217- நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவங்கும் போதும் ருகூவுக்காகத் தக்பீர் கூறும் பொதும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது தோள்களுக்கு நேராகவும் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல்ஹம்து என்று கூறுவார்கள். ஸஜதாவுக்குச் செல்லும் போது இவ்வாறு செய்ய மாட்டார்கள். புஹாரி-735: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) 218- மாலிக் பின் அல் ஹுவைரிஸ் (ரலி) தொழும் போது …
Read More »ஜாஃபர் அலி
பாங்கொலியில் ஷைத்தான் ஓட்டமெடுப்பது
216- தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும் போது, பாங்கு சப்தத்தை கேட்ககூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் வருகிறான் தொழுகைக்கு இகாமத் கூறும்போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்துக்கொண்டு தொழுகையாளி அதற்கு முன்புவரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, இதை நீ நினைத்துப்பார்; அதை நீ நினைத்துப்பார் என்று சொல்லிக் …
Read More »பாங்குக்கு பதில் எப்படி கூறுவது?
215- பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-611: அபூஸயீதுல் குத்ரீ (ரலி)
Read More »பாங்கு எப்படி வந்தது?
213- முஸ்லீம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்த போது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப் படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிருத்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கின்ற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர் (ரலி) தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை ஏன் ஏற்படுத்தக்கூடாது? என்று கூற உடனே …
Read More »தரீக்காக்கள் இஸ்லாத்தில் உள்ளதா?
ஸூஃபியிஸம்: ஸூஃபிகள், ஸாதுலிய்யா தரீக்கா, காதிரிய்யா தரீக்கா, நூரிய்யா தரீக்கா என்று பல தரீக்காக்களை உருவாக்கி மார்க்கத்தைப் பல பிரிவுகளாக பிரித்து விட்டனர்.
Read More »தூக்கம்…
212- தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் நபி (ஸல்) அவர்கள் பள்ளியின் பக்கத்தில் ஒரு மனிதரோடு இரகசியமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு வராமல் நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் மக்கள் தூங்கி விட்டனர். புகாரி-642: அனஸ் (ரலி)
Read More »கழிவறை துஆ….
211- நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்கு நுழையும்போது, இறைவா! அறுவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானை விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். புகாரி-142: அனஸ் (ரலி)
Read More »ஒரு முஸ்லிம் அசுத்தம் ஆகமாட்டான்…
210- நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்று கொண்டிருந்த சமயம் நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் நழுவி விட்டேன். குளித்து விட்டுப் பின்னர் வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அபூஹூரைரா! எங்கு நழுவி விட்டீர்? என்று கேட்டார்கள். குளிப்புக் கடமையாகி இருந்தேன். எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதை வெறுத்தேன் எனக் கூறினேன். அப்போது ஸூப்ஹானல்லாஹ்! நிச்சயமாக ஒரு முஸ்லிம் …
Read More »தண்ணீர் இல்லாதபோது தயம்மம் செய்க..
206- நாங்கள் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். பைதாவு அல்லது தாத்துல்ஜைஸ், என்ற இடத்தை வந்தடைந்ததும் எனது கழுத்தணி அறுந்து (தொலைந்து) விட்டது. அதை தேடுவதற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கி விட்டோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூபக்ர் (ரலி)இடம் சிலர் வந்து (உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் …
Read More »செத்த ஆட்டின் தோலைப் பதனிடுக…
205- மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மம் வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இதன் தோலை நீங்கள் பயன் படுத்தியிருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். இது செத்ததாயிற்றே! எனத் தோழர்கள் கூறியதும், இதை உண்பது தான் தடுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-1492: இப்னு அப்பாஸ் (ரலி)
Read More »