Featured Posts

நூல்கள்

ஜகாத் கொடுக்காவிட்டால் பாவம்.

574.குதிரை வைத்திருப்பது மூன்று பேருக்கு மூன்றுவகையான விளைவுகளைத் தருவதாகும். ஒருவருக்கு நற்கூலி பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக பசுமையான ஒரு வெட்டவெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்த குதிரை, தன்னைக் கட்டி வைத்திருக்கும் கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்குப் பசும்புல் வெளிகளில் …

Read More »

ஸதக்கத்துல் ஃபித்ர்.

570.முஸ்லிம்களிடையேயுள்ள அடிமை, சுதந்திரமானவர் ஆண், பெண் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். புஹாரி :1504 இப்னு உமர் (ரலி) 571. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் …

Read More »

ஜகாத் கொடுப்பவர் கொடுக்காதவர் பற்றி

569.நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் இப்னு வலீத், அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் (ஜகாத் தர) மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரைச் செல்வந்தராக்கிய பிறகு அவர் ஜகாத் தர மறுத்துள்ளார். காலிதை (ரலி)ப் பொருத்தவரை, நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநியாயம் இழைக்கிறீர்கள். அவரோ தம் …

Read More »

குதிரைகளின் அடிமைகளின் ஜகாத்.

568.”(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை..”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1463 அபூஹுரைரா (ரலி)

Read More »

ஜகாத் அளவு

567.”ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக் என்பது 60ஸாவு) தானியத்தில் ஸகாத் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1405 அபூ ஸயீத் (ரலி)

Read More »

ஜனாஸா தொழுகையில் இமாம் எங்கு நிற்பது?

566.பிரசவத் தொடக்குடனேயே இறந்துவிட்ட பெண்ணிற்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுதபோது மைய்யித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். புஹாரி : 1331 ஸமுரா பின் ஜூன்துப் (ரலி)

Read More »

ஜனாஸாவைக் கண்டால் எழுதல்.

561.”ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி:1307 அமீர் பின் ரபிஆ (ரலி) 562.”உங்களிலொருவர் ஜனாஸாவைக் கண்டும் அதனுடன் நடந்து செல்லப் போவதில்லை என்றால் அவர் அதைக் கடந்து செல்லும்வரை அல்லது அது அவரைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவருக்கு முன்னால் (பூமியில்) வைக்கப்படும் வரை எழுந்து நிற்கட்டும்.” புஹாரி: 1308 ஆமிர் இப்னு …

Read More »

கப்ரில் ஜனாஸா தொழுகை நடத்துதல்.

559.’நபி (ஸல்) அவர்கள் தனியாக இருந்த ஒரு கப்ருக்கருகே சென்று (ஜனாஸாவுக்காகத்) தொழுகை நடத்தினார்கள். மக்களும் அணி வகுத்து நின்றனர். புஹாரி : 857 இப்னு அப்பாஸ் (ரலி) 560.பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கரு நிறமுடைய ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு நாள் திடீரென்று அவர் பற்றி நினைவு வந்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘அவர் என்ன ஆனார்?’ …

Read More »

ஜனாஸா தொழுகையில் தக்பீர் கூறுதல்

555.நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஸி (மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள். புஹாரி : 1245 அபூஹூரைரா (ரலி) 556. (அபிசீனிய மன்னர்) நஜ்ஜாஸி இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை அறிவித்த நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் சகோதரருக்காக நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள்” என்று கூறினார்கள். …

Read More »

மரணித்தவர் ஓய்வு பெறுதல்.

554.இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் ‘(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்” என்றார்கள். மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) …

Read More »