Featured Posts

ஸுஜூதின் போது….

277- நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸுஜுது செய்யும் போது) தமது இரு அக்குளின் வெண்மை தெரியும் அளவுக்குத் தமது இரு கைகயையும் விரித்து வைப்பார்கள். புகாரி-390: மாலிக் பின் புஹைனா (ரலி)

Read More »

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 18.

நான் விடவேயில்லை. முஸ்லிம்கள் என்னிடம் காட்டின அந்த பணிவையும், பாசத்தையும், அவர்களது உபசரிப்பையும் பற்றி விவரமாக அவளிடம் சொன்னேன். கடைசியில் அவளது மனம் எனது ஆசைகளை ஏற்றுக் கொள்வதற்குத் தயாரானது. நான் மனைவியையும் அழைத்துக் கொண்டு நாசர் மஹ்தனியின் வீட்டிற்குச் சென்றேன். அவர் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளையெல்லாம் எனக்கு சொல்லித் தந்து விட்டு புனிதமான எங்களது பூர்விகன் பிலால்(ரலி) உச்சரித்த அந்த கலிமாவை மொழிந்து தந்தார்கள். நாங்கள் சந்தோஷமாக மனதில் …

Read More »

ஸுஜூதில் நிலத்தில் படும் உடல் உறுப்புகள்..

276– நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு கால்கள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது எனவும் கட்டளையிடப் பட்டார்கள். புஹாரி-809: இப்னு அப்பாஸ் (ரலி)

Read More »

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 17.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களுடன் பழகியதால் எனக்கு என்ன கிடைத்தது? கேவலம் தாழ்ந்த இன மக்களுக்குக்கூட தன்னுடைய மதத்தைப் பகிர்ந்து கொள்ள கொடுக்காத ஒரு வெறிபிடித்த இனம். அது மட்டுமல்லாமல் நாஸர் மஹ்தனி மலபாரிலே கோட்டக்கல் ஜும்ஆ மஸ்ஜிதில் ஒரு இரவு தொழுகை தொழுவதற்காக காரை விட்டு இறங்கினார். நானும் அவரோடு இருந்தேன். மஹ்தனி பள்ளியின் உள்ளே செல்லும் போது நான் வெளியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். முன் வரிசையில் நிற்கின்ற ஒரு கூலிப்பணிக்காரனது காலின் …

Read More »

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 16.

முஸ்லிம் பெண்களை பாதுகாப்பான முறையிலும் தங்களது பார்வையை தாழ்த்திக்கொண்டும் பணிவோடு நடக்கவும் வலியுறுத்தி பர்தா முறையை இஸ்லாம் பெண்களுக்கு கற்றுக்கொடுக்கின்றது. பண்டைய ஆர்.எஸ்.எஸ்ஸின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்ட அவர்களோடு சேர்ந்து நின்று முஸ்லிம் பெண்மணிகளைப் பற்றியும் அவர்களது பர்தாவைப் பற்றியும் கிண்டல் செய்த காலம் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. ஆனால் இந்த சங்பரிவார்களோ தங்களது இந்து பெண்கள் ஆடை அணிவதையும் அதிலும் குறிப்பாக அவர்கள் மார்பை மறைப்பதையும் கண்டிக்கும் நிலை …

Read More »

ருக்உ ஸுஜூதில் என்ன கூறுவது?..

275- நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும் ஸஜ்தாவிலும் ஸுப்ஹான கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்மஃபிர்லி (இறைவா! நீ தூயவன்: எங்கள் இறைவா! உன்னைப் போற்றுகிறோம்: இறைவா! என்னை மன்னித்துவிடு) என்று அதிகமதிகம் கூறுவார்கள். (இதாஜாஅ… என்ற அத்தியாயத்தில் கூறப்படும்) குர்ஆனின் கட்டளையை இதன் மூலம் செயல் படுத்துவார்கள். புஹாரி-817: ஆயிஷா (ரலி)

Read More »

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 15.

அன்வாருஷ்ஷேரியின் வாழ்க்கை எனக்கு இஸ்லாத்தைத் தெரிந்து கொள்வதற்கு முதலில் ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் ஓர் புது அனுபவம் கிடைத்தது. என்னை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதிலிருந்துதான் இஸ்லாத்தைப் பற்றி மேலும் தெரியவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழுந்தது. பல இஸ்லாமிய அறிஞர்களையும் நான் நாசர் மஹ்தனி மூலம் அறிந்து கொண்டேன். இந்தப் பழக்கவழக்கம் தான் வேலாயுதன் என்ற எனக்கு இஸ்லாத்தைத் தெரிந்திட வாய்ப்புகளை ஏற்படுத்தித் …

Read More »

இமாமைப் பின்பற்றுதல்..

274- நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நாங்கள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்லி முடித்து (ஸுஜூதுக்குச் சென்று) நெற்றியைப் பூமியில் வைப்பது வரை எங்களில் யாரும் (ஸுஜூதுக்காகத்) தமது முதுகை வளைக்க மாட்டார்கள். புஹாரி-811: பராவு (ரலி)

Read More »

ஹராமென்றால் இழிவானதா?

இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நீலகண்டன் – http://arvindneela.blogspot.com/2006/12/blog-post_20.html – சொல்கிறார், ”ஹராம்” என்றால் ”இழிவானது” என்று. கணவனுள்ள பெண்களும் – ”ஹுர்ரிமத் அலைக்கும்”… – (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளார்கள். 004:024) எப்படியிருக்கிறதென்று பாருங்கள்? ஏற்கெனவே ஒருவனுக்கு மனைவியாக இருப்பவள் இன்னொருவனைத் திருமணம் செய்து அவனுக்குப் பிள்ளையும் பெற்றாளாம். (இன்னும் மூவரைக் கட்டிக் கொண்டால் சுத்தமாக இருக்கும்) ஒருவனுக்கு மனைவியாய் இருப்பவள் அவனிடமிருந்து விவாகரத்துப் பெறாமல் வேறொருவனை மணமுடிக்கக் கூடாது என்று இஸ்லாம் …

Read More »

தொழுகையை சுருக்கமாக தொழுதாலும் பரிபூரணமாக தொழுதல்..

272- நபி (ஸல்) அவர்கள் ருகூவும் அவர்களது ஸஜ்தாவும் இரு ஸஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ருகூவிலிருந்து எழுந்து நிமிர்தலும் நிற்றல், உட்கார்தல் நீங்கலாக அனைத்தும் ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன. புஹாரி-792: பராஉ (ரலி) 273- அனஸ் (ரலி) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுது காட்டினார்கள். அத்தொழுகையில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும் மறந்து விட்டார்களோ என்று நாங்கள் பேசிக் கொள்ளும் அளவுக்கு நிற்பார்கள். புஹாரி-800: ஸாபித் …

Read More »