-மவ்லவி M. பஷீர் ஃபிர்தவ்ஸி- இஸ்லாம், கல்விக்கும் ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கக்கூடிய மார்க்கம். கல்வியாளர்களைத்தான் அல்லாஹ் அவனது மார்க்கத்தைப் பாதுகாக்கவும் அதனை பரப்புவதற்கும் தேர்ந்தெடுத்துள்ளான். அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.. மாறாக! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது – அநியாயக்காரர்கள் …
Read More »பொதுவானவை
நல்லவற்றை தர்மம் செய்வதில் நபியவர்கள் மிக வேகமானவர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 041]
நல்லவற்றை தர்மம் செய்வதில் நபியவர்கள் மிக வேகமானவர்கள்! இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமழான் மாதத்தில் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனென்றால், (வானவர்) ஜிப்ரீல் ரமழானின் ஒவ்வோர் இரவும் – ரமழான் முடியும் வரை – நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் …
Read More »வஹியை மட்டும் பின்பற்றிய நபித்தோழர்கள்
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இஃப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 07-06-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: வஹியை மட்டும் பின்பற்றிய நபித்தோழர்கள் வழங்குபவர்: அஷ்-ஷைக். அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »அநீதியிழைத்தவனின் நோன்பின் கூலி அநீதியிழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படமாட்டாது! [உங்கள் சிந்தனைக்கு… – 040]
அநீதியிழைத்தவனின் நோன்பின் கூலி அநீதியிழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படமாட்டாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!’ என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்யவும் …
Read More »மிக நேரானதின் பக்கம் வழிகாட்டும் அல்குர்ஆனோடு மிக நெருக்கமான உறவைப் பேணுவோம்! [உங்கள் சிந்தனைக்கு… – 039]
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “ரசூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த (இறைவேதம்) அல்குர்ஆனை வர்ணித்து அல்லாஹ் கூறும்போது, ‘நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரானதின் பக்கமே வழிகாட்டுகிறது!’ (17:09) என்று கூறுகிறான். ‘நேரானதின் பக்கமே இது வழிகாட்டுகிறது!’ என்ற இவ்வார்த்தையின் விளக்கத்தை பல பாகங்கள் கொண்ட நூல்களில் எழுதித் தொகுக்கப்பட்டாலும் அது தெரிவிக்க வரும் கருத்துக்களை அவற்றிற்குள் உள்ளடக்க முடியாது!. இஸ்லாமியக் கொள்கைசார் விடயங்கள், …
Read More »அல்லாஹ்வின் புறத்திலிருந்து அமைதி இறங்க வேண்டுமா? அல்குர்ஆனை ஓதுங்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 038]
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “அவசரப்படாமல் அமைதியாகவும் ஆராய்ந்துணர்ந்தும் அல்குர்ஆனை மனிதன் ஓதுகின்ற போது (அல்லாஹ்விடமிருந்து) அமைதி இறங்குகிறது! ஓதுபவரின் உள்ளத்தைச் சென்றடையும் வரைக்கும் அந்த அமைதி இறங்கிக்கொண்டிருக்கிறது. அவரின் உள்ளத்தில் அல்லாஹ்தான் அந்த அமைதியை இறக்கி வைக்கின்றான்.” { நூல்: ‘ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்’, 04/651 } قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:- [ السكينة تنزل …
Read More »அறிஞர்கள் நேசத்திற்குரியவர்கள்; ஆனாலும், சத்தியம் அதிக நேசத்திற்குரியது! [உங்கள் சிந்தனைக்கு… – 037]
அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “(பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தும் நன்நோக்கில்) சில அறிஞர்களுக்கும், கண்ணியவான்கள் சிலருக்கும் நாம் மறுப்புக் கொடுக்கின்றோம் என்றால் அவர்களை நாம் கோபிக்கின்றோம் என்பதோ, அல்லது அவர்களை நாம் குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதோ அதனுடைய பொருளல்ல. நாம் தெளிவுபடுத்துவதெல்லாம் சரியான விடயத்தைத்தான்! இதனால்தான் சில அறிஞர்கள் தமது சக அறிஞர்களில் சிலர் தவறிழைக்கும்போது, ‘இன்னார் எமது நேசத்திற்குரியவர்; ஆனால், சத்தியம் எமக்கு அதைவிட அதிக …
Read More »நோன்பில் பொதிந்திருக்கும் மூன்று வகைப் பொறுமைகள்! [உங்கள் சிந்தனைக்கு… – 036]
நோன்பில் பொதிந்திருக்கும் மூன்று வகைப் பொறுமைகள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “பொறுமையின் மூன்று வகைகளையும் நோன்பு உள்ளடக்கியிருக்கிறது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 1- அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற சிரமங்களுக்காக பொறுமை காத்தல்: (இது, நோன்பில் இருக்கிறது!) 2 – (பாவங்கள் மூலம்) அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டு விடுகின்ற போது ஏற்படும் அசெளகரியங்களுக்காகப் பொறுமையாக இருத்தல். (இதுவும் நோன்பில் இருக்கிறது!) 3 …
Read More »அவனது அருளுக்காய்
அண்மையில் ஊரில் நிகழ்ந்த இளம் பெண்ணொருவரின் மரணம் என்னையும் பாதித்திருந்தது. அவர் சில மாதங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பலனளிக்காத நிலையில் மரணத்தை தழுவியிருந்தார். வைத்தியர்கள் மூலம் தனது இறுதிமூச்சு நெருங்குவதை அறிந்திருந்த அப்பெண் ஆத்மீக ரீதியாக ஏற்கெனவே பண்பட்டவராயினும் தன்னை அதில் மேலும் ஈடுபடுத்தியதோடு, தான் நினைத்த எல்லைவரை இறை திருப்திக்காக முயற்சித்துக் கொண்டிருந்தார். அந்த முயற்சியின் உச்சமாக புனித உம்றாக் வணக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டார். எதிர்வு கூறியபடியே …
Read More »ஹதீஸ்களில் பித்தலாட்டம் | ஆயிஷா (ரலி) குர்ஆனுக்கு முரண்படும் என்று ஹதீஸை மறுத்தார்களா?
இந்த கட்டுரையை படிக்கும் முன் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டியவை: குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாங்கள் மட்டுமா மறுத்தோம்? என்று பில்டப் கொடுத்து அந்த பில்டபுக்கு பக்க துணையாக ஸஹாபாக்கள் / ஸஹாபிய பெண்மணிகள் ஏன் உம்முல் மூஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்களே மறுத்தள்ளார்கள் என்று அப்படமான அவதூறுகளை அள்ளி விசியவர்தான் பீஜே என்ற பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தனது முகல்லிதுகளாளேயே தூக்கிய எறியப்பட்டவர். அப்படி தூக்கியெறியப்பட்ட தலைவனே கொள்கை, அதாவது …
Read More »