1245. செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும் …
Read More »அல்லாஹ்வின் வாக்கு மேலோங்க போரிடுபவரின் சிறப்பு.
1243. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஒருவர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார்; மற்றொரு மனிதர் புகழுக்காகப் போரிடுகிறார்; இன்னொரு மனிதர் தன் வீரத்தைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார். (இவர்களில்) இறைவழியில் போரிடுபவர் எவர்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘(இவர்களில் எவருமே இறைவழியில் போரிடுபவராக இல்லை.) அல்லாஹ்வின் (ஏகத்துவ) வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்” என்று பதிலளித்தார்கள். புஹாரி : …
Read More »நீரிழிவு (Diabetics) நோயை வெற்றிக்கொள்வோம்
இனிவரும் தலைமுறைகள் அம்மி, அடிப்பம்பு, உலக்கை, குடக்கல் போன்றவற்றை மியூசியத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதை உண்மைபடுத்தும் விதமாக, வாழ்வின் அன்றாட தேவைகளுக்கு எலக்ட்ரிகல் சாதனங்களையே நம்பி வாழ்கிறோம். இச்சாதனங்கள், நம்மை அறியாமலேயே உடல் உறுப்புகளுக்கு இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்த பயிற்சிகளை தடுத்து, பலவித நோய்களில் அல்லல் பட காரணமாக அமைந்துவிட்டன. இன்றைய சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.
Read More »அறப்போரில் கொல்லப்பட்டவர் சுவனத்தில்…
1241. உஹுதுப் போரின்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘சொர்க்கத்தில் என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தம் கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும் வரையில் போரிட்டார். புஹாரி : 4046 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி). 1242. நபி (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது …
Read More »அறப்போர் யார் மீது கடமையில்லை?
1240. ”இறை நம்பிக்கை கொண்டோரில் (அறப்போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும், இறைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக முடியாது…” என்னும் வசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார். (அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) தம் கண்பார்வையில்லாத …
Read More »அறப்போருக்குச் செல்பவரின் குடும்பத்தைப் பராமரித்தல்.
1239. அறப்போரில் செல்பவருக்கு உதவியவர் புனிதப்போரில் பங்கு கொண்டவர் போன்றவராவார். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவரின் வீட்டாரின் நலத்தைப் பாதுகாக்கிறவரும் புனிதப் போரில் பங்கு கொண்டவராவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. புஹாரி : 2843 ஸைத் இப்னு காலித் (ரலி).
Read More »முஸ்லிம்களின் நம்பிக்கை என்ன?
நித்திய ஜீவனும், இணை-துணை அற்றவனுமான ஏக இறைவன் ஒருவன் மீதே முஸ்லிம்கள் நம்பிக்கைக் கொள்கின்றனர். மேலும், அவனால் படைக்கப்பட்ட வானவர்கள், மனித குலத்துக்கு அவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர்கள் ஆகியோரையும் நம்புகின்றார்கள். அது மட்டுமல்ல, இவ்வுலக அழிவுக்குப் பின்னால் ஏற்பட இருக்கும் மறுமைநாளின் மீதும் அவர்கள் பூரண நம்பிக்கைக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இந்த உலகில் தாம் புரிந்த செயல்களுக்கு அப்போது கணக்கு வாங்கப்படும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அவர்கள் …
Read More »கொன்றவர் கொல்லப்பட்டவர் இருவரும் சுவனத்தில்…
1238. அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2826 அபூஹுரைரா (ரலி).
Read More »மதைன் சாலிஹ் (புகைப்படங்கள்)
View Album Get your own
Read More »இதுதான் இஸ்லாம் (பகுதி-1)
உலகில் வாழும் மக்கள் சமுதாயம் ஆன்மீக ரீதியாகத் தாம் பின்பற்றும் மதங்கள், சமயங்கள் கலாச்சாரங்கள் இவை சிறந்ததா எனச் சிந்திக்கும் பொருட்டு திறந்த மனதுடன் இந்த ஆய்வைக் படிக்குமாறு முதலாவதாக கேட்டுக்கொள்கிறேன். நம்மைப் படைத்த இறைவன் நாம் உண்ண, உடுத்த, வசிக்க, உறவு முறைகள் இன்பம் துன்பம் நோய் மருந்து என பல் வேறு சூழ் நிலைகளை நம்மீது விதித்து நம்மை உலகில் வாழச் செய்துள்ளான்.
Read More »