திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வி தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அதில் குர்ஆன் இறைவேதம் என்பதையும் பைபிள் மனிதக் கரங்களால் மாசுபட்ட காரணத்தால் அதில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தோம். அவ்வாறு வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நியாயமான மறுப்பைத் தரவியலாத கிறித்தவ சபை சில குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளது. குர்ஆன் மீது வைக்கப்படும் …
Read More »சகுனம் இல்லை நற்குறி உண்டு.
1437. நபி (ஸல்) அவர்கள், ‘தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(மங்கலகரமான) நல்ல சொல்” என்று பதிலளித்தார்கள். புஹாரி :5776 அனஸ் (ரலி). 1438. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று கூறினார்கள். மக்கள், …
Read More »தொற்று நோய் சகுனம் பற்றி….
1435. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது.’ ஸஃபர்’ தொற்றுநோயன்று. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று கூறினார்கள். அப்போது கிராமவாசியொருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?’ என்று கேட்டார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு …
Read More »பிளேக் எனும் கொள்ளை நோய் பற்றி….
1433. (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது, அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது…. (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது …
Read More »தேன் ஒரு நோய் நிவாரணி.
1432. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து ‘தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது” என்று கூறி)டவே, மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி (ஸல்) அவர்கள் …
Read More »மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-1)
திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வி தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அதில் குர்ஆன் இறைவேதம் என்பதையும் பைபிள் மனிதக் கரங்களால் மாசுபட்ட காரணத்தால் அதில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தோம். அவ்வாறு வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நியாயமான மறுப்பைத் தரவியலாத கிறித்தவ சபை சில குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளது. குர்ஆன் மீது வைக்கப்படும் …
Read More »மனதுக்கு ஆறுதல் தரும் தல்பீனா.
1431. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களின் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்று விடுவார்கள். அப்போது ஒரு பாத்திரத்தில் ‘தல்பீனா’ (எனும் பால் பாயசம்)தயாரிக்கும்படி ஆயிஷா (ரலி) கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு ‘ஸரீத்’ (எனும் தக்கடி) தயாரிக்கப்படும். அதில் ‘தல்பீனா’ ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) …
Read More »கருஞ் சீரக விதை நோய் நிவாரணி.
1430. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘கருஞ்சீரக விதையில் ‘சாவைத்’ தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று கூறினார்கள். புஹாரி : 5688 அபூஹூரைரா (ரலி).
Read More »இந்தியக் கோஷ்டக் குச்சி நோய் நிவாரணி.
1429. நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5692 உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி)
Read More »ஆண்குழந்தை ஆடையில் சிறுநீர் கழித்தால்….
1428. ‘(தாய்ப் பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத என்னுடைய சிறிய ஆண் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்களின் மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபி (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை” . புஹாரி : 223 உம்மு கைஸ் (ரலி).
Read More »