Featured Posts

காஷ்மீர் ஓர் பார்வை-2

 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14,15 தேதிகள் இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டு தனித்தனி நாடுகள் சுதந்திரம் அடைந்தன. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அப்போது இருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை – ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசங்களை என்ன செய்வது? ”இந்தியப் பகுதிதியிலுள்ள சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையலாம். பாகிஸ்தான் பகுதியிலுள்ள சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணையலாம்” என்று சொல்லி விட்டார். பிரிட்டிஷ் அரசின் கடைசிப் பிரிதிநிதி …

Read More »

காஷ்மீர் ஓர் பார்வை-1

காஷ்மீர் – இந்தியாவின் மேற்கே உச்சத்தில் அமைந்துள்ள ஒரு சொர்க்க பூமி. காஷ்மீரைப் பற்றி நினைக்கும் எவரது உள்ளத்திலும் பனித் தென்றல் வீசும். அதன் வரலாற்றை படிக்கும் போது அந்த பனித் தென்றலுடன் இரத்த வாடையும் சோகமும் சுமையும் மனதை கவ்விக் கொள்ளும். வெகுளித்தனமும் வெள்ளை மனதும் கொண்ட காஷ்மீரத்து மக்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்கள் வெகுளித்தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். காரணம் நில ஆக்ரமிப்பை தங்கள் …

Read More »

அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும் – முடிவுரை

வாசக நண்பர்களே, இதுவரை வஹீ (வேத வெளிப்பாடு) மனநோயின் அறிகுறி என்ற காழ்ப்புணர்வு கலந்த இறக்குமதி செய்யப்பட்டக் குற்றச்சாட்டை குர்ஆன், ஹதீஸ் மூலமும், சமூக, வரலாற்று, அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த மருத்துவக்குறிப்புகளை சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஆதாரங்களுடன் வைக்கப்பட்ட இம்மறுப்புத்தொடரைப் பார்த்தோம். பின்னூட்டங்கள் என்ற பெயரில் வெவ்வேறு புனைப்பெயரில் தேவையற்ற திசை திருப்பல்கள், தனி மனித துவேசம், ஏளனம் மற்றும் ஆதாரமற்ற அவதூறுகள் சொல்லப்பட்ட போதிலும், …

Read More »

நபியின் துஆவைக் கொண்டு வஸீலா தேடுவது எப்படி?

நபிகளின் பிரார்த்தனையாலும், சிபாரிசாலும் வஸீலா தேடுவதற்கு இரு முறைகள் இருக்கின்றன. ஒன்று: நபிகளிடம் சென்று அவர்கள் தமக்காக துஆச் செய்ய வேண்டுமென்றும், ஷபாஅத் செய்ய வேண்டுமென்றும் வேண்டிக் கொள்வது. அப்போது அவர்கள் வேண்டியவனுக்காக துஆவும், ஷபாஅத்தும் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்தபோது நடைபெற்ற வஸீலா தேடுதல் என்பது இதுவேயாகும். மறுமை நாளன்றும் இப்படித்தான் அவர்களிடம் வேண்டப்படும். நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் அனைத்து நபிமார்களிடமும் மக்கள் கெஞ்சி …

Read More »

The End] நிலமெல்லாம் ரத்தம் – நிறைவுரை

நிலமெல்லாம் ரத்தம்-பா.ரா-நிறைவுரை களத்துக்கு நேரே சென்று ஆராய்ச்சி செய்து எழுதும் ஆய்வாளன் அல்ல நான். அதற்கான வசதி வாய்ப்புகளுமமிங்கே இல்லை. புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. சில வல்லுநர்கள் அவ்வப்போது பிழை திருத்தி உதவியிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இனி, குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான ஆதாரங்களின் பட்டியல் மற்றும் நன்றிக் குறிப்பு: உதவிய நூல்களின் பட்டியல்: 1. பரிசுத்த வேதாகமம் …

Read More »

101] பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 101 எல்லா பாலைவனங்களிலும் எப்போதாவது ஒருநாள் மழை பொழியத்தான் செய்யும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. பாலஸ்தீன் சுதந்திரம் என்பதும் சாத்தியமானதே. அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இஸ்ரேல் இன்று பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சி, உலக நாடுகள் மத்தியில் இஸ்ரேலியத் தொழில்நுட்பங்களுக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த இனச் சண்டையை இன்னும் தொடர்வது அத்தேசத்தின் மிகப்பெரிய அவமானமே. பாலஸ்தீன் …

Read More »

100] பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 100 மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் 1977_ம் ஆண்டு தொடங்கி நிறுவப்பட்ட அத்துமீறிய யூதக் குடியிருப்புகளை இஸ்ரேல் இப்போது காலி செய்ய முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றதையும், அனைத்துத் தரப்பினரும் ஏரியல் ஷரோனைப் பாராட்டுவதையும் பார்த்தோம். அரேபியர்கள் வாழும் பகுதிகளில் வசித்து வந்த யூதர்கள் அத்தனை பேரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன்மூலம், அரேபியர்களின் நிலப்பகுதி அவர்களுக்கே …

Read More »

99] இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா?

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 99 ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்தாலும் திட்டமிட்டபடி, ஜனவரி 9_ம் தேதி பாலஸ்தீன் அதிபர் தேர்தல் நடக்கத்தான் செய்தது; மம்மூத் அப்பாஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் பிரச்னை ஏதும் வரவில்லை. ஹமாஸின் கோபம், அர்த்தமில்லாததல்ல. எங்கே மீண்டும் தமது மக்கள் ஏமாற்றப்படப் போகிறார்களோ என்கிற பதைப்பில் வந்த கோபம் அது. ஆனால், பாலஸ்தீன் அத்தாரிடியினரும் பிற போராளி இயக்கங்களும் ‘தேர்தல் முதலில் ஒழுங்காக நடக்கட்டும்; மற்றவற்றைப் …

Read More »

பலதாரமணம்: பாவமா? பரிகாரமா? பகுதி-2

முன் பதிவின் தொடர்ச்சி… பலதாரமணத்தை தடை செய்திருக்கும் இடங்களிலெல்லாம் சமூக அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு இரண்டாம் உலகப் போரில் பல இலட்சம் ஜெர்மானியர்கள் செத்து மடிந்த போது அவர்களின் விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் நோக்கில் பலதாரமணத்தை சட்டமாக்கிட கோரிக்கை எழுந்தபோது , கிறிஸ்தவ தேவாலயங்களால் அது முற்றாக நிராகரிக்கப்பட்டது. விளைவாக, இன்று விபச்சாரம் அங்கு ஒரு தொழிலாகவே அங்கீகரிக்கப்பட்டு விட்டது. பாலியல் தொழிலாளர்கள் …

Read More »

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 8

வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு முஹம்மது நபியின் தூதுத்துவத்தையும் வஹீ அருளப்பட்ட விதத்தையும் ஆய்ந்த ஒரு சிலர், நபிகளாரின் உன்னத வாழ்க்கையையும் வஹீ அருளப்படுவதற்கு முன்னர் நபிகளார் தம் சமூகத்தில் பெற்றிருந்த நம்பகத் தன்மையையும் கருத்தில் கொண்டு, ‘அவரால் குர்ஆன் எழுதப்படவில்லை அல்லது அதை எழுதுவதற்கான உள்நோக்கம் அவருக்கு இருந்ததில்லை’ என ஒப்புக் கொண்ட போதிலும், ‘அவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டார் அல்லது தாம் இறைச்செய்தி அனுப்பப்படும் தூதர் என்ற மனப்பிரமையில் …

Read More »