சவுதி அரேபியாவின் மன்னர் ஃபஹத் இப்னு அப்துல் அஜீஸ் அல்-சவூத் காலாமனார். மன்னர் ஃபஹத் நோயுற்று இருந்ததால் இளவரசர் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஜீஸ் அல்-சவூத் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Read More »அபூ உமர்
அழகிகளின் பேஜார் ஷோ
சமீப காலமாக, சென்னை நகரில் “ஃபேஷன் ஷோ” என்ற பெயரில் அழகிகளின் ஆபாச நடனம் அரங்கேறி வருகிறது. புத்தம்புதிய நகைகளை டிசைன் செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் ஜுவல்லரி முதல், உள்ளாடைத் தயாரிப்பாளர்கள் வரை இத்தகைய ஃபேஷன் ஷோக்களை நடத்துவது வாடிக்கையாகி விட்டது. சென்ற வாரம் சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் மூன்று நாட்களாக நடந்த ஃபேஷன் ஷோவை நேரிலும், மீடியாக்கள் மூலமும் பார்த்தவர்கள், அதிர்ச்சியில் வாயடைத்துப் போனதென்னவோ நிஜம். …
Read More »72] அரேபியர்களின் அந்த மௌன ஓலம்
நிலமெல்லாம் ரத்தம் – பா ராகவன் 72 எகிப்து மற்றும் சிரியாவின் படைகளுடன் ஒப்பிட்டால் அன்றைய காலகட்டத்தில் ஜோர்டனின் படை சற்றே வலுவானது என்றுதான் சொல்லவேண்டும். ஜோர்டனுக்கு நிறைய மேலை நாடுகளுடன் நட்பு இருந்தது. அதன்மூலம் நவீன ஆயுதங்கள் பலவற்றை வாங்கிக் குவித்திருந்தார்கள். அத்துடன், அப்படி வாங்கும் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சியும் முறைப்படி ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவைப் பிடிக்காத அத்தனை தேசங்களுடனும் அன்றைக்கு ஜோர்டன் நட்புக் கொண்டிருந்தது. ஆகவே, ஒரு …
Read More »71] சினாயும் காஸாவும் இஸ்ரேல் வசம்
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 71இஸ்ரேலும் ஒரு முடிவில்தான் இருந்தது. சிரியாவுடனான தண்ணீர்ப் பிரச்னை, எகிப்துடனான கப்பல் போக்குவரத்துப் பிரச்னை, ஜோர்டனுடனான மேற்குக்கரைப் பிரச்னை உள்ளிட்ட தன்னுடைய சொந்தப் பிரச்னைகளுக்கு அமெரிக்காவோ, ஐ.நா.சபையோ ஒரு தீர்வு கொண்டுவராவிட்டால், தனக்குத் தெரிந்த முறையில் தானே நடவடிக்கையில் இறங்கிவிடலாம் என்பதுதான் அது! அந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி மோஷே தயான் (Moshe Dayan) என்கிற மூத்த ராணுவ அதிகாரி …
Read More »சிறுபான்மையினருக்கு எதிராக
இந்தியாவில் செயல்படும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் 30,000 அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுகின்றன. இதில் 16,000 அமைப்புக்கள் ஆண்டிற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை பெறுகின்றன. இவை மத்திய அரசிற்கு வரவு_செலவைச் சமர்ப்பிக்கின்றன. இன்னும் 14,000 நிறுவனங்களும் இன்னும் ஓர் ஐந்தாயிரம் கோடி அளவிற்கு நிதியுதவி பெறுகின்றன. ஆனால் எந்தக் கணக்கையும் கொடுப்பதில்லை. யானைக்கு அல்வா, பூனைக்கு பூந்தி வாங்கினோம் என்றுகூட எழுதிக் கொடுப்பதில்லை. இத்தகைய நிறுவனங்களை வரைமுறைப்படுத்தப் போவதாக மத்திய …
Read More »Imrana on video – no rape
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா இம்ரானா? அவரிடமே கேட்டுவிடலாமே.http://www.milligazette.com/dailyupdate/2005/20050724b.htm வீடியோ கோப்பை உங்கள் கணினியில் சேமிக்க, வலது சொடுக்கி Save target as என கொடுக்கவும் [in Internet Explorer]. http://www.milligazette.com/dailyupdate/2005/imrana-no-rape-video.wmv
Read More »70] ஆறு நாள் யுத்தத்தின் பின்னணியில்
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 70 1964-ல் தொடங்கப்பட்ட பி.எல்.ஓ.வுக்கு 69-ல்தான் யாசர் அராஃபத் தலைவராக வருகிறார். இடைப்பட்ட காலத்தில் ஒரு மிக முக்கியமான பிரச்னையை அரபு உலகம் சந்திக்க வேண்டியிருந்தது. அதனை முதலில் பார்த்துவிட்டு யாசர் அராஃபத்திடம் போவதுதான் சரியாக இருக்கும். ஆறு நாள் யுத்தம் (Six day war) என்று சரித்திரம் வருணிக்கும் இந்தப் போர், 1967-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, சிரியா, …
Read More »69] பாலஸ்தீன் விடுதலை இயக்கம்
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 69 பாலஸ்தீன் விடுதலைக்காக யாசர் அராஃபத் ஆரம்பித்த போராட்டங்களுக்குள் நுழைவதற்கு முன்னால் பி.எல்.ஓ.வைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது. ஏனெனில், சூயஸ் கால்வாய் விவகாரத்தை பி.எல்.ஓ. மிகவும் நுணுக்கமாக கவனித்து ஆராய்ந்ததற்குப் பிறகுதான் பாலஸ்தீனுக்கான போராட்டம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வடிவம் பெறத் தொடங்கியது. பி.எல்.ஓ. வடிவமைத்த அந்தப் போராட்டப் பாதையைத்தான் யாசர் அராஃபத் வேண்டிய அளவுக்குத் திருத்தி அமைத்து, போராட்டத்தைத் துரிதப்படுத்தினார். …
Read More »இம்ரானா – ஊடகங்களின் பலாத்காரம்
போனமாதம் நடந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஊடகங்களால் கை, கால் வைத்து ஊதி பெரிதாக்கப்பட்டதால் சினிமா படமாகப்போகும் நிலைக்கு தற்போது வந்து நிற்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் முஜாபர்பூர் நகர் அருகில் உள்ள சர்தவால் கிராமத்தைச் சேர்ந்த நூர் இலாஹியின் மனைவி இம்ரானா (வயது 28) கடந்த ஜுன் மாதம் (2005) அவரது சொந்த மாமனார் அலி முஹம்மது என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதே வழக்கு. தனது கணவர் ஊரில் …
Read More »68] என்ன அழகான திட்டம்!
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 68 அமெரிக்க டாலரை ‘ரிசர்வ் கரன்ஸி’ என்பார்கள். மதிப்பு மிக்க நாணயம். எண்ணெய், தங்கம் போன்ற விலை மதிப்பு மிக்க பொருள்களின் வர்த்தகம், சர்வதேச அளவில் டாலரில்தான் நடக்கும். மற்ற தேசங்களின் கரன்ஸி எத்தனை மதிப்பு மிக்கது என்பதை அமெரிக்க டாலருடன் ஒப்பிட்டுத்தான் சொல்வது வழக்கம். அதாவது, ‘அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு’ என்று சொல்லப்படுவதைக் கேட்டிருப்பீர்கள் அல்லவா? அதுதான். …
Read More »