Featured Posts

இஸ்லாம் அறிமுகம்

அவதாரம் எடுத்தல்!

சில மதங்களில் இறைவன் மனித அவதாரம் எடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது. இக்கருத்து இஸ்லாமிய இறைக்கருத்துக்கு நேர் எதிரானதாகும். அல்லாஹ், ஒருபோதும் ஒரு மனிதராகவோ, அல்லது வேறு ஏதாவது உயிரினமாகவோ அவதாரம் எடுத்து வருவது இல்லை. காரணம், அவன் அழிவே இல்லாதாவன். ஏனைய எல்லாமே அழியக்கூடியன. மனிதனும் மற்றைய உயிரினங்களும் பிறந்து இறந்து விடுவன. மற்ற இயற்கைப் படைப்புகளும் என்றோ அழியக்கூடியன. எனவே, அழியக்கூடியவை மூலமாக அழிவே இல்லாதவன் அவதாரம் எடுத்துத் …

Read More »

பல தெய்வ வழிபாடு

“அல்லாஹ் ஒருவனே; அவனன்றி வேறு இறைவன் இல்லை” என்ற கருத்தை வழங்கும் இஸ்லாத்தில் பல தெய்வ நம்பிக்கைக்கு இம்மியளவும் இடமில்லை. அத்தகைய நம்பிக்கைக்குரிய அனைத்து வாயில்களும் மூடிவிட்ட இஸ்லாத்தில் நம்பிக்கையிலும் நடைமுறையிலும் சொல்லிலும் செயலிலும் வணக்கத்திலும் வழிபாடுகளிலும் பல தெய்வம் என்ற வாடை கூட வீசுவது இல்லை. மற்ற மதங்களில் ஆளுக்கொரு தெய்வம் இருப்பதை நீங்கள் காணலாம். ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு தெய்வங்களை கும்பிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் …

Read More »

கலந்துரையாடல் (வீடியோ)

தலைமை : ஜமால் முஹம்மத் மதனி  வழங்குபவர் : பொறியாளர் ஜக்கரிய்யா ஜுபைல், நாள்: 13.04.2006  

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 9

முகம்மதுக்கு முன்பு இறைத் தூதர்களாக இவ்வுலகில் அறியப்பட்டவர்கள் மொத்தம் இருபத்தைந்து பேர். அவர்களுள், முதல் மனிதர் ஆதாம் தொடங்கி, இயேசு வரையிலான பதினேழு பேரைப் பற்றிய விரிவான அறிமுகங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியவர்கள், இறைவனாலேயே நல்வழி காட்டப்பட்டவர்கள் ஒருவகை. இறைவனிடமிருந்து மக்களுக்கு வேதத்தைப் பெற்று அளித்தவர்கள் இன்னொரு வகை. முகம்மதுக்கு முன்னர் இப்படி வேதம் அருளப்பட்ட சம்பவம் மட்டும் மூன்றுமுறை நடந்திருக்கிறது. முதலாவது, …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 8

சொல்லும் செயலும்!மதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன். யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும். இன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது? ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன? கருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது. அச்சடிக்கப்பட்ட ஒரு …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 7

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதுவும் அரேபிய நாட்டில் மிக காட்டுமிராண்டித்தனம் கோலோச்சிய அந்த நேரத்தில் ஒரு மனிதர் ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபட்ட மக்களுக்கு மத்தியில் நின்று புரட்சிகரமான சில கொள்கைகளைச் சொல்லி, அந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு யாராவது கிடைப்பார்களா? என்ற சந்தேகத்திற்கிடையே, அதைச் சொல்லத் தொடங்கி, முதலில் அவருடைய கொள்கை ஏற்றுக் கொண்டவர் அவருடைய துணைவியர், கதீஜா அம்மையார் என்ற அளவில் முதலில் அளவிற்குதான் அவருடைய வழியை பின்பற்றுகிறவர்கள் …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 6

முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்க, அவரவர் ஒவ்வொரு திட்டத்தின் அடிப்படையில் காய்களை நகர்த்துகிறார்கள். இதில் அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ், இஸ்ரேலின் ஏரியல் சாரோன், காவி இயக்கங்கள் மற்றும் அவர்களின் சேவகர்களால் செய்யப்படும் ஊடக வழி பிரச்சாரங்கள் போன்றவை உதாரணங்களாக இருந்தாலும் இதற்கு முன்மாதிரி ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாறாகும். இந்திய முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் “வகுப்புவெறி கூடிய வன்முறைக் கூட்டங்களால்” பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எவ்வாறெல்லாம் செயல் திட்டங்கள் தீட்டப்படுகின்றன? என்பதை விளக்கியிருக்கும் …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 5

வேண்டாம் அற்புதங்கள்! பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார். யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 4

“நபிகள் நாயகம்தான் கல்கி அவதாரம்!”(?) (“மக்களுக்கு வழிகாட்ட இறைவனே மனித வடிவில் பிறக்கிறான்” எனும் அவதாரக் கொள்கையை இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறான் என்பதே இஸ்லாம் கூறும் தூதுத்துவம். இறுதித்தூதர் வர இருக்கிறார் எனும் முன்னறிவிப்பு எல்லா வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்து வேதத்திலும் “கல்கி” பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த “கல்கி” வந்துவிட்டார், அவர்தாம் முஹம்மது நபி(ஸல்) என்று இந்துமத அறிஞர் …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 3

அறிஞர்கள் போற்றும் பெருமானார் முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.– ஜவஹர்லால் நேரு – துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு …

Read More »