Featured Posts

அபூ உமர்

25]

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 25 பல லட்சக்கணக்கான வீரர்கள், தாங்கள் கிறிஸ்துவத்துக்காகப் போரிடுகிறோம் என்பதற்கு ஓர் அடையாளமாகக் கையில் சிலுவை ஏந்திப் போரில் பங்குபெற்றதால் அதைச் சிலுவைப்போர் என்று சரித்திரம் குறிப்பிடுகிறது. சிலுவை ஏந்தியபிறகு ரத்தம் சிந்தாமல் எப்படி முடியும்? உண்மையில், முதல்முதலில் சிலுவைப்போரில் பங்குகொண்ட கிறிஸ்துவர்களுக்கு அரசியல் காரணங்கள் எதுவும் அத்தனை முதன்மையாகத் தோன்றவில்லை. போப்பாண்டவர் அர்பன் 2வுக்கும் பல்வேறு கிறிஸ்துவ தேசத்தின் ஆட்சியாளர்களுக்கும் இப்போரின் …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 4

“நபிகள் நாயகம்தான் கல்கி அவதாரம்!”(?) (“மக்களுக்கு வழிகாட்ட இறைவனே மனித வடிவில் பிறக்கிறான்” எனும் அவதாரக் கொள்கையை இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறான் என்பதே இஸ்லாம் கூறும் தூதுத்துவம். இறுதித்தூதர் வர இருக்கிறார் எனும் முன்னறிவிப்பு எல்லா வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்து வேதத்திலும் “கல்கி” பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த “கல்கி” வந்துவிட்டார், அவர்தாம் முஹம்மது நபி(ஸல்) என்று இந்துமத அறிஞர் …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 3

அறிஞர்கள் போற்றும் பெருமானார் முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.– ஜவஹர்லால் நேரு – துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு …

Read More »

மேல்மாடி மின்னல்கள்

கங்காவின் “தினம் ஒரு ஸென் கதை” விஷயங்கள் மேல்மாடி Capacity பிரச்சினையால் மண்டையில் ஏறுவதில்லை. ஆனால் “ஆமைகளின் சுற்றுலா” என்ற தலைப்பு ஈர்த்ததால் சொடுக்கி பார்த்தபோது மேல்மாடியில் பல மின்னல்கள் எழுந்தன. கங்கா தனது பதிவில் இட்ட அக்கதை இதுதான்: ஆமைகளின் சுற்றுலா ஒரு ஆமைக் குடும்பமானது சுற்றுலா செல்ல முடிவெடுத்தது. குடும்பத்தில் இருந்த எல்லா ஆமைகளும் சுற்றுலாவுக்கு வருவதற்கு சம்மதிக்க ஏழு வருடங்கள் பிடித்தன. இயல்பிலேயே மிகவும் மந்தமாக …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 2

அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா தமிழகத்தில் இஸ்லாம்பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் …

Read More »

மதியழகி (நீதிகதை)

2005 ஜனவரி மாதம், வார இறுதி விடுமுறை நாளில் அது நடந்தது. பொது பேருந்து வசதி இல்லாத அந்த ஊரிலிருந்து நான் வசிக்கும் நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் ஒருவர் தன் மனைவியை நான் வந்த காரில் (illegal taxi) ஏற்றிவிட்டார். நகரத்தில் நர்ஸாக பணிபுரியக்கூடும்.

Read More »

"கோலங்கள்" காட்டாதீர்கள் குழந்தைகளிடம்

உடை உடுத்துவது தொலைக் காட்சிக்கு முன் – தலை வாருவது தொலைக் காட்சிக்கு முன் – சாப்பிடுவது தொலைக் காட்சிக்கு முன் – விளையாடுவது தொலைக் காட்சிக்கு முன் – படிப்பது தொலைக் காட்சிக்கு முன் http://chudar.blogspot.com/2005/03/blog-post_20.html ஒரு காலத்தில் தெருக்களில் குழந்தைகளின் விளையாட்டு சப்தம் இருக்கும். அதுவே அவர்களுக்கு உடற்பயிற்சியாக – கிட்டுப்பிள்ளை, சில்லுக்கோடு, ஓடிப்பிடிச்சி, கபாடி மற்றும் பம்பரம் என சீசனுக்கு தகுந்தார்போல் மாறுவதுண்டு. கடைசியாக பம்பரம் …

Read More »

த்சு..த்சு.. பாவம் மோனிகா!

“காதல் பரிசாக கிளின்டன் கொடுத்த 20 மில்லியன் டாலரை ஹிலாரி கிளின்டன் அபகரிக்க பார்க்கிறார். எனவே சிறிது நாட்களுக்கு உங்களிடம் அதனை அனுப்பி பாதுகாக்கலாம் என்றிருக்கிறேன். பாதுகாத்து தந்ததற்காக பாதி தொகை உங்களுக்கு தரப்படும்” என்று யாராவது மோனிகா லெவின்ஸ்கியின் பெயரில் மின்னஞ்சல் அனுப்பினால் யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள். காரணம், மின்னஞ்லை திறந்தால் இதுபோன்ற செய்திகளும், வைரஸ் அட்டாச்மென்ட்டுகளும், வயாகரா அழைப்புகளும்தானே வருகிறது.இதுபோல் மின்னஞ்சல்களை அடிக்கடி பெற்றுக்கொள்கிறவர்களுக்கு ஆயிரத்துடன் ஒன்று …

Read More »

24] சிலுவைப்போர் தொடக்கம்

முகம்மது நபியின் வழித்தோன்றல்களான முதல் தலைமுறை கலீஃபாக்கள் எத்தனைக்கு எத்தனை மத மோதல்கள் உண்டாகிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்களோ, அதே அளவு தீவிரத்துடன் மோதலில் காதல் கொண்ட சுல்தான்களும் பின்னாளில் தோன்ற ஆரம்பித்தார்கள். கி.பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அரேபியப் பாலைவனங்களில் சூடு அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது. ஒரு புறம் திம்மிகள் என்று வருணிக்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான கட்டுப்பாடுகள் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்க, மறுபுறம் ஆட்சியாளர்களின் திறமையின்மை காரணமாக …

Read More »

23] பாலஸ்தீன் நிலப்பரப்பின் பொற்காலம்

பொதுவாக, இந்தப் பொற்காலம் என்கிற பதத்துக்குச் சரியான வரையறை ஏதும் கிடையாது. மழை பொழிந்தால் பொற்காலம். நிலம் விளைந்தால் பொற்காலம். வரிச்சுமை குறைவாக இருந்தால் பொற்காலம். மன்னன் கொடுங்கோலனாக இல்லாமல் இருந்தால் பொற்காலம். கலை வளர்ந்தால் பொற்காலம் என்று மிகவும் மேலோட்டமான காரணங்களையே பொற்காலத்துக்கு நமது சரித்திர நூல்கள் இதுவரை தந்துவந்திருக்கின்றன. உண்மையில், மாபெரும் இனப்போர்கள் மூள்வது வலுக்கட்டாயமாகத் தவிர்க்கப்படுமானால், அந்தக் காலகட்டத்தைத்தான் பொற்காலம் என்று சரியான சரித்திர வல்லுநர்கள் …

Read More »