Featured Posts

பொறாமை கொள்ளும் இரு விஷயங்கள்..

466. இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :7529 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) 467. ‘ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் …

Read More »

சூரா பகராவின் இறுதி இரு வசனங்களின் சிறப்பு..

465. ‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 4008 அபூ மஸ்ஊத் (ரலி)

Read More »

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

463. ”எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்கள். நான் ‘அந்நிஸா’ எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், …

Read More »

வாடகையும், வட்டியும் சமமாகுமா?

வாடகை, வட்டி இவை இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. வாடகைக்கு குடியிருப்பதும், வாடகைக்கு பொருள் எடுப்பதும் தவறில்லை என்றால் பணத்தைக் கடனாகக் கொடுத்து அதற்கு வட்டி வாங்குவதும் வாடகை போன்றது தான். அதாவது வீடு, பொருட்களை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது போல பணத்தை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது வட்டியில் சேராது என்று வாடகையும், வட்டியும் ஒரு தன்மையைக் கொண்டது என நண்பர் ரியோ கருத்து வைத்திருக்கிறார். வாடகையும் வட்டியும் …

Read More »

குர்ஆனை ஓதுவதில் சிறந்தவரிடம் ஓதக்கூறுதல்..

462. நபி (ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, ‘வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும்வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை..” என்னும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்” என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), ‘என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?’ என்று கேட்க, நபி (ஸல்) …

Read More »

குர்ஆனை மனனம் செய்தவரின் சிறப்பு..

460. குர்ஆனை ஓதும் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, நார்த்தைப் பழம் போன்றதாகும். அதன் மணமும் நன்று சுவையும் நன்று. குர்ஆனை ஓதாத இறைநம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதற்கு மணம் கிடையாது (ஆனால்,) அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலையானது, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் மணம் நன்று. அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதற்கு மணமும் …

Read More »

ஆளுக்கொரு நீதி!

கோவை குண்டுவெடிப்புக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த பத்து வருடங்களாக சிறையிலிருக்கும் முஸ்லிம்களின் ஜாமீன் பலமுறை மறுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, ஆனால் குற்றம் நிரூபிக்கப் படாத எவரும் ஜாமீனில் வெளிவந்து சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்ளலாம். அந்தவகையில் கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி நடந்த ஒரு கருத்தருங்கம் பற்றிச் சகோதரர் . கோ.சுகுமாறன் அவர்கள் …

Read More »

குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்..

458. ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் – ரலி-) தம் வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) ‘அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி (ஸல்) …

Read More »

அபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு?

இரத்த பந்தத்தால் ஏற்படும் உறவுகளில் திருமணம் செய்து கொள்ள எந்ததெந்த உறவு முறைகளெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளதோ, அதே திருமண உறவு முறைகள் பால்குடி உறவுகளிலும் இஸ்லாம் தடை செய்திருக்கிறது. ”உங்களுக்கு பாலூட்டிய செவிலித் தாய்மார்களையும்” (நீங்கள் மணப்பது விலக்கப்பட்டுள்ளது. 004:023) திருமணம் செய்வதற்குத் தடை செய்யப்படும் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகள், பால்குடி உறவுகள் பற்றியும் முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள். என்றாலும், இஸ்லாத்தை விமர்சிக்கும் மேதகு நண்பர்களுக்கு இது பற்றி அரிச்சுவடி …

Read More »

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள் (பகுதி 2)

“கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” என்ற மலர்மன்னனின் அபத்தக் கட்டுரையில் முஸ்லிம்களின் வழிபாடுகளைக் குறித்த துவேசங்களுக்கான பதில் வினையை முதல் பகுதியில் விரிவாகப் பார்த்தோம். அதில் தஞ்சை முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு வேண்டுமென்றே துவேஷக் கருத்துகள் இந்துத்துவ வாதிகளால் விதைக்கப்படுகின்றன எனக் கண்டோம். அடுத்து, தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான காழ்ப்புக் கருத்துக்களைக் காண்போம். முதலில் அவர் வடிக்கும் முதலைக்கண்ணீர். “காவியச் சுவை மிக்க கம்ப …

Read More »