Featured Posts

ஒழுக்கம்

தக்வாவை நோக்கிய பயணம்..

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1434-ஹி சிறப்புரை: அஷ்ஷைக்: அப்துல்வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் — இலங்கை) (அஷ்ஷைக் அப்துல்வதூத் ஜிஃப்ரி அவர்கள் தங்களது உரையில், முஸ்லிம் உம்மாவில் – முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை உற்றுநோக்கினால் அது தக்வா சம்மந்தமாகவே இருக்கின்றது. எனவே தக்வாவை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை குர்ஆன் சுன்னா அடிப்படையில் மிக தெளிவாக விவரிப்பதுடன் அதனை ஸஹாபாக்கள் …

Read More »

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு “உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும். நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் …

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 9)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பெண்ணே! பெண்ணே! அநியாயம் வேண்டாம் கண்ணே! பெண்ணின் அன்பு, பாசம் காரணமாகவும் அவள் அநியாயக்காரியாக மாறும் நிலை ஏற்படுகின்றது. தன் பிள்ளை மீது கொள்ளும் பாசத்தின் காரணமாக அடுத்த பிள்ளைகளுக்கு அநியாயம் செய்கின்றாள். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீதி, நியாயமாகப் பேச வேண்டும் என்பதை மறந்து தனது பிள்ளையின் தவறை மறைத்துப் பேசுகின்றாள். அடுத்த பிள்ளைகளின் சின்னத் …

Read More »

ஆன்மீக சூழல் அற்றுப் போகும் முஸ்லிம் வீடுகள்

– இம்தியாஸ் ஸலபி உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80) வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக் குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 8)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அநியாயம் வேண்டாம் கண்ணே! இஸ்லாம் நீதி நெறிகளைப் போற்றும் மார்க்கமாகும். அநியாயத்தை இஸ்லாம் அணுவளவும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ இல்லை. இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்ய முயற்சி செய்ததால் யூதர்கள் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டது. இந்த வெறுப்புணர்வு கூட அநியாயத்திற்குக் காரணமாகிவிடக் கூடாது எனப் போதித்த மார்க்கம் இஸ்லாமாகும்.

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 7)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஒழுங்கீனம் வேண்டாம் கண்ணே! சில பெண்கள் பண்பாடோ, நாகரீகமோ இல்லாமல் நடந்து கொள்வதைக் காணலாம். இவர்களின் இத்தகைய பண்பாடற்ற நாகரீக மற்ற இயல்புகளும், நடத்தைகளும் அடுத்தவர்களுக்கு பெருத்த அசௌகரியத்தை அளித்து வருகின்றன. எனினும் இத்தகைய பெண்கள் இவ் இழி குணங்களின் பாதிப்பை உணர்வதில்லை.

Read More »

இளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்?

– எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஸலபி அன்புக்குரிய பெற்றோர்களே! கல்வி என்பது ஒரு சமூகத்தின் முகவரி. சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் அந்த சமூகத்தின் வரலாற்றுச் சுவடுகளை பாதுகாத்து வைப்பதற்கும் பெற்றோர்களினதும் கல்விமான்களினதும் பணி இன்றியமையாதது. கல்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட இன்றைய எமது சமூகம் அதனை எப்படி எந்த வகையில் கொடுக்க வேண்டும் என்பதை சரிவர புரிந்து கொள்ள தவறி விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 6)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் தப்பெண்ணம் வேண்டாம் கண்ணே! சிலருக்கு அடுத்தவரைப் பற்றி எப்போதும் கீழ்த்தரமான எண்ணம் தான் இருக்கும். அடுத்தவர் எதை ஏன்இ என்ன நியாயத்திற்காகச் செய்கின்றனர் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். சிலர் பொறாமை காரணத்திற்காகவும் உளவு மனபப்பான்மையாலும் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். பெண்களில் பலருக்கு இந்த நோய் இருக்கின்றது.

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 5)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் போலிப் புகழாரம் வேண்டாம் கண்ணே! சில பெண்கள் போலிப் புகழ் பாடுவதில் வல்லவர்களாகத் திகழ்வர். தம்மைப் பற்றி எப்போதும் பீற்றித் திரிவர். இவர்களை அடுத்தவர்கள் மிக இலகுவாக அடையாளம் கண்டு கொள்வர். அவர்கள் பேசும் தொணி, ஸ்டைல், சப்ஜக்ட் அனைத்துமே அவர்களது புகழ் போதையைப் படம்பிடித்துக் காட்டிவிடும். இவர்கள் பெருமை பேசிவிட்டு நகர்ந்ததும் அடுத்த பெண்கள் இவளின் …

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 4)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பதட்டம் வேண்டாம்! கண்ணே! சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் அதிகம் அலட்டிக் கொள்பவர்களாகவும், பதட்டம் கொள்பவர்களாகவும் பல பெண்கள் காணப்படுகின்றனர். பதட்டம் சில பெண்களுடன் கூடப்பிறந்த குணமாகக் குடிகொண்டிருக்கும். வாழ்வில் இறக்கங்கள் ஏற்பட்டாலோ இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டாலோ வாழ்வே சூனியமாகிவிட்டது போன்று நடந்து கொள்வர், ஒப்பாரி வைப்பர், கண்ணத்திலும் மார்பிலும் அடித்துக் கொள்வர், படபட எனப் பொரிந்து தள்ளுவர். …

Read More »