னை உங்கள் பக்கம் திரும்ப வைத்தீர்களே, அதே பகுத்தறிவாளன்.

    இந்த பதிவில் நீங்கள் எழுதியுள்ள பொன்னால் குறிக்கப்பட வேண்டிய ஒரு வாசகம்:

    //கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன். அதை விட்டு விட்டு தனிமனித எள்ளலோடு எழுதுபவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது?//

    நீங்கள் அன்று என்னுடைய அந்த பர்தாவை குறித்த அனுபவத்தை எழுதியதில், என் அனுபவம் சார்ந்த கருத்துக்களுக்கு மட்டும் பதிலளித்திருந்தால் மேலே நீங்கள் கூறியதில் அர்த்தமிருக்கின்றது – கண்டிப்பாக உங்களைப்போன்றவர்கள் இந்த வாசகங்களை பயன்படுத்துவதில் ஒரு அர்த்தமிருக்கின்றது.

    ஆனால் அந்த என்னுடைய பதிவில் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பது நினைவுள்ளதா?

    எழுதக் கூடியவனின் மதமும்/பின்னணியும் என்ன என்பது அவசியமில்லை எனக் கூறும் நீங்கள், அன்று நான் என் அனுபவம் சார்ந்த கருத்துக்களை கூறிய போது, ஒழுங்காக அந்த கருத்துக்களுக்கு மட்டுமே பதிலளித்திருந்தால் மேலே கண்ட வார்த்தைகளை கூறுவதற்கு உங்களுக்கு தகுதியிருக்கின்றது.

    அன்று என் பதிவில் என் அனுபவ கருத்துக்களை ஓர் எள்ளலுடன் எதிர்கொண்ட உங்களுக்கு பதில் தர வேண்டும் என்பதற்காகவே உங்கள் பதிவுக்கு வந்தேன்.

    வந்த இடத்தில் தான் நீங்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து மாற காரணமாக கூறிய “அந்த 9″(இதனை பதிலுக்கு பதில் எள்ளலாகவே எடுத்துக்கொள்ளுங்கள்) கேள்விகள் அடங்கிய பதிவை கண்டேன்.

    53 வருட காலம் அனுபவம் உள்ளவர், 53 வருட ஆராய்ச்சியில் பைபிளில் கண்டது என்ன?

    “கர்த்தர் இயேசுவை கைவிட்டார். காப்பாற்றவில்லை” – இது நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற கூறிய பிரதான காரணங்களில் ஒன்று.

    சும்மா செவனே என்றிருந்த என்னை என் அனுபவ கருத்துக்களை எள்ளி இங்கே அழைத்து உங்கள் பதிவை படிக்க வைத்தீர்கள்.

    நானோ உங்களை போன்று நாகரீகமின்றி செயல்படாமல், நீங்கள் கூறிய உங்களின் அனுபவ பைபிள் அறிவு சரியல்ல எனச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினேன்.

    ஓர் நல்ல பேராசிரியர் என்ன செய்திருக்க வேண்டும்?

    என் கேள்விக்கு தகுந்த விளக்கம் அளித்திருக்க வேண்டும். அக்கேள்வியில் நான் உங்களை எள்ளி நகையாடி ஒன்றும் பின்னூட்டம் இடவில்லையே.

    ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்த பின்னூட்டத்தையே இதுவரை அனுமதிக்கவில்லை.

    இதுவா உங்கள் நடுநிலைமை?

    உங்கள் கருத்துக்களையே என் கேள்வி குழிதோண்டி புதைக்கும் என்பதால் தானே இன்று வரை என்னுடைய அந்த பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிக்கவில்லை.

    நல்லடியார் போன்றவர்களின் பதிவுகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு //”அவர்களின் எள்ளல் தொனியிலான பதிவுகள் தான் காரணம்”// என காரணம் கூறியுள்ளீர்கள்.

    உங்களின் “அந்த 9” கேள்விகள் பதிவில் போட்ட என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் இதுவரை அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *