பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்னுரை எல்லாப்புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின் தொடந்த தாபியீன்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
Read More »நூல்கள்
மஸ்ஜிதுக்குள் மனித மிருகங்களின் வெறியாட்டம்
பேருவலை – மஹகொட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் எரிப்பும், படுகொலையும் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் இரத்தக் கறை படிந்த நிகழ்வாகப் பதிவாகி விட்டது. பேருவளை, தர்கா டவ்ன் பகுதிகளில் பல தியாகங்களுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. வீடுகளிலும், பொதுப் பள்ளிகளிலும் பல ஏச்சுப் பேச்சுகள், எதிர்ப்புக்கள், கல்லெறிகளுக்கு மத்தியில் தொடரப்பட்ட பிரச்சாரம், “உண்மை உதயம்” ஆசிரியரும், சகோதரர் தவ்பீக் மதனி அவர்களும் கடத்தப்பட்டுக் கர்ண கொடூரமாகத் தாக்கப்பட்டதன் பின்னர் …
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 07)
ஹதீஸில் முரண்பாடா? ‘நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது’ என்ற ஆதாரபூர்வமான அறிவிப்பை ‘அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது’ என்று கூறி, சகோதரர் மறுத்து வருகின்றார். இவர் கூறும் காரணம் தவறானது என்பதை இதுவரை நாம் ஆராய்ந்தோம். ‘குறித்த இந்த ஹதீஸிற்குள்ளேயே முரண்பாடு இருக்கின்றது’ என்ற மற்றுமொரு வாதத்தையும் இந்த ஹதீஸை மறுப்பதற்குத் துணையாக முன்வைக்கின்றார்.
Read More »[தொடர் 10] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்
மஃரிபத் (மெஞ்ஞானம் ) المعرفة சூஃபிகளின் கூற்றுப்படி தேவையற்ற சரீஅத் சட்டங்களால் தன்னைத்தானே விலங்கிட்டுக் கொண்ட ஒரு மனிதன் ஒரு சூஃபிக் குருவின் சீடனாகி தரீக்கத் எனும் சேற்றினுள் விழுந்து மூளையையும் சுய சிந்தனையையும் பறிகொடுத்து பின்னர் ஹக்கீக்கத் எனும் மாயையில் வீழ்ந்து புலம்ப ஆரம்பித்ததும் அளவுக்கதிகம் இறை நினைவில் (!?) (சூஃபிகளின் இறைவனான ஷைத்தானின் நினைவில் மூழ்கியதால்) ‘பனாஃ’ எனும் நிலை ஏற்படுமாம். இதற்கு இறை நினைவால் மூழ்கி …
Read More »[தொடர் 9] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்
الحقيقة ஹகீக்கத் (ரகசியம் ) ஹக்கீக்கத் எனப்படுவது சூஃபிகளின் ஷைத்தானிய அடிப்படை விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது. தன் வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன் மார்க்க விளக்கம் பெற ஷைத்தானிய தோழர்களாகிய சூஃபிகளை நாடும் போது முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு கடைப்பிடித்து முஸ்லிமாக இருந்த அவனை தரீக்கத் எனும் பாதாளக் குழியில் தள்ளி, தம்மைத் தவிர வேறு யார் எது சொன்னாலும் கேட்கக் கூடாது எனும் …
Read More »[தொடர் 8] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்
தரீக்கத் الطريقة அன்றைய புராதன சூஃபித்துவ வாதிகள் முதல் இன்றுள்ள நவீன சூஃபிகள் உட்பட அனைவரிடமும் புரையோடிப் போயுள்ள ஒரு விஷயம்தான் இந்ததரீக்காவாகும். இதி்ல் பல படித்தரங்கள் உள்ளன. சுருங்கக் கூறின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றவர் முதலில் ஒரு ஷேக்கிடத்தில் பைஅத் செய்து அவர் சொல்லும் வழியில் நடைபயில்வதை இவர்கள் தரீக்கத் என்றழைக்கின்றனர். அதாவது ஒரு ஆத்மீகப் பயிற்சி பெறும் சீடர் தனது உணர்வுகள், புலன்களையெல்லாம் மரணிக்கச் செய்யுமளவு …
Read More »ஹதீஸ் விளக்கம் – கொலைக் குற்றத்திற்கும் மன்னிப்புண்டு
(அபூ ஸயீத் என்ற) ஸஅது இப்னு மாலிக் இப்னு ஸினான் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள், உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். (தவறை உணர்ந்த அவன்) இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு (மார்க்க அறிவு குறைந்த வணக்க-வழிபாட்டில் ஆர்வம் மிகுந்த) ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை …
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 06)
‘முஹம்மத்(ஸல்) சூனியம் செய்யப்பட்டவர்?’ இஸ்லாத்தின் எதிரிகள் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர் – சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சித்துள்ளனர். அப்படி விமர்சித்தவர்களைக் குர்ஆன் அநியாயக்காரர்கள் என்று கூறுகின்றது. இதன் மூலம் அவர்களது விமர்சனம் அல்லாஹ்வால் மறுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஹதீஸ் கூறுகின்றது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தோரணையில் வாதித்து சகோதரர் ஹதீஸை மறுக்கின்றார்.
Read More »[தொடர் 7] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்
சூஃபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் 1) ஷரீஅத் (மார்க்கம்) 2) தரீக்கத் (ஆன்மீகப் பயிற்சி பெறல்) 3) ஹக்கீக்கத் (யதார்த்தத்தை அறிதல்) 4) மஃரிபத் (மெஞ்ஞான முக்தியடைதல்) என இவர்கள் இஸ்லாத்தை நான்காக வகுத்திருப்பதை அறிந்து கொள்ள முடியும். இவை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 05)
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.
Read More »