124- (நபியே) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அதாவது) தூய மனம் படைத்த உம்முடைய குழவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!) எனும் (26:214 ஆவது) இறைவசம் அருளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ஸஃபா (மலை) மீதேறி உரத்த குரலில், யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள் யார் இவர்? என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்று …
Read More »நூல்கள்
ஓரிறைக் கொள்கையும் நற்செயல்களும்…..
123- உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள் என்னும் (26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, குறைஷிக் குலத்தாரே! என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து) ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரகநெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களை காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து …
Read More »நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை!
122- ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்து விட்டனர். அல்லது ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப்) பிரார்த்தனை உண்டு. அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டு விட்டனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய வைத்துள்ளேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-6305: அனஸ்(ரலி)
Read More »1. இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?
இறைநேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், ‘நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையல்லவா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அதுபோல் தான் நாங்களும் இறைவனிடம் எங்களுக்காக வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம்’ என்று கூறுகின்றனர். …
Read More »அல்லாஹ் நாடினால்……..
121- ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தவருக்காகப் பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பெற்ற) ஒரு பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் என் பிரார்த்தனையை மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரைக்க பத்திரப்படுத்தி வைக்க நான் விரும்புகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-7474: அபூஹூரைரா(ரலி)
Read More »இறைவனிடம் பரிந்துரைக்கு தகுதியானவர்!
120- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே (பற்களால்) பற்றிக் கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன் (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் …
Read More »லாஇலாஹ இல்லல்லாஹ்!
119- அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று (இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைச் செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் …
Read More »நிரந்தர நரகம் விதிக்கப்பட்டவர்களைத் தவிர…
118- அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் (அதிபயங்கரமான)இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாராவது) நாம் கேட்டுக் கொண்டால் நன்றாயிருக்குமே! என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான)ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன் (தன்னால் படைக்கப்பட்ட) உயிரை உங்கள் உடலுக்குள் ஊதினான். மேலும் தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட ,அவர்கள் உங்களுக்குச் …
Read More »குறைந்த அந்தஸ்து உடைய சொர்க்கவாசி
117- நபி (ஸல்) அவர்கள் (சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின் வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் அது நிரம்பியதைப் போன்று அவருக்குத் தோன்றும் உடனே அவர் திரும்பி …
Read More »நரகவாசிகளின் மீது அல்லாஹ்வின் கருணை
116- (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹயாத் என்ற ஆற்றில் போடப்படுவார்கள். -இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் ஹயா என்று சந்தேகப்படுகிறார்- அவ்வாறு அவர்கள் இந்த ஆற்றில் போடப்பட்டதும் பெறும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் …
Read More »