Featured Posts

நூல்கள்

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 3

இஸ்லாமிய நம்பிக்கைப் பிரகாரம் இயேசு (ஈஸா) ஒரு இறைத் தூதராவார். அவர் பத்தினியான மர்யம்(ர) (மரியாள்) அவர்களுக்கு எவ்வித ஆண் தொடர்பும் இல்லாமல் அற்புதமான முறையில் பிறந்தவர். பிறந்தவுடன் தனது தீர்க்கதரிசனம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசியவர். இறையுதவியால் பல்வேறுபட்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர். அவர் கடவுளோ, கடவுளின் குமாரரோ அல்ல; அவர் சிலுவையில் அறையப்படவும் இல்லை; கொலை செய்யப்படவும் இல்லை. இன்று வரை உயிருடன் இருக்கிறார். உலக அழிவு …

Read More »

மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னரா? பின்னரா?

நபி(ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்காக கஃபாவிலிருந்து பைதுல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் அங்கிருந்து ஏழு வானங்கள் கடந்து அழைத்துச் செல்லப்பட்டார்கள். நபியவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரும் அற்புதங்களில் ஒன்றாக இந்த இஸ்ரா-மிஃராஜ் நிகழ்வு அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி நபித்துவத்துக்குப் பின்னர் ஹிஜ்ரத்திற்கு முன்னர் நடந்ததாகும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இது குறித்துப் பேசும் புஹாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம் பெற்ற …

Read More »

திருக்குர்ஆன் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா?

இலங்கை சிங்களவர்களைப் பெரும்பான்மையாக் கொண்ட ஒரு நாடாகும். இந்த நாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும். இந்த அடிப்படையில் இந்த நாட்டு அரசு பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட்டால் அதை யாரும் குறை காண முடியாது. இதே போன்று இந்நாட்டு மதகுருமார் தத்தமது மார்க்கத்தைப் போதனை செய்து பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும் முயற்சிப்பதையும் யாரும் குறை காணமாட்டார்கள். குறை காணவும் முடியாது. இந்த …

Read More »

யார் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்?

அண்மைக் காலமாக ஊடகங்களின் பரபரப்புச் செய்தியாக ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. இன்றைய இலத்திரனியல் ஊடகங்களில் இவர்களது வீரதீரச் செயல்கள் மட்டுமன்றி இவர்களால் நடாத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூரக் கொலைகளும் வெளிவந்து மக்கள் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். சிலர் இவர்களை நபியவர்களால் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்யப்பட்ட அமைப்பாகப் பார்க்கின்றனர். மற்றும் சிலர் இஸ்லாத்தின் எதிரிகளால் வழிநடாத்தப்படும் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குள்ள அமைப்பாகப் பார்க்கின்றனர்.

Read More »

ஹஜ், உம்றாவில் தொங்கோட்டம் ஓடுதல் (அல்குர்ஆன் விளக்கம்)

‘நிச்சயமாக ‘ஸஃபா’ உம் ‘மர்வா’ உம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எவர் இவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறாரோ அவர் மீது அவ்விரண்டுக்குமிடையில் சுற்றி வருவது குற்றமில்லை. எவர் மேலதிகமாக நன்மை செய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றியுடையவனும், நன்கறிந்தவனுமாவான்.’ (2:158) கஃபாவுக்கு அருகில் ஸஃபா-மர்வா என்று இரண்டு மலைகள் உள்ளன. ஹஜ் அல்லது உம்றாச் செய்பவர்கள் இந்த மலை களுக்கிடையே ஏழு முறை ‘ஸஈ’ செய்வது (தொங்கோட்டம் ஓடுவது) …

Read More »

மரணித்தும் வாழும் உயிர்த்தியாகிகள் (அல்குர்ஆன் விளக்கம்)

‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்.’ (2:154) அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களை ‘அம்வாத்’ – ‘இறந்தவர்கள்’ என்று கூறாதீர்கள். அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். எனினும், நீங்கள் உணரக் கூடிய விதத்தில் அல்ல என்று இந்த வசனம் கூறுகின்றது. ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக நீர் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தமது …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 2

இயேசுவின் பிறப்பு பற்றி அல்குர்ஆன் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமலும் கூறி அவரை கண்ணியப்படுத்தியுள்ளமையும், பைபிள் இது பற்றிக் கூறும் போது அல்குர்ஆன் அளவுக்கு அவரது அற்புதப் பிறப்பு பற்றி உறுதிப்படக் கூறாத ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதுடன் அவர் யோசோப்பின் குமாரன் என அறியப்பட்டார் எனக் கூறி அதில் சந்தேகத் தன்மையையும் உண்டு பண்ணுகின்றது. இந்த அடிப்படையில் இயேசுவின் பிறப்பு விடயத்தில் அல்குர்ஆன் அவரை கண்ணியப்படுத்தும் அதே …

Read More »

உஸ்மான்(வ) அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள். யதார்த்தம் என்ன?

குலபாஉர் ராஷீதூன்களில் அதிகமான விமர்சனங்களைச் சந்தித்தவராக உஸ்மான்(வ) அவர்கள் திகழ்கின்றார்கள். தனது மரணத்தின் பின் நுபுவ்வத்தின் அடிப்படையிலான கிலாபத் குறிப்பிட்ட காலம் இருக்கும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு நபியவர்களால் நபித்துவத்தின் அடிப்படையில் அமைந்த கிலாபத் எனும் போற்றப்பட்ட ஆட்சியில் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியும் ஒன்றாகும். அன்று வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தின் பெயரில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பியவர்களும் உஸ்மான்(வ) அவர்களது கிலாபத் நிர்வாகம் தெடர்பிலும் …

Read More »

வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (eBook)

ஆசிரியர்: அப்துர் ரஹ்மான் மன்பஈ தங்களின் கைகளில் தவழும் இச்சிறு நூல் “அல்ஜன்னத்” இஸ்லாமிய மாத இதழின் தொடர் கட்டுரையில் வந்த தொகுப்பாகும். (மே 2013 – ஜனவரி 2014), தொடராக வெளிவந்த போது பலருக்கும் பயன் தரக்கூடியதாக இருந்ததால், சத்தியத்தை எத்திவைக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள சகோதரர்களின் விருப்பத்திற்கு இணங்க இது நூலாக அத்துடன் மின்னணு நூலகாக (eBook in PDF format) உங்கள் கைகளில் தவழ்கிறது. முழு …

Read More »

சரிந்து வரும் சமூக மரியாதை

– S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ், இலங்கை ஒரு சமூகம் குறித்து பிற சமூக மக்களிடம் உயர்வான எண்ணங்கள் இருக்க வேண்டும். இது ஒரு நல்ல சமூகம் என்ற மதிப்பும் மரியாதையும் இருந்தால் அந்த சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் மரியாதையுடன் நோக்கப்படுவான். இல்லாத போது கீழ்த்தரமான, தப்பான பார்வையைத் தவிர்க்க முடியாது. இந்த அடிப்படையில் சமுதாய மரியாதையைச் சிதைப்பது நம்மை நாமே தாழ்த்திக் …

Read More »