அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும் நிர்வாகிகள், சுவர்க்கத்தின் வாடையைக்கூடப் பெறமாட்டார்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 048] நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நவின்றதைத் தான் செவியேற்றதாக மஃகில் பின் யசார் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:- “மக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் மனிதருக்கு வழங்கியிருக்க, அவர் அம்மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் மரணித்துவிட்டால், அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்யாமல் இருக்கமாட்டான்!” ( நூல்: முஸ்லிம் …
Read More »உங்கள் சிந்தனைக்கு
இறைவிசுவாசிக்குப் பலத்தைப் பெற்றுக்கொடுக்கும் ‘திக்ர்’! [உங்கள் சிந்தனைக்கு… – 047]
அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “(அல்லாஹ்வை) திக்ர் செய்தல், திக்ர் செய்பவருக்கு நல்ல பலத்தைக் கொடுக்கிறது. எந்தளவுக்கென்றால், திக்ர் இல்லாமல் செய்ய முடியாதிருக்கும் ஓர் விடயத்தை திக்ருடன் ஒருவர் உண்மையாகவே செய்து விடுகின்றார். ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் நடை அமைப்பிலும், அவரின் பேச்சிலும், அவரின் வீரத்திலும், எழுத்திலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் பலம் இருந்ததை நான் நேரடியாகவே பார்த்தேன். புத்தகம் ஒன்றைத் தொகுத்து எழுதக்கூடிய …
Read More »அல்லாஹ் இட்ட வரம்புகள், சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைகள் அல்ல! [உங்கள் சிந்தனைக்கு… – 046]
“(கொஞ்சம் இப்படிக்) கற்பனை செய்துபார்! நீ நடந்து செல்லும் உன் பாதையில், ‘முன்னே செல்லத் தடை; மிதிவெடிகள் புதைக்கப்பட்ட பகுதி இருக்கிறது!’ என்று எழுதப்பட்ட அறிவித்தல் பதாகை காணப்படுகிறது. அப்போது, ‘தடை!’ என்ற வார்த்தையைச் சொல்லி (எழுதி) அப்பதாகையை வைத்தவன் மீது உன் மனதில் குரோதம் ஏற்படுவதை நீ கண்டு கொள்ளவேமாட்டாய்!. மாறாக, அதற்காக நீ அவனுக்கு நன்றி செலுத்துவாய். அப்பதாகை, உன் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டதென்றும் நீ சிந்திக்கவேமாட்டாய்! …
Read More »வேண்டாம் இந்நிலைப்பாடு! [உங்கள் சிந்தனைக்கு… – 045]
இமாம் வஹ்ப் இப்னுல் வர்த் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “உள்ளே ஷைத்தானின் நண்பனாக நீ இருந்துகொண்டு, வெளியே அவனைத் திட்டாதே. அல்லாஹ்வை நீ அஞ்சிக்கொள்!”. { நூல்: ‘ஸிfபதுஸ் ஸfப்வா’, 03/135 } قال الإمام وهب بن الورد رحمه الله تعالى:- [ ولا تسبّ الشيطان في العلانية، وأنت صديقه في السّرّ. إتّق الله! ] { صفة الصفوة، ٣/ ١٣٥ …
Read More »ஒரு வகையில் இவர்கள் சுயநலவாதிகளே! [உங்கள் சிந்தனைக்கு… – 044]
ஒரு வகையில் இவர்கள் சுயநலவாதிகளே! அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: “மனிதர்களில் அதிகமானோரின் நிலையை நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்த்தால், ‘தமக்கு அல்லாஹ் செய்ய வேண்டிய உரிமையையே அவர்கள் பார்க்கின்றார்கள்; தாம் அவனுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளைப் பார்க்காதிருக்கின்றார்கள்!’ என்றிருப்பதாகவே அவர்களை நீங்கள் கண்டு கொள்வீர்கள். இங்குதான் இவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம்மைத் துண்டித்துக் கொள்கின்றனர்; மேலும் அவனை அறிவதை விட்டும், அவனை அன்பு கொள்வதை விட்டும், …
Read More »இறைமறை ஓதலில் இன்பம் கண்டவருக்கு… [உங்கள் சிந்தனைக்கு… – 043]
இறைமறை ஓதலில் இன்பம் கண்டவருக்கு அதைச் சிறையில் ஓதுவது சிரமமாகவே இருக்காது! “ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தன் வாழ்வின் இறிதிக்காலப் பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார்கள். அதில், 80 தடவைகள் முழுக் குர்ஆனையும் ஓதி முடித்தார்கள். 81-வது தடவை அல்குர்ஆனை அவர் ஓத ஆரம்பித்து, ‘நிச்சயமாக பயபக்தியாளர்கள் சுவனச் சோலைகளிலும், ஆறுகளிலும் இருப்பார்கள்.? வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் அவர்கள் இருந்து கொண்டிருப்பார்கள்’. (அல்குர்ஆன், …
Read More »மணமகன் – மணமகள் தெரிவில்…. [உங்கள் சிந்தனைக்கு… – 042]
மணமகன் – மணமகள் தெரிவில் மார்க்கமே அளவுகோலாக இருக்கட்டும்! அஸ்மா பின்த் அபீபக்ர் (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் கூறுகின்றார்கள்: “(மக்காவில் இருக்கும்போதே) என்னை ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் மணந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும், அவரின் குதிரையையும் தவிர வேறு எந்த சொத்துபத்துகளும், அடிமைகளும், உடைமைகளும் இருக்கவில்லை!”. (நூல்: புகாரி – 5224) இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் குர்துபீ (ரஹிமஹுல்லாஹ்) …
Read More »நல்லவற்றை தர்மம் செய்வதில் நபியவர்கள் மிக வேகமானவர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 041]
நல்லவற்றை தர்மம் செய்வதில் நபியவர்கள் மிக வேகமானவர்கள்! இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமழான் மாதத்தில் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனென்றால், (வானவர்) ஜிப்ரீல் ரமழானின் ஒவ்வோர் இரவும் – ரமழான் முடியும் வரை – நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் …
Read More »அநீதியிழைத்தவனின் நோன்பின் கூலி அநீதியிழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படமாட்டாது! [உங்கள் சிந்தனைக்கு… – 040]
அநீதியிழைத்தவனின் நோன்பின் கூலி அநீதியிழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படமாட்டாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!’ என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்யவும் …
Read More »மிக நேரானதின் பக்கம் வழிகாட்டும் அல்குர்ஆனோடு மிக நெருக்கமான உறவைப் பேணுவோம்! [உங்கள் சிந்தனைக்கு… – 039]
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “ரசூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த (இறைவேதம்) அல்குர்ஆனை வர்ணித்து அல்லாஹ் கூறும்போது, ‘நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரானதின் பக்கமே வழிகாட்டுகிறது!’ (17:09) என்று கூறுகிறான். ‘நேரானதின் பக்கமே இது வழிகாட்டுகிறது!’ என்ற இவ்வார்த்தையின் விளக்கத்தை பல பாகங்கள் கொண்ட நூல்களில் எழுதித் தொகுக்கப்பட்டாலும் அது தெரிவிக்க வரும் கருத்துக்களை அவற்றிற்குள் உள்ளடக்க முடியாது!. இஸ்லாமியக் கொள்கைசார் விடயங்கள், …
Read More »