பொதுவாகத் தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும், சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பில் கழிய நேரிடுகின்றது என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். இதனால் தான் கடைசிவரை உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்குச் செல்வதற்கு முன்னர், தான் மரணித்துவிட வேண்டும் என்றும் பல தந்தைகள் நினைக்கின்றனர். குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் போனவர் கௌரவிக்கப்பட்டு வாழ வழிகாட்டப்படவேண்டியவர் ஒரு மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி மூன்றுவேளைச் சாப்பிட்டுவிட்டுப் பேசாமல் கிடந்தால் போதும் என்ற …
Read More »S.A Sulthan
முகத்தால் நடப்பவன்!
முகம் மனித உடலில் ஒரு முக்கியப் பகுதியாகும். தலையின் முன் பகுதியாக அமைந்திருப்பது முகம். பலவித புலன்களுக்குரிய உறுப்புக்கள் அதாவது பார்க்கும் திறன்கொண்ட கண், உயிர் வாழச் சுவாசிக்கும் திறன்கொண்ட மூக்கு, கேட்கும் திறன்கொண்ட காது, உண்ணுபதற்கும் அழகாகப் பேசுவதற்கும் பயன்படுத்தப்படும் வாய், அழகிய தோற்றத்தை வெளிப்படுத்தும் கன்னங்கள், இன்னும் சிரம் பணிவதில் முதலிடம் வகிக்கும் நெற்றி, போன்ற முக்கிய உருப்புக்களைக் கொண்டது முகம். மனிதன் தன் குணம் சார்ந்த சில உணர்ச்சிகளைத் தனது முகத்தின் மூலமாக வெளிப்படுத்துவதால் …
Read More »உணவளிப்பவன் (பகுதி: 02)
மனிதனின் முதல் தேவை உணவுதான் என்பதையும், அந்த உணவைப் பெற்றுக் கொள்வதற்கான வழியை இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கின்றான் என்பதையும் சென்ற தொடரில் பார்த்தோம். எந்த உயிரினமும் தம் உணவைத் தாமே சுமந்துகொண்டு திரிவதில்லை! மாறாக மனிதர்களுக்கும் இன்னும் பிற உயிரினங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கின்றான் என்பதாக அல்குர்ஆன்:-29:60 வசனம் கூறுகின்றது. இதன் விளக்கத்தை அறிவதற்கு முன் இதற்கு முன்னுள்ள நான்கு வசனங்களின் விளக்கத்தையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். அதாவது அல்குர்ஆன் 29:56,57,58,59,60. ஆகிய ஐந்து வசனங்களுக்கும் பின்னணியில் முக்கியமான …
Read More »உணவளிப்பவன்!
உணவு இன்றி எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாது! உணவு என்பது ஓர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும் இறைவன் படைத்த எல்லா உயிரினத்திற்கும் உணவு என்பது அவசியமான ஒன்றாகும். வரலாற்று ரீதியாக மனிதன் இரண்டு வழிகளில் உணவைப் பெற்றுக்கொண்டான். ஒன்று விவசாயம், மற்றொன்று வேட்டையாடுதல். முந்தைய காலங்களில் மனிதனின் பெரும்பாலான உழைப்பு தனது உணவுக்காகவும் தனது ஆடைக்காகவுமே இருந்தது. இன்று மனிதன் நகையை, பணத்தை, வாகனத்தைத் திருடுவதைப் …
Read More »உலகத்தையே ஒன்றுதிரட்டி வழங்கப்பட்டவன்..!
”தன் சுற்றத்தார் குறித்து அச்சமற்றும், உடல் நலமோடு இருந்தும், அன்றைய நாளின் உணவும் ஒருவனிடம் இருந்து விட்டால் அவன் உலகத்தையே ஒன்று திரட்டி வழங்கப்பட்டவனைப் போலாவான்” என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (உபைதுல்லாஹ் பின் மிஹஸனுல் அன்ஸாரி (ரலி) நூல்: அல்அதபுல் முஃப்ரத், திர்மிதி) رواه البخاري في الأدب المفرد والإمام الترمذي في سننه من حديث عبيدالله بن محصن الخطمي: أن …
Read More »வளம் கொழித்தபோதும் பலம் இழந்தவர்கள் – தொடர் 2
ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கூறிவிட்டுக் கூறப்பட்டவர்கள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் உதாரணங்களும், எடுத்துக்காட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. படிப்பவர்களும், கேட்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதால் எடுத்துக்காட்டு என்ற யுக்தி (வழிமுறை) கையாளப்படுகின்றது. அல்குர்ஆனிலும் ஏராளமான உதாரணங்களும், எடுத்துக்காட்டுகளும் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. முன் சென்றுபோன சமுதாயத்தவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் முடிவையும் அல்லாஹ் பல இடங்களிலும் பல உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றான். اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ …
Read More »வளம் கொழித்தபோதும் பலம் இழந்தவர்கள் – தொடர் 1
அல்லாஹ் என்பவன் யார்? அவனை ஏன் வணங்கவேண்டும்? அவனது தூதரை ஏன் பின்பற்றவேண்டும்? சுவர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? சுவர்க்க வாதிகள் யார்? நரகவாதிகள் யார்? என்பனவற்றைத் திருமறை குர்ஆன் கூறுவதோடு இந்த சமுதாயம் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக முன் சென்ற சமுதாயத்தவரின் வரலாறுகளையும் அல்குர்ஆன் விவரிக்கின்றது. அறிவுரைகளும் போதனைகளும் புறக்கணிக்கப்பட்டு, தீமைகளும் பாவங்களும் தலைவிரித்தாடும்போது அல்லாஹுவின் தண்டனையும், சோதனையும் அந்த சமூகத்தை வந்து சூழ்ந்துகொள்கின்றது. وَلَقَدْ …
Read More »வேடிக்கையும் – வெளியலங்காரமும்
காட்டில் ஒரு தனி மனிதன்.., அவனை ஒரு சிங்கம் துரத்திக்கொண்டே வந்தது, சிங்கத்திடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அவன் ஓடிக்கொண்டே இருந்தான், நீண்ட தூரம் கழித்து ஒரு பாழடைந்த கிணற்றைக் கண்டான், சிங்கத்திடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்த கிணற்றுக் கயிற்றைப் பிடித்துத்தொங்கிக்கொண்டு சிங்கத்திடமிருந்து தப்பித்துவிட்டோம் என நிம்மதி பெருமூச்சு விட்டான். சற்று நேரம் கழித்து கிணற்றின் கீழே பார்த்தான்.., மிகப்பெரிய மலைப்பாம்பு வாயைப் பிளந்த வண்ணம் இவனை எதிர்பார்த்து இருந்தது, …
Read More »அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்க இருக்கும் ஒளி! -(01)
மறுமை நாளில் தன் அடியார்களுக்கு உயர்ந்தோன் அல்லாஹ், பல விதமான சிறப்புக்களையும், அந்தஸ்துக்களையும் வழங்குகின்றான். தன் அடியார்களுக்கு மன்னிப்பு வழங்குதல், தவ்பா செய்த தன் அடியார்களின் பாவங்களை நன்மையாக மாற்றுதல், பிறரின் குறைகளை மறைத்த, தன் அடியார்களின் குறைகளை உயர்ந்தோன் அல்லாஹ் மறைத்துவிடுதல் போன்ற அந்தஸ்துகளில் தன் அடியார்களுக்கு அல்லாஹ் ஒளியை வழங்க இருப்பதும் அந்தஸ்துகளில் ஒன்றாகும். மறுமை நாளில் அல்லாஹ் யாருக்கு ஒளியை (பிரகாசத்தை) வழங்குகின்றானோ, அவர்கள்தான், நேர்வழி …
Read More »நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காக…!
இந்த மனித சமுதாயம் படைக்கப்பட்டு நேர்வழி எது? – வழிகேடு எது? என்று இறைவன் புறத்திலிருந்து பிரித்தறிவிக்கப்பட்ட நாள் முதல், நேர்வழியை பின்பற்றக்கூடிய (ஈமான் கொண்ட) மக்களையும், பல வீனமானவர்களையும் விழுங்குவதற்கு எதிரிகள் இந்த பூமி முழுவதும் செயலாற்றுவதை ஒழிவு மறைவு இன்றி அனைவரும் கண்டுவருகின்றோம். ஒன்று ஈமான் கொண்டவர்களை (அல்லாஹுவையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களை) முழுவதுமாக விழுங்குவதற்கான முயற்சி! மற்றொன்று பொருளாதாரத்திலும், செயலாற்றுவதிலும் அவர்களை பலவீனப்படுத்தி அவர்களின் …
Read More »