பேராசிரியர் ஷாம்(தருமி) அவர்கள் எழுதிய பதிவைப்பற்றிய என்னுடைய ஒரு எதிர்வினையில், நான் அவரைத் தனிமனித தாக்குதல் செய்துள்ளதாக நொந்து கொண்டுள்ளார். இங்கு ‘நொந்து கொண்டுள்ளார்’ என்பதையும் தனிமனிதத் தாக்குதலாகக் கருத மாட்டார் என்று நம்பிக்கையில் ‘முடிந்தவரை’ என் தரப்பு விளக்கத்தைச் சொல்ல வேண்டியுள்ளது.
தமிழ் வலைப்பதிவுலகில் மதிக்கப்படும் ஒருசில வலைப்பதிவர்களில் தருமி என்ற புனைப்பெயர் கொண்ட திரு.ஷாம் அவர்களை எள்ளலோ ஏளனமோ செய்து அவரின் கேள்விகளையோ பதிவுகளையோ புறந்தள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. திரு.ஷாம்/தருமி அவர்களின் பதிவுகளுக்கான எனது எதிர்வினைப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றிய தவறான/அவதூறான கருத்துக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டவையே என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.என்னுடைய வலைப்பூவிலேயே என் நோக்கத்தை அறிவிப்புச் செய்திருக்கிறேன்.
“தருமி என்பதே புனைப்பெயர்தான்; ஆகவே, தருமி சார், திரு.தருமி போன்ற மரியாதைகள் தேவையில்லை” என்று முன்பொரு பதிவில் அவரே சொல்லியுள்ளதால்தான் நானும் ‘தருமி ‘ என்று மொட்டையாக விளித்து எதிர்வினையாற்றினேன். அப்படி எழுதியதாலோ என்னவோ அவை எள்ளல்களாகப் பார்க்கப்பட்டு எதிர்வினைகள் கண்டுகொள்ளப்படவில்லை!
ஒற்றைச்சாளர வீட்டில் வசிக்கும் என்னை, பிறவிசயங்களைவிட மதம் சார்ந்த அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மதம் பற்றி மட்டுமே தெரிந்த அடிப்படைவாதி! அல்லது இஸ்லாமிஸ்ட்!! என்ற முடிவுக்கு வந்திருக்கும் தருமி, என்னுடைய பல பதிவுகளில் இஸ்லாம் அல்லாத பிறவிசயங்களையும் அல்லது தொடர்புடைய பொதுவிசயங்களையும் எழுதியுள்ளதை அவரின் எந்தச்சாளரமும் காட்டவில்லை எனும்போது வீடற்ற அவரின் பன்முகச் சாளரங்கள் கல்லெறிய மட்டும்தான் திறக்குமோ என்ற ஐயம் எழுகிறது!
இஸ்லாம் ஒன்றும் விவாதிக்கப்படக்கூடாத விசயம் என்று எங்காவது நான் ‘பத்வா’ கொடுத்திருப்பதாக எவரும் காட்டமுடியுமா? இஸ்லாம் பற்றிய பெரும்பாலான விவாதங்களில் “இஸ்லாம் விவாதங்களுக்கு அப்பாற்பட்ட மார்க்கமல்ல” என்று சொல்வதோடு, தவறான விமர்சனங்களுக்கு ஆதாரப்பூர்வமான விளக்கம் கொடுக்கப்படும் பட்சத்தில், அத்தகைய விமர்சனங்களையோ அல்லது குற்றச் சாட்டுகளையோ திருத்திக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே எழுதியுள்ளேன். ஒரு சாராரால் சரியென நம்பப்படும் ஒரு கொள்கையை விமர்சிக்கப் பொதுவில் வந்துவிட்டு,சம்பந்தப்பட்டவர்கள் பதில் கொடுக்கும்போது, “நான் அப்படி கேட்கவே இல்லையே ” என்பதும், கருத்து விளக்கம் கொடுப்பதைத் தனிமனிதத் தாக்குதல் என்று ‘ கண்டு கொள்ளாமல்’ செல்வதும் ஒரு பக்குவப்பட்ட விமர்சகனுக்கு அழகா?
பிறமதங்களை ஒப்பீடு செய்ததற்கு ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு’ என்ற உங்களின் அளவீடு இஸ்லாம் விசயத்திலும் பொருந்தும்தானே! இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் வைக்கும் விமர்சனங்கள் (முஸ்லிம்களின் மனத்தை அவற்றில் சில புண்படுத்தியபோதும் ) நாகரிகமாகத்தானே இதுவரை பதில் சொல்லியுள்ளோம். இஸ்லாம் மட்டும் எவராலும் விவாதிக்கப்படலாம்; ஒப்பீட்டிற்காகக் கூட பிறமதங்களை என் போன்ற இஸ்லாமிஸ்டுகள்!? விமர்சித்தால் அதற்குத் தப்பர்த்தம் கற்பிப்பதில் என்ன நியாயம் தருமி?
உங்களின் இஸ்லாம் பற்றிய விமர்சனங்களுக்கான எனது பதில்கள் உங்களுக்கு எள்ளலாகவோ ஏளனமாகவோ தெரியலாம்.அதே அளவுகோல் உங்கள் விமர்சனங்களுக்கும் பொருந்தும்தானே? “பிற தெய்வங்களை நிந்தனை செய்யாதீர்கள்; ஏனெனில் அவற்றை நம்புவோர் (அறியாமல்) அல்லாஹ்வை நிந்திப்பார்கள்” என்ற குர்ஆனின் போதனையை நம்பும் எந்த முஸ்லிமும் பிற தெய்வங்களை நிந்திக்க மாட்டான். இந்த
எல்லைக்குள் நின்று விவாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால்தான் பெரும்பாலான விவாதங்களில் முஸ்லிம்களின் கருத்துக்கள் பின்தள்ளப்படுகின்றன.
தெருப்பிள்ளையார் பற்றியும் சவஊர்வலம் பற்றியும் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் கூட ‘பாங்கு அழைப்பொலி’ யையும் ஒருசில நிமிடங்கள் நடத்தப்படும் தொழுகையையும் “இடையூறு” என்று குறிப்பிட்டதால் ஒப்பீட்டிற்காகச் சொன்னதுதான். LR ஈஸ்வரியின் பாடலையோ அல்லது சீர்காழி கோவிந்தராஜன் பாடலையோ ஒப்பிட்டதுகூட பாங்கு அழைப்பை அபஸ்வரமாகச் சொன்னவர்களின் காதில் உரைக்க வேண்டும் என்பதற்காகத்தான். நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி வைப்பவை எல்லாம் ‘கேள்விகள்’; நாங்கள் பதிலுக்கு வைத்தால் அவை மட்டும் ‘தனிமனித துவேசம்’! நன்றாக இருக்கிறது ஐயா உங்கள் விவாத நியாயம்!
‘ஒரு பயணியின் குழப்பம்’ என்ற பதிவில் சற்று நகைச்சுவையாக உங்களின் குழப்பத்தைச் சொல்ல முனைந்தேன். கூரை வீட்டில் இருப்பவர் இன்னொரு கூரை வீட்டையோ அல்லது மாடி வீட்டையோ விமர்சிக்கலாம். ஆனால் எந்த வீடுமே சரியல்ல என்று வீட்டை விட்டு வெளியேறியவர், வீட்டில் வசிப்பவர்களை விமர்சிக்கலாமா? வீட்டிலிருப்பவனை நோக்கி கல்லெறிந்ததோடு அவனும் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் பகுத்தறிவா? என்ற முரண்பாட்டைச் சொல்லவே அப்பதிவு.
‘மறுப்பது மட்டும்தான் நாத்திகமா?’, ‘நாத்திகர்கள் எல்லோரும் அறிவாளிகளா?’ போன்ற பதிவுகளில் இறைமறுப்பாளர்களைப் பற்றிய எனது புரிந்துகொள்ளலையும் சொல்லியுள்ளேன். அறிவுஜீவியாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை; ” இஸ்லாம் தவிர்த்து எதுவும் தெரியாத ஒற்றைச் சாளரவாசி” என்ற என்னைப் பற்றிய உங்களின் தவறான கணிப்பீட்டைச் சுட்டவே சொல்கிறேன்.
‘தருமி வாங்கிய நோக்கியா ஃபோன்’ என்ற பதிவில் இறைவன் கொடூரமானவன் என்ற உங்களின் கருத்துக்கு, மகனை எச்சரித்து அல்லது அடித்து திருத்தும் தந்தையை ஒப்பிட்டேன் .”அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான் ” என்ற அறிவிப்பைப் பற்றிய மேலதிக தகவலை (ஹதீஸ் நூல், எண், இணையச் சுட்டி) தரவும். ஒருவேளை மொழிபெயர்த்தவர் கசாபு கடைக்காரரோ என்னவோ :-) மேலும் அரபு மொழியின் வர்ணனைகள் கேட்பவருக்குச் சிலநேரம் சற்று கொடூரமாகத் தெரிந்தாலும், அரபி மொழியில் அதனை வாசிப்பவர்களுக்கு அவ்வாறு தெரியாது.
ஒரு கருத்தை வலியுறுத்தச் சொல்லப்படும் உவமைகளைவிட கருத்துக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது மொழியியலின் மரபு என்பது பேராசிரியராகப் பணியாற்றிய உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டுமா?. மேலும் நீங்கள் குறிப்பிடுவது குர் ஆனுடைய வசனமோ நபிகளாரின் சொற்களோ அல்ல என்பதை நீங்கள் அறியவில்லையா?
//1. மற்ற மதத்தினரின் பாடல்களை உங்கள் பதிவில் கும்மிப் பாட்டு, குத்துப் பாட்டென்று நீங்கள் சொல்லியிருந்தாலும் உடனே உங்கள் பதிவுகளுக்கு வந்து யாரும் எதிர்ப்பாட்டு பாடவில்லை. ஆனால் இதேபோல் பாங்கொலி பற்றி யாராவது கொஞ்சம் கேலி செய்திருந்தால் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்த வேற்றுமை ஏனென்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன் . என் மதம் என் உயிருக்கும் மேலானென்பதைத் தவிர வேறேதும் பதில் உண்டா?//
//மற்ற மதத்தினரின் பாடல்களை உங்கள் பதிவில் கும்மிப் பாட்டு, குத்துப் பாட்டென்று நீங்கள் சொல்லியிருந்தாலும் உடனே உங்கள் பதிவுகளுக்கு வந்து யாரும் எதிர்ப்பாட்டு பாடவில்லை// என்று என் எதிர்வினையைக் கூட சாமர்த்தியமாக திரிக்கும் உங்களுக்கு நேசகுமார் , முஸ்லிம்களின் தொழுகை அழைப்பொலியை “அபஸ்வரம்” என்று சொன்னபோது உரைக்கவில்லையே! ஏன்?
//நான
//அதிகம் சொல்வதற்கு ஒன்றுமில்லை நண்பரே, உங்கள் கருத்துக்களுக்கான எதிர்வினைகளை ‘எள்ளல், ஏளனம் , நொண்டிச்சாக்கு, தனிமனித தாக்குதல்’ என்று பல்வேறு வசதியான சொல்லாடல்களில் புறந்தள்ள வாய்ப்பிருக்கும் உங்களிடம் எந்தப்பதிலும் எடுபடாது. ஏற்கனவே சொன்னதுபோல் சொல்லப்படும் எந்த பதிலுடனும் “ஏன்?” என்று சேர்த்துக் கொண்டால் எவரும் தருமியாகி விடலாம்.//
உண்மை உரைத்தீர்!!!
ஏன் சாமி ஆயிரம் தான் தொழில்னுட்பம் வளர்ந்தாலும் இப்படியே தான் இருப்பேனு இருக்கிங்க, அவர் சொன்னார் நான் சொன்னேன்னு மாத்தி மாத்தி ஜல்லி ,மணல் செங்கல் எல்லாம் அடிச்சுகிட்டு இருக்கிங்க! நிறுத்தனும் எல்லாம் நிறுத்தனும் … நிறுத்துவிங்க நிற்கும், நிற்க வைக்கணும்.