ஒருவர் பயந்தால் தம் விசுவாசத்தை மறைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி……… 90- மக்களில் இஸ்லாத்தை ஏற்றிருப்பதாகக் கூறுபவர்களின் பெயர்களை எனக்காக எழுதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்களுக்காக ஆயிரத்து ஜந்நூறு பெயர்களை எழுதினோம். அப்போது நாங்கள், நாம் ஆயிரத்து ஜநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா? என்று கேட்டோம். (ஆனால் பிற்காலத்தில்) நாங்கள் அச்சப்பட்டுக் கொண்டு தனியாகத் தொழுமளவிற்கு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கின்றேன். புகாரி-3060: …
Read More »நூல்கள்
ஈமானின் இறுதி நிலை
89- பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் (இறைநம்பிக்கை) மதீனாவில் அபயம் பெறும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-1876: அபூஹூரைரா(ரலி)
Read More »குழப்பங்களின் பரிகாரம் நல்லறங்களே……
88- நாங்கள் உமர் (ரலி) இடம் அமர்ந்திருந்த போது, நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்தவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்ற பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு). நபி (ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர் (ரலி) நீர் அதற்குத் தகுதியானவர் தாம் என்றனர். ஒரு மனிதன் தமது குடும்பத்தினரிடமும் …
Read More »பிள்ளைகளிடையே பாரபட்சம்
அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளுக்கிடையே பாரபட்சம் சிலர் தங்களுடைய பிள்ளைகளில் சிலரை விடுத்து சிலருக்கு மட்டும் அன்பளிப்புகள், வெகுமதிகள் வழங்குகின்றனர். ஷரீஅத் ரீதியிலான தக்க காரணம் இல்லையெனில், சரியான கூற்றின் பிரகாரம் இவ்வாறு செய்வது ஹராமாகும். உதாரணமாக தம் பிள்ளைகளில் ஒருவனுக்கு மற்ற பிள்ளைகளூக்கு ஏற்படாத ஒரு தேவை ஏற்பட்டு விட்டதெனில் – உதாரணமாக அவன் நோயாளியாக இருக்கிறான், அல்லது அவனுக்கு கடன் இருக்கிறது, அல்லது திருக்குர்ஆனை மனனம் செய்ததற்காக அவனுக்கு …
Read More »அமானித மோசடியும் குழப்பங்கள் தோன்றுவது குறித்தும்…
87- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நன்பகத் தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கின்றேன். ஒரு செய்தி யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ் மனதில் (அமானத் எனும்) நம்பகத் தன்மை இடம்பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்து விட்டேன்.) இரண்டாவது செய்தி, நம்பகத் தன்மை …
Read More »குடிமக்களை காக்கத் தவறிய ஆட்சியாளன்
சமுதாயத்தை ஏய்க்கும் ஆட்சியாளன் பெறும் தண்டனை குறித்து………. 86- நபி (ஸல்) அவர்கள், ஓர் அடியானுக்குக் குடிமக்களை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான் என்று சொல்ல நான் கேட்டேன் எனக் கூறினார்கள். புகாரி-7150: மஅகில்(ரலி)
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (17)
தலைமை மாற்றம் பொருளாதாரத்தின் தேவை, விவேகமும் பேரவாவுமிக்க முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையும் அரசாங்கக் கல்வி நிலையங்களுக்குத் துரத்தியது. அங்கு அவர்கள் பெற்ற கல்வி, அவர்களைத் தம் சொந்த பாரம்பரியத்திலிருந்தும் பிரித்து விட்டது. அவர்கள் மேனாட்டுக் கருத்துக்களை ஏந்தி வெளியேறியதோடு, தம் சொந்தக் கலாச்சாரத்தில் பெறுமதி வாய்ந்த எதுவுமில்லையென்றும் தம் சென்ற கால வரலாற்றில் தாம் பெருமைப்படக்கூடியது ஒன்றுமில்லை என்றும் நம்பினர். மேனாட்டு வாழ்க்கை முறையினை மிக நுணுக்கமாகப் பின்பற்ற அதன் …
Read More »ஷஹீத்!
தன் உயிரை உடமையைக் காக்கப் போராடி உயிர் விட்டவன் ஷஹீது என்பது பற்றி……… 85- தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர் தியாகம் செய்தவர் (ஷஹீது) ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-2480: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி)
Read More »பொய் சத்தியம்
ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிக்க பொய் சத்தியம் செய்பவன் குறித்து…….. 84- ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக) பறித்துக் கொள்வதற்காக ஒரு பிரமாண(வாக்கு மூல)த்தின் போது துணிவுடன் பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் தான் அவனை (மறுமையில்) சந்திப்பார் என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும்,தம் சத்தியங்களுக்கும் …
Read More »ஷைத்தானிய எண்ணம்
ஒரு விசுவாசியின் உள்ளத்தில் எழும் கெட்ட எண்ணம் குறித்து…… 83- மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்விகேட்டுக் கொண்டேயிருப்பார்கள். இறுதியில்,அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ், இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கூடக் கேட்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-7296: அனஸ் பின் மாலிக்(ரலி) 82- உங்களில் ஒருவரிடம் (அவர் மனதிற்குள்) ஷைத்தான் வந்து, இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்? …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library