Featured Posts

இவர்களுடைய பிரச்னை என்ன?

இவர்களுடைய பிரச்னை என்ன?

மதத் துவேஷக்கருத்துக்களை எழுதுவோரில் ஒரு சிலர் வெளிப்படையாகத் தான் இன்ன இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொள்வதுண்டு. (அவ்வியக்கப் பொறுப்பில் இருப்பதால் மறைக்க வழியில்லை என்பதால் கூட இருக்கலாம்). வேறு சிலர், அதை மறைத்தே எழுதுகின்றனர்-அவர்களுக்கு முற்போக்கு என்ற முகமூடி தேவையாக இருக்கிறது. ஆம். முற்போக்கு என்ற பெயரில் சொல்லப்படும் சரக்கு நன்கு விற்பனையாவதை அனைவரும் அறிந்தே உள்ளோம். இவர்களின் எழுத்தை வரிகளுக்கிடையில் படிக்கும் யாரும் இவர்களின் வண்ணத்தை புரிந்தே உள்ளனர் என்பதிருக்க, இந்த வெறுப்பின் பரப்பாளர்கள் ‘அய்யோ என்னைப் பார்த்து இப்படிச் சொல்கிறீர்களே’ என்று (பொய்யாக) கூக்குரலிடவும் செய்கின்றனர்.(அத்தனை எளிதாக முகமூடியை கழற்றுவதில் உடன்பாடில்லை போலும்).

ஒருசில இஸ்லாமியப் பதிவர் குர்ஆனிலிருந்து அறிவியல் உண்மைகளை நிரூபிக்க பதிவு எழுதிவருகின்றனர்: வேறு மதங்கள் மீது துவேஷம் கக்காத வரையில் அவர்களை எதிர்க்க ஒன்றுமில்லை. அவர்களின் குர்ஆனிய கருத்துக்களை (கருத்துக்களை மட்டும்) ஒரு சுமூகமான விவாத தளத்தில் எதிர்க்கவோ, ஆதரிக்கவோ செய்யலாம். சிலர் அவ்வாறே செய்து வருகின்றதும் பாராட்டத்தக்கதே. அழகிய கருத்துப்பரிமாற்றங்கள் நிச்சயம் ஆதரிக்கப்படவேண்டியவையே.

முன்பொரு முறை தமிழோவியத்தில் திரு.நல்லடியார் என்பவர் ஒரு தொடர் எழுதிவந்த போது, அதற்கு வந்த காழ்ப்புணர்வு பின்னூட்டங்களில் ஒன்று இஸ்லாமின் பரவலை எய்ட்ஸுடன் ஒப்பிட்டு வரம்பு மீறியதும் பதிலடியாக சில முஸ்லிம்களும் பின்னூட்டங்களில் வரம்பு மீறினர். இஸ்லாம் எயிட்ஸுடன் ஒப்பிட்டப்பட்டதை ஒரு குறிப்பிட்ட பதிவர் (இஸ்லாமை தாக்கி எழுதுவதால் ‘அடையாள’மான நேசர்) வேறு இடங்களில் உளம்பூரித்து சொல்லி வந்தார். ஆனால் அவரை ‘பீடி பற்ற வைக்காதீர்கள் அண்ணாச்சி’ என்று சொன்னால் கூட அவரால் தாங்க முடிவதில்லை என்பதை சமீப வேறு சில பதிவுகளிலிருந்து நாம் அறிய முடிகிறது. அப்படி யாரும் சொல்லிவிட்டாலோ, தீவிரவாதிகளுக்குரிய ‘தகுதி’யை தாராளமாக அந்த முஸ்லிமுக்கு அவர் அளித்து விடுவார். இன்னொரு பதிவில் சுருட்டு கேட்பதாக ஏளனம் வேறு, இதிலும் தெரிகிறது இவர்களின் கயமைத் தனம்.

இந்த இடத்தில் இந்தப் புனை பெயருக்குப் பின்னால் இருக்கும் கேவலமான அயோக்கியத்தனத்தையும் அலசிப் பார்ப்போம். நேசகுமார் எனும் பெயர் சாதாரணமாக இலங்கையிலும் தென் தமிழகத்திலும் கிறிஸ்தவர்கள் பயன் படுத்தும் பெயர். முதலில் தன்னை இந்தப் புனை பெயர் மூலம் ஒரு கிறிஸ்தவராகக் காட்ட முயன்றார் இந்த காவிக் கும்பலின் ஊதுகுழல். எழுத்தில் நச்சு இருந்தாலும், அதனை ஏதோ நாகரீகமாக எழுதுவது போல் பம்மாத்தும் போக்கும் காட்டிக் கொண்டிருந்தார். இருப்பினும், இச்செயல் மூலம் இஸ்லாமியர்களிடம் இருந்து கிறிஸ்தவர்கள் மீதான வெறுப்பு அவர் நினைத்தபடி வெளிப்படாமல் போகவே, இன்னொரு உத்தியைக் கையாண்டார், அது தான் ஆரோக்கியம் எனும் புனை பெயர். இந்தப் பெயரைப் பார்க்கும் எவருக்கும் இப்பெயரில் எழுதுபவர் ஒரு கிறிஸ்தவர் என நினைப்பது மிக எளிது. இதன் மூலம் தன் ஆழ்மன வக்கிரங்களை எழுத்துகளில் வெளிக்காட்டி, வெளிப்படையாகவே தரக்குறைவான ஆத்திரமூட்டக் கூடிய நாராசமான எழுத்துகள் மூலம் இஸ்லாமியர்களைத் தொடர்ந்து வெறுப்பேற்றி அவர்களின் எதிர்வினைக் கோபத்தை கிறிஸ்தவத்தைச் சாடச் செய்வது மூலம் சிறுபான்மையினமான இரு இனமும் சண்டை இட்டு அதில் குளிர்காய எண்ணினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. காவிக்கும்பல் முன்வைக்கும் வருணாசிரமக் கொள்கையினால் பாதிக்கப்படும் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் தாம் இஸ்லாத்தையோ, கிறிஸ்தவத்தையோ தேர்ந்தெடுக்கின்றனர். மேற்கண்ட புனை பெயர் மூலம், இவ்விரு இனங்களும் சண்டை மூட்டிவிட்டால் பலனடைவது யாராக இருக்கும்?

ஒரு முஸ்லிம் பதிவர், இஸ்லாமிய கணவன் மனைவியருக்கிடையே உள்ள ‘படுக்கை’ பற்றிய சில உரிமைப் பிரச்னைகளை தன் வலைப்பூவில் எழுதியிருந்தார். இதை மோப்பம் பிடித்த அந்த ‘நேசர்’, – ‘பாருங்கள் இஸ்லாத்தில் பெண்ணுரிமையை’ என்று பிலாக்கணம் தொடங்கி இஸ்லாத்தில் பெண்ணுரிமையே இல்லை, அது ஆணாதிக்க மதம், வன்முறை என்றெல்லாம் வழக்கமான ‘பாட்டு’ பாடியிருக்கிறார்.

சல்மான் என்ற ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல இரவும் பகலுமாக தேடித்தேடி, இஸ்லாத்தில் எங்கெல்லாம் பெண்ணுரிமை இல்லாமலிருக்கிறது, எங்கெல்லாம் வன்முறை உள்ளது என்பதை தன் மனோஇச்சையின் படி தீர்மானிக்கிறவருக்கு பதிலளிக்கத் தோன்றவில்லை என்றாலும் அங்கே வந்தாலும் சரியாகப் புரிந்துக்கொள்கிற ‘நாமக்கல் சிபி’ போன்றோருக்காக சில வார்த்தைகள்:

சிபி, அந்தப் பதிவரிடமே நீங்கள் கேட்டுப்பாருங்கள்: ஒரு இஸ்லாமிய ஆண் தன் மனைவியை ‘தலாக்’ சொல்ல நினைத்தால் அவன்/அவர் மூன்று மாதவிடாய் காலம், மூன்று வாய்ப்புகளுக்கு பொறுத்திருக்க வேண்டும். தவிர, சரியான காரணமும் சொல்லியாக வேண்டும். ஆனால், ஒரு இஸ்லாமியப் பெண் தன் கணவரை ‘தலாக்’ சொல்ல விரும்பினால், ஒற்றைத் தவணையிலேயே அதை செய்து விட முடியும் .மேலும் எந்த காரணமும் சொல்லத் தேவையில்லையல்லவா! – இஸ்லாத்திலும் (பெண்)மறுமணத்திற்கு அனுமதி உண்டு.இதெல்லாம் பெண்ணுரிமையில்லையா? ‘அந்த’க் காமாலைக் (இதுவும் இன்னொரு பதிவில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் தான்) கண்களுக்கு ஏன் தென்படவில்லை?. இவ்விதம் நாம் கேட்டால், உடனே நடைமுறையில் ‘மார்க்க அறிவு இல்லாத’ சில முஸ்லிம் பெண்கள் அனுபவிக்கும் சிரமங்களை பதிலாக வைப்பர். சித்தாந்தத்தை பேசினால், நடைமுறைக்குத் தாவுவது, நடைமுறையைச் சொன்னால், சித்தாந்தத்தைக் கீறுவது என்கிற இவர்களின் மாய்மாலங்களை இன்று நேற்றா பார்த்து வருகிறோம்.

அபூ முஹைகளும் சலாஹுத்தீன்களும் அப்துல்லாஹ்களும் கேட்ட எதிர்க்கேள்விகளுக்கே இன்னும் பதிலளிக்காமல், துவேஷத்தைப் பரப்புவதையும் நிறுத்தாமல் செய்வதற்கு கொஞ்சமாவது ‘நாணம்’ இருக்கவேண்டும் என்று எம்மைப்போன்றோர் எதிர்பார்த்தால் தவறுமுண்டோ?

மற்றுமொரு அனுபவமாக, இஸ்லாம் பற்றிய விளக்கங்களை காதில் வாங்கிக்கொள்ள்( விரும்பா)மல் குற்றம் சுமத்திக் களிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளவர்களில் பெரும்பாலோர் பிராமணர்களாகவே இருப்பது ஏன்? – என்ன காரணம்? – ஒரு ரவியையோ, ஸ்ரீனிவாசனையோ வைத்து இதை நாம் சொல்லவில்லை என்றாலும் கூட! (சில ‘நேசர்’கள் விதி விலக்குத் தான்). கவனிக்கவும் பெரும்பாலோர் என்று தான் குறிப்பிட்டுள்ளேன், அனைவரையும் இல்லை.

அந்தப்பதிவின் ஜால்ராப் பின்னூட்டங்களில் பல எதிர்பார்த்தப்படியே அமைந்துள்ளதும், அப்பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கிறேன் பேர்வழி என்று வந்த ‘நேசர்’ இதற்கெல்லாம் ‘இஸ்லாமிய மூலமே’ காரணம் என்ற ‘விவேகமான’ கண்டுபிடிப்புகளை திரும்பத் திரும்ப ஊதுவதையும் காண முடிகிறது. (வாசகர்களே, குர்ஆனையும் நபிவழியையும் முடிந்தவரைப் பின்பற்றுகிற ஏராள பக்திமயமான முஸ்லிம்களை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்களில் எத்தனைப் பேர் ‘வன்முறையை’த் தூண்டுகிறார்கள் என்பதை நெஞ்சில் கை வைத்து உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்கள்).

ஒரு அழகிய சுமூகமான விவாதத்தில் ஈடுபட முஸ்லிம்கள் எப்போதும் எங்கேயும் தயாராகவே உள்ளனர்.
‘நேசத்தை’ பெயரளவில் கொண்டுள்ளவர்கள் என்றால் முதலில் சலாஹுத்தீன்களும், அபூ முஹைகளும், அப்துல்லாஹ்களும் கேட்ட ஏராள எதிர்கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வரட்டும்.

காலம் காலமாக அடிமைச்சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தவன் மனநிலைப் பாதிப்பால் ‘தங்கச்சங்கிலி’ அணிந்து வருகிற அழகு நங்கையரைப் பார்த்து ‘அய்யோ சங்கிலி, அய்யோ சங்கிலி” என்று அலறுவானல்லவா, அதையே ஒத்திருக்கிறது – இவர்களின் இஸ்லாம் மீதான அலறல்கள்.

ஒரு முஸ்லிமுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் தாய் தந்தையரை விட அதிக நேசத்துக்குரியவர்கள். அப்படியே ஒவ்வொரு மதத்தாருக்கும் இனத்தாருக்கும் யாரேனும் நேசத்துக்குரியவர்களாக இருக்கலாம். மறுப்பதற்கில்லை. எனவே, நாம் தமிழ் வலைப்பூ திரட்டி மேலாளர்களை கேட்டுக்கொள்வதெல்லாம், தாய் தந்தையர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் சம்பந்தப்படுத்தி மோசமாக எழுதுபவர்களின் பட்டியலில் இந்த மத துவேஷ காழ்ப்புணர்வாளர்களையும் வைக்க வேண்டும் என்பதைத் தான்.

மற்றபடி, எந்த மதம் பெண்ணுரிமை எந்தளவு அளித்திருக்கிறது? எந்த மதம் மனிதர்களை சமமாக நடத்துகிறது என்பது போல ஆக்கப்பூர்வமான விவாதங்கள் எனில் முஸ்லிம்கள் தயாராகவே இருக்கிறார்கள் எப்போதும்!

28 comments

  1. //எந்த மதம் பெண்ணுரிமை எந்தளவு அளித்திருக்கிறது? எந்த மதம் மனிதர்களை சமமாக நடத்துகிறது என்பது போல ஆக்கப்பூர்வமான விவாதங்கள் எனில் முஸ்லிம்கள் தயாராகவே இருக்கிறார்கள் எப்போதும்!//

    மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி அபூ ஆதில்!

  2. நேசகுமார் என்பவரிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருடைய வலைப்பூவின் பெயர் தெரியுமில்லையா?அவர் கூலிக்கு மாரடிக்கும் ஒரு தொழிலாளி. அதனால்தான் வளவளவென்று தன் மனம் போன போக்கில் எழுதுவார்.

    பிரச்சினை முஸ்லிம்களிடம்தான் இருக்கிறது. அதையும் ஒரு மனிதப் பிறவி என்று நினைத்துக் கொண்டு அது உளறுவதற்கெல்லாம் பதில் சொல்வதற்காகத் தம் பொன்னான நேரங்களை வலைப்பூவில் செலவழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    நான் கேட்கிறேன்: என் மனைவியை நான் விரும்பிய நேரத்தில் அனுபவிப்பதால் இதுகளுக்கு என்ன நட்டம் வந்தது? என்னமோ அதுகள் வீட்டுப் பெண்களைக் கற்பழித்து விட்டதுபோல் கதறுதுகள்!

    இதுகளுக்கெல்லாம் நீங்கள் இலாயக்கில்லை; போலி டோண்டுதான் இலாயக்கு.

  3. அட்றா சக்கை

    அய்யா அழகு

    //நான் கேட்கிறேன்: என் மனைவியை நான் விரும்பிய நேரத்தில் அனுபவிப்பதால் இதுகளுக்கு என்ன நட்டம் வந்தது? என்னமோ அதுகள் வீட்டுப் பெண்களைக் கற்பழித்து விட்டதுபோல் கதறுதுகள்!//

    நிச்சயமாக நீங்கள் தீவிரவாதி தான். இப்படித்தான் அவரும் அவருடைய சிங்கியடிகளும் சொல்லும்

  4. ஜாபர் அலி, நன்றி.

  5. கருத்துக்கு நன்றி அழகு அவர்களே!
    தனிமனித உணர்வுகளை கீழ்த்தரமாகத் தாக்கும் ஈனர்களை (……போலி…..களை) தள்ளி வைக்க வேண்டிய அவசியம் போலவே, கோடானுகோடி தமிழ் முஸ்லிம்களை குணநலனளவில் படுகொலை (Character Assasination) செய்து வருகிற நேசகுமார் போன்ற போலிகளும் தள்ளி வைத்து கண்டிக்கப்படவேண்டும் என்பது என் கோரிக்கை. மற்ற நியாய உணர்வு படைத்த வலைப்பூவர்களும் இதற்கு ஆதரவளிப்பார்கள் என்று கருதுகிறேன். குறிப்பாக போலிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் நியாயம் விளங்கும். (இப்போது கூட ‘காசி’ பெயரில் வந்த ஒரு பின்னூட்டம் மோசமாக இல்லாதிருந்தாலும் போலி என்று அறிந்த மாத்திரத்தில் தூக்கிவிட்டேன்.

    நேசகுமார் போன்ற கூலிக்கு மாரடிக்கும் போலிகள் என்னதான் தேர்ந்த இலக்கியவாதி போல எழுதினாலும் வாசகர்கள் அவ்வெழுத்தின் அடியில் ஓடும் ஈனத்தனமான மனநிலையை புரிந்துக்கொள்ளவேண்டும். இப்போது கூட இந்த போலியர் ஒரு பின்னூட்டத்தில் ‘இஸ்லாத்தின் ஒரு செங்கல்லை உருவினாலே போதும்’ என்று கொக்கரித்திருக்கிறார்.
    ‘அந்த மாளிகையின் செங்கல்லை நீ ஏனய்யா உருவ வேண்டும்?’ என்ற நியாயமான கேள்வியைக்கூட யாரும் பாபர் மஸ்ஜிதை இடித்த இந்த கும்பலிடம் யாரும் கேட்பதில்லை என்கிற தைரியத்தில்!

  6. அட்றா சக்கை

    //’நேசத்தை’ பெயரளவில் கொண்டுள்ளவர்கள் என்றால் முதலில் சலாஹுத்தீன்களும், அபூ முஹைகளும், அப்துல்லாஹ்களும் கேட்ட ஏராள எதிர்கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வரட்டும்.
    //

    எனக்குக் கேக்க மட்டும் தான் தெரியும் அப்டின்னு சொல்வார் அந்த நிஜமான போலி.

    அப்புறம் இப்போ அவருக்குக் கெடச்சிருக்குற இஸ்ரேலிய அடிமைகள் குழாமோடு கொஞ்சிக் கூத்தடிச்சுக்கிட்டு இருக்கார் இந்த போலி..

  7. கருத்துகளுக்கு நன்றி அட்றாசக்கை. பேருக்கு பொருத்தமாச் சொல்லிருக்கீங்க!

  8. அப்பாவி

    //பிரச்சினை முஸ்லிம்களிடம்தான் இருக்கிறது. அதையும் ஒரு மனிதப் பிறவி என்று நினைத்துக் கொண்டு அது உளறுவதற்கெல்லாம் பதில் சொல்வதற்காகத் தம் பொன்னான நேரங்களை வலைப்பூவில் செலவழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.//

    அதானே! இந்த ‘ஜாட்டான்’களுக்கெல்லாம் (வார்த்தை உபயம்: ‘கற்பு’ புகழ் டோண்டு) பதில் சொல்லனும்னு முசுலிம் வலைப்பதிவாளர்களுக்கு தலையெழுத்தா என்ன?

  9. //அதானே! இந்த ‘ஜாட்டான்’களுக்கெல்லாம் (வார்த்தை உபயம்: ‘கற்பு’ புகழ் டோண்டு) பதில் சொல்லனும்னு முசுலிம் வலைப்பதிவாளர்களுக்கு தலையெழுத்தா என்ன? //

    //எங்கெல்லாம் பெண்ணுரிமை இல்லாமலிருக்கிறது, எங்கெல்லாம் வன்முறை உள்ளது என்பதை தன் மனோஇச்சையின் படி தீர்மானிக்கிறவருக்கு பதிலளிக்கத் தோன்றவில்லை என்றாலும்//….உங்களைப்போன்ற அப்பாவிகளுக்காகத் தான் இந்த போலிகளின் கோர முகத்தை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது!

  10. நம்முடைய புதுக்கல்லூரியின் பழைய தோழர் பெரியவர் டோண்டு அவர்கள் போலியால் அடைந்த துன்பத்திற்கு சற்றும் குறைவானதல்லவே, இந்த நே.கு என்கிற போலியால் முஸ்லிம்கள் அடையும் மனவருத்தம். அந்த போலி ஒரு டோண்டுவைத்தான் குறி வைக்கிறான் என்றால் நே.கு என்கிற இந்த போலி ஒரு சமுதாயத்தையே அல்லவா மனம் புண்படுத்துகிறான். ‘லாஜிக்’ பேசும் டோண்டு போன்றவர்கள் குறைந்த பட்சம் நே.குவுக்கு ஆதரவாவது தராமலிருப்பார் என்று எதிர்பார்ப்போமாக!
    டோண்டு சார், அட்லீஸ்ட் வந்து பதிலாவது சொல்லிட்டுப்போங்க!

  11. இப்னு பஷீர்

    //ஒரு அழகிய சுமூகமான விவாதத்தில் ஈடுபட முஸ்லிம்கள் எப்போதும் எங்கேயும் தயாராகவே உள்ளனர்.
    ‘நேசத்தை’ பெயரளவில் கொண்டுள்ளவர்கள் என்றால் முதலில் சலாஹுத்தீன்களும், அபூ முஹைகளும், அப்துல்லாஹ்களும் கேட்ட ஏராள எதிர்கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வரட்டும்//

    மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் அபூ ஆதில். இந்த ஆசகுமார், நேரோக்கியம் போன்றவர்களின் நோக்கமெல்லாம் முடிந்தவரை இஸ்லாம் மீது புழுதி வாறி தூற்றுவதுதான். சுமூகமான, நேர்மையான விவாதம் என்பதெல்லாம் இவர்களுக்கு அன்னியமான வார்த்தைகள்.

  12. நாமக்கல் சிபி

    //அங்கே வந்தாலும் சரியாகப் புரிந்துக்கொள்கிற ‘நாமக்கல் சிபி’ போன்றோருக்காக சில வார்த்தைகள்:
    //

    சரியாகப் புரிந்துகொண்டேன் என்று நான் அப்பதிவில் குறிப்பிட்டது, அவருடைய பதிவின் (உண்மையான) நோக்கத்தை புரிந்து கொண்டேன் என்பதே ஆகும்.

    அதாவது நேசகுமார் அவர்கள் தனது பதிவின் தலைப்பில் பெண்ணுரிமைவாதிகளை அவர் சுட்டிக்காட்டிய பதிவு எச்சரிக்கிறது என்றார். ஆனால் அவரது விவாதமோ வேறு நோக்கத்தில் இருந்தது.

    இதைத்தான் நான் சரியாக புரிந்துகொண்டேன் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தேன்.
    எனவேதான் எனது விவாதம் அங்கு எடுபடாது என்று நன்றி கூறிவிட்டு விலகிவிட்டேன்.

  13. நன்றி இப்னு பஷீர்.

    நன்றி சிபி.
    நீங்கள் புரிந்துக்கொண்டதாகச் சொல்வதைத் தான் நானும் குறிப்பிட்டேன். ஓரிரு வருடங்களாக உள்ள வலைப்பதிவர்களுக்கெல்லாம் இவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது தான். ஒரு அவதூறைப் பரப்புவர், அதற்கு பதிலளித்தால் ‘நேர்மை’யுடன் கண்டுக்கொள்ளாமல் அடுத்த அவதூறுக்குத் தாவுவர். இது தான் நே.கு வகையறாவின் பாணி.

  14. இறை நேசன்

    //எனவேதான் எனது விவாதம் அங்கு எடுபடாது என்று நன்றி கூறிவிட்டு விலகிவிட்டேன். //

    சகோதரர் சிபி அவர்களே! இந்த ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் நேசகுமாரின் எந்த ஒரு பதிவையும் கண்டு கொள்வதில்லை.

    ஒரு நல்ல விஷயத்தைக் குறித்து ஒருவர் தவறான கருத்து கூறும் பொழுது,

    1. அதனை அவர் தவறாக விளங்கி இருக்கலாம்.

    2. அதனைக் குறித்து சரியான தகவல் அவர் பெறாமல் இருந்திருக்கலாம்.

    3. சரி என்பதைத் தெரிந்தே வேண்டுமென்று தவறான கருத்தைக் கூறலாம்.

    இதில் முதல் இரண்டு வகையில் உள்ளவருக்கு நாம் விளக்கிக் கொடுக்கவோ அல்லது சரியான தகவலை ஆதாரத்துடன் கொடுக்கவோ கடமைப் பட்டுள்ளோம். அதனை நாம் செய்தே ஆக வேண்டும்.

    இதில் மூன்றாம் வகையில் பட்டவரோடு நாம் விவாதிப்பதால் ஏதாவது பயன் உண்டா?

    இந்த வகையில் பட்டவர்களே, நேசகுமார், ஆரோக்கியம் போன்றவர்கள். இவர்களோடு விவாதிப்பது விழலுக்கிறைத்த நீர் போன்றது.

    இவர்களின் நோக்கம் ஏற்கெனவே இவர்களின் வாயாலேயே தெளிவாக அறிவிக்கப்பட்டு விட்டது. பின்னரும் இவர்களை நாம் கண்டு கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

    இஸ்லாத்தின் மீது அவதூறு பரப்பி அதனை களங்கப் படுத்த முயற்சிப்பது இவர்களின் வயிற்றுப் பிழைப்பு. அதில் நாம் ஏன் மண் அள்ளி போட வேண்டும். இஸ்லாம் தன்னை விரும்பாதவர்களின் குடும்பத்தினருக்கும் சவுகரியமாக வாழ வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது என சந்தோஷப்பட்டுக் கொண்டு போக வேண்டியது தான்.

    அன்புடன்
    இறை நேசன்.

  15. சாணான்

    “>>என்னமோ அதுகள் வீட்டுப் பெண்களைக் கற்பழித்து விட்டதுபோல் கதறுதுகள்!<<" அதுகள் வீட்டுப் பெண்கள் விரும்பி வந்தால் தப்பில்லை என்றும், அவ்வாறு வரும் பொழுது கர்ப்பமாகாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும், யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு முடியவில்லை எனில் fire வழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவாள்கள் பெண்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்களாமே! இதனைக் குறித்து உங்கள் இஸ்லாம் என்ன கூறுகிறது என்று கூற முடியுமா? அப்படியே இதனைக் குறித்து நேசகுமாரும், ஆரோக்கியமும் கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

  16. சல்மான்

    நண்பர்களே,

    பதிவாளர் வைத்திருக்கும் மையக்கருத்துனுடைய வீரியத்திற்கு வலு சேர்ப்பது சிறக்கும். அதை விடுத்து டோண்டு, போலி டோண்டு, இஸ்ரேலிய கூட்டங்கள் என ‘காலர் பிடிக்கும்’ முறை, பதிவை நீர்க்க செய்ய வாய்ப்பளிக்கும். ‘இஸ்லாமிய குப்பைகள் கிடைத்தால் என்கிருந்தாலும் அள்ளப்படும்’ என்ற பலகையின் கீழ் முழுநேர மோசம் செய்து வரும் ‘நேசத்தின்’ போர்வையில் ஒளிந்திருப்பவரோடு, கணிசமான நேரங்களில் நல்ல கருத்துகளையும் எடுத்து வைக்கும் டோண்டு போன்றவரை ஒப்பிடுவதில் உடன்பாடில்லை.

    ‘நேசம்’ புகழ் மோசம் பல வேளைகளிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுவதாக ‘தமாஷ்’ பண்ணுவார். முஸ்லிம்கள் மேல் அவ்வளவு அக்கறை உள்ளவர், இந்த சமூகத்தில் பல தளங்களில் மிதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுடைய உண்ர்வுகளுக்கு வலு சேர்க்கும் விதமாகவோ, ‘விழிப்புணர்வு’ ஏற்படுத்தும் விதமாகவோ, துரும்பேணும் அள்ளி போட்டிருக்கிறாரா? உண்மையில் அதற்கு எதிர்ப்பு பறக்கும் இடங்களில், ‘மோசங்களின்’, ‘ரவி சீனிவாஸங்களின்’ அழுகுரல் வாக்குமூலம்தானே, இவர்களின் மூல விலாசங்களை புட்டு வைக்கிறது.

    // ஒரு முஸ்லிமுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் தாய் தந்தையரை விட அதிக நேசத்துக்குரியவர்கள். அப்படியே ஒவ்வொரு மதத்தாருக்கும் இனத்தாருக்கும் யாரேனும் நேசத்துக்குரியவர்களாக இருக்கலாம். மறுப்பதற்கில்லை. எனவே, நாம் தமிழ் வலைப்பூ திரட்டி மேலாளர்களை கேட்டுக்கொள்வதெல்லாம், தாய் தந்தையர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் சம்பந்தப்படுத்தி மோசமாக எழுதுபவர்களின் பட்டியலில் இந்த மத துவேஷ காழ்ப்புணர்வாளர்களையும் வைக்க வேண்டும் என்பதைத் தான்.

    //

    ஒவ்வொரு பதிப்பிலும், தனிநபர் தாக்குதல் என்று இங்கு கண்டிக்கப்படும் விமர்சனங்களை விட மிக மோசமாக, தூதுவரை இகழ்ந்து, அவதூருகளையும், ஆபாசங்களையும் அள்ளி நிறைத்து குட்டிக்கரணம் போடும் இவர், அதேவேளையில், இவருடைய ‘நம்பகத்தன்மையையும்’ ‘போலி கருத்துகளையும்’ உணர்ந்து இவரை பொருட்டாக மதிக்காமல், ‘வம்புகள்’ வேண்டாமென்று விலகும் சகோதர்களை பார்த்து மருண்டு, ‘முகமது என்றாலே புனிதம், பேசக்கூடாது என்று சண்டைக்கு வருகிறார்கள்’ என, எல்லாம் செய்த பின்னும், உச்சஸ்தாயில் அலறி, எப்பாடுபட்டேனும் சகதிக்கு இழுக்க நினைக்கும் இந்த வாண்டுத்தனமான விஷமங்கள் கொள்ளை காமெடியை மிஞ்சும்.

    // சரியாகப் புரிந்துகொண்டேன் என்று நான் அப்பதிவில் குறிப்பிட்டது, அவருடைய பதிவின் (உண்மையான) நோக்கத்தை புரிந்து கொண்டேன் என்பதே ஆகும் //

    நண்பர் சிபியின் இந்த கூற்றைக்கூட கண நேரத்தில் அதே பதிவில் வில்லங்கமாக திசைதிருப்பும் இந்த ‘நம்பகமானவர்’ ‘முஸ்லிம் விழிப்படைவதில் அக்கரையுடையவர்’ பன்னூறு ஆண்டுகள் முந்திய இறைத்தூதுவரின் வாழ்க்கையை விமர்சிக்கும் விதத்தில் எந்த விதமான ‘நம்பகத்தன்மையை’ பெறுவார் என்பதை வாசிப்பவர்களிடமே விட்டு விடுகிறேன்.

    அதே நேரத்தில், நண்பர் இறைநேசன் சொல்லியது போல ‘மோச’குமாரர்களின் நெடுஞ்சாலை சினிமா போஸ்டர் பிரச்சாரத்தை கவனிப்பதில் நேரம் விரயம் செய்யாதீர்கள் என்பதை ஆமோதிக்கிறேன்.

    நட்புடன்,
    சல்மான்.

  17. \\நிச்சயமாக நீங்கள் தீவிரவாதி தான். இப்படித்தான் அவரும் அவருடைய சிங்கியடிகளும் சொல்லும்\\

    எதுவும் எதையும் சொல்லி விட்டுப் போகட்டும். நான் தீவிரவாதியாக இருப்பதையே விரும்புகிறேன் – கொண்ட கொள்கையில்.

  18. அப்துல் குத்தூஸ்

    சகோதரர் நாமக்கல் சிபி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பெண்கள் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனத்தை குரோத மனத்துடன் குதர்க்கமான விளக்கத்தை பரப்ப முயன்ற நேசகுமாருக்கு, உங்களின் தெளிவான விளக்கம் என்னை கலங்கடித்துவிட்டது. குர்ஆனின் வசனங்களை நீங்கள் புரிந்துக் கொள்ளும் முறை என்னை சிலிர்க்க வைத்துவிட்டது. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் தரத்திற்கு உங்களின் விளக்கம் இருந்ததைக் கண்டு பெருமிதம் கொள்கின்றேன். எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்விற்கே. மீண்டும் நன்றி சிபி அவர்களே!

    ஆம் நேசகுமாரை அனைவரும் தூக்கி எறியும் காலம் வந்துவிட்டது. சகோதரர்களே! நேசகுமாரை இந்த தமிழ்மணத்திலிருந்து தூக்கி எறியும் வரை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் நமது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்ஷா அல்லா… அல்லாஹ் போதுமானவன்.

  19. கருத்துக்கு நன்றி ராஜா, இறைநேசன், சாணான், சல்மான் மற்றும் மறு வருகை தந்த அழகு அவர்களுக்கும்!

  20. சல்மான் உங்கள் பின்னூட்டம் சிறப்பாக உள்ளது.

    அப்துல் குத்தூஸ் தங்கள் வருகைக்கும் நன்றி.

    நேசகுமார் என்றில்லாமல் மதத் துவேஷத்தை பிழைப்பாக கொண்டுள்ளவர் முஸ்லிமாகவே இருந்தாலும் நாம் (சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும்) எதிர்க்க வேண்டும்.

  21. நாமக்கல் சிபி

    சகோதரர் அப்துல் குத்தூஸ் அவர்களுக்கு நன்றி! முக்கியமாக சகோதர் என்று கூறியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    //இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் தரத்திற்கு உங்களின் விளக்கம் இருந்ததைக் கண்டு பெருமிதம் கொள்கின்றேன்.//

    எல்லாம் என் இஸ்லாமிய நண்பர்களோடு பழகி, பேசி கேட்டறிந்த அனுபவங்கள்தான். மற்றபடி நீங்கள் கூறியபடி பெரிய அளவில் எனக்கு இஸ்லாம் பற்றிய அறிவு இல்லை என்றுதான் நினைக்கிறேன். மேலும் குரான் முழுக்கவும் இன்னும் படித்ததில்லை.

    அவ்விளக்கங்களை நான் கொடுத்த பின்பும் என் நண்பனிடம் இதுபற்றி ஆலோசித்தேன்(நான் கூறிருப்பதில் ஏதேனும் பிழையிருக்கிறதா என்று). அவர்களும் குரானில் கூறப்பட்டுள்ள பல விஷயங்களுக்கு நேரடியாகப் பொருள் புரியாவிட்டாலும், இதுபொன்ற விஷமிகள் விதண்டவாதம் செய்தவண்ணம்தான் இருக்கிறார்கள் என்றும் இவற்றிற்கு பொருள் வேண்டுமெனில் அவற்றை விளக்கி கூறவே இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் உள்ளனர் என்றும் கூறினர்.

  22. சக்கிலியன்

    சகோதரர் நா.சிபி அவர்களே!

    தவறாக நினைக்க வேண்டாம். ஒருமுறை நானும் அவ்வாறு அழைத்துப் பார்த்தேன். நம்மைத் தான் யாரும் அவ்வாறு அழைப்பதில்லை. நாமாவது அழைக்கலாமே என்று தான்.

    நண்பரே இதெல்லாம் ஒருவகை ஸ்டண்டு தான். இதிலேயே கவனியுங்களேன், இவர்கள் சகோதரர் என்று அழைப்பதெல்லாம் அவர்களுடன் தரத்தில் மேலானவர்களையோ அல்லது தங்களுக்கு ஈக்குவல் ஆனவர்களையோ தான்.

    எங்காவது எங்களைப் போன்ற சக்கிலியரையோ, அர்ஜனையோ அவ்வாறு அழைத்திருப்பதை கவனித்துள்ளீர்களா?

    ஒரு விதத்தில் நண்பர் நேசகுமார் கூறுவதெல்லாம் சரியென்றே படுகிறது.

    இவர்கள் தங்களுக்கு யாராவது எதிராக வந்தால் அவரை மட்டம் தட்ட அதற்குண்டான கூட்டத்தினைச் சேர்க்க இவ்வாறு “சகோதர” பாசம் காட்டுவார்கள். இவர்கள் பக்கம் பெரும்பான்மை கிடைத்து விட்டால் பின்னர் சிபியைப் போன்றவர்களுக்கு நாமம் தான்.

  23. நாமக்கல் சிபி

    //ஒருமுறை நானும் அவ்வாறு அழைத்துப் பார்த்தேன். நம்மைத் தான் யாரும் அவ்வாறு அழைப்பதில்லை.//

    ஏன் அப்படி நினைக்கிறீர்கள். நான் அழைக்கிறேன் உங்களை! நீங்களும் என்னை சகோதரன் என்று கூறினால் மகிழ்வேன்.

    இவ்விவாதத்திற்கு இப்பதிவு உகந்த இடம்தானா சகோதரரே!

    ஒன்று மட்டும் மனசாட்சிப்படி எண்ணிப் பாருங்கள்.

    இஸ்லாமியர்களின் தர்காவில்/மஜ்ஜித்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாது அனைவரும் ஒன்று கூடி சமமாய்த் தொழுகின்றனரே! அதை கவனித்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன் சகோதரரே!

    ஏனோ நான் பார்க்குமிடங்களிலெல்லாம் எனக்கு நல்ல விஷயங்கள் கிடைக்கின்றன.
    பிறருக்கு எப்படியோ?

  24. நாமக்கல் சிபி

    //இவர்கள் சகோதரர் என்று அழைப்பதெல்லாம் அவர்களுடன் தரத்தில் மேலானவர்களையோ அல்லது தங்களுக்கு ஈக்குவல் ஆனவர்களையோ தான்//

    நீங்கள் தரம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்? சாதி/பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையா?

    அல்லது மனிதநேயம், உண்மை, நேர்மை, பிற உயிர்/மனம் துன்புறுதல் ஆகாது என்று எண்ணுதல் போன்ற குணநலன்களையா?

  25. அபூ ஷைமா

    அருமையான அலசல் சகோ அபூஆதில் அவர்களே!

    இந்த மாதிரி இஸ்லாத்தின் மீது அவதூறு பரப்புவோரின் நுண்ணரசியலை அருமையாகத் தோலுரித்துக் காட்டி உள்ளீர்கள்.

    சகோதரர் சக்கிலியன் அவர்களே!

    நீங்கள் யாராக இருந்தாலும், மனிதர்கள் அனைவரும் ஒரு பெற்றோரிடம் இருந்து தோன்றியவர்கள் என்ற சம உரிமையை இஸ்லாம் எமக்குக் கற்றுத் தந்துள்ளதால் உங்களை மனப் பூர்வமாக சகோதரன் என அழைப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

    நன்றி

  26. மரிய குமாரன்

    தாங்க முடியலே. எல்லாம் எல்லை மீறி போயிடுச்சு. நானும் பொறுத்து பாத்துட்டேன். ஒக்கா மக்கா இந்த ஆரோக்கியம் திருந்த மாட்டங்கிறான். ஆரோக்கியம்னா கிறிஸ்தவ பெயர். ஆனா இவன் எழுதுவது எல்லாம் இந்து மதத்துக்கு ஆதரவாதான். இதுலேர்ந்து அந்த அயோக்கிய ராஸ்கலின் பித்தலாட்டம் என்னவென்று புரியுது.

    முசுலிம்ஸை திட்டினால் அதற்கு பதிலடி கொடுக்கும் முசுலிம்கள், அவன் பெயரை வைத்து கிறிஸ்தவத்தை திட்டனுங்கிறது தான் அவன் திட்டம். அட சண்டாளா! எப்படிடா உங்க மூளை இப்படியெல்லாம் வேலை செய்யுது?

  27. சகோதரர்கள் சக்கிலியன், (மறு வருகை)நா.சிபி, அபூ ஷைமா, மரிய குமாரன் அனைவருக்கும் நன்றி.

    சகோ.சக்கிலியன் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது: நீங்களும், நானும் நம்மைப்போன்றவர்களும் ஒரே ஆதி தாய் தந்தையின் மக்களே. அப்படித் தான் இஸ்லாம் சொல்லித்தருகிறது. எனவே, உங்களை பிறப்பின் காரணமாக யாரும் இழிவு செய்தால் அந்த ஈனர்களுக்கெதிராகப் போராடவும் இஸ்லாம் சொல்லித்தருகிறது. இன்று நேற்றென்றில்லாமல் இஸ்லாம் கண்மூடி எதிர்க்கப்படுவதன் அரசியல் இதில் இருக்கிறது. இந்தப் பதிவிலும் ஒரு ஆச்சர்யக் கேள்வி வைத்திருக்கிறேன்:”இஸ்லாம் பற்றிய விளக்கங்களை காதில் வாங்கிக்கொள்ள்( விரும்பா)மல் குற்றம் சுமத்திக் களிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளவர்களில் பெரும்பாலோர் பிராமணர்களாகவே இருப்பது ஏன்? – என்ன காரணம்? – ஒரு ரவியையோ, ஸ்ரீனிவாசனையோ வைத்து இதை நாம் சொல்லவில்லை என்றாலும் கூட! (சில ‘நேசர்’கள் விதி விலக்குத் தான்). கவனிக்கவும் பெரும்பாலோர் என்று தான் குறிப்பிட்டுள்ளேன், அனைவரையும் இல்லை.”

    //ஏனோ நான் பார்க்குமிடங்களிலெல்லாம் எனக்கு நல்ல விஷயங்கள் கிடைக்கின்றன.
    பிறருக்கு எப்படியோ?//

    நன்றி சகோ. சிபி, பார்வையில் தான் கோளாறு என்பதை எத்தனை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

  28. அப்துல் குத்தூஸ்

    சகோதரர் சிபி அவர்களே, மேற்கூறிய என்னுடைய கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டது அல்ல. என் உள்ளத்தில் எழுந்ததைத்தான் நான் கூறினேன். நேசக்குமாரின் புரட்டைக் கண்டு மனம் நொந்தபோது, உங்களின் இப்படிப்பட்ட பதில் இயல்பாக அனைவருக்கும் ஏற்படுத்தும் ஒரு பெருமிதத்தைத்தான் எனக்கும் உண்டு பண்ணியது.

    <<< நாமக்கல் சிபி said...
    அவ்விளக்கங்களை நான் கொடுத்த பின்பும் என் நண்பனிடம் இதுபற்றி ஆலோசித்தேன் >>>

    குர்ஆனின் சில வசனங்களின் விளக்கங்கள் நம் அறிவுக்கு விளங்குவதற்கு சிரமமாக இருக்கும். இதற்குத்தான் நாம் மார்க்க அறிஞர்களை நாடி அவர்களிடம் தெளிவைப் பெறுவோம். ஆனாலும் சில மார்க்க அறிஞர்கள் உங்கள் அளவிற்கு கூட தெளிவாக விளக்குவது இல்லை. இதையெல்லாம் அனுபவப் பூர்வமாக உணர்ந்ததால்தான் அப்படி உங்களைப்பற்றி சிலாகித்துக் கூறினேன். வேண்டுமென்றால் உங்களின் அந்தக் கருத்தை ஒரு அறிஞரிடம் காட்டுங்கள், நிச்சயமாக அவர் உங்களின் திறமையைப் பாராட்டுவார்.

    சகோதரர் சக்கிலியனுக்கு கூறுவதற்கு ஒன்றும் இல்லை. போலிகள் நிறைந்த உலகம் இது. இவர் யாருடைய போலி எனக் கூறவும் வேண்டுமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *