திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது இலங்கை அரசியல். ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றம் இன்னொரு கட்சி வசமும், உள்ளாட்சி மன்றங்கள் மற்றுமொரு கட்சி வசமும் சிதறிச் சென்றுள்ளன. வட்டாரமும் (60) விகிதாசாரமும் (40) கலந்த இந்த தேர்தல் முறையில் நடந்த முதலாவது உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாட்டில் பாரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பலங்கள் என்ன என்பதைக் கட்சித் தலைமைகள் மக்கள் மத்தியில் கூறி …
Read More »உண்மை உதயம் மாத இதழ்
கொடுப்பதால் குறையாது [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-18]
முன்னொரு காலத்தில் யெமன் தேசத்தின் சன்ஆவுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரும் செல்வந்தராவார். அவருக்குச் சொந்தமான பல தோட்டங்களும் விவசாய நிலங்களும் இருந்தன. அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகளும் இருந்தனர். இந்த நல்ல மனிதர் தனது தோட்டத்தில் அறுவடை செய்வதை மூன்றாகப் பிரிப்பார். 1) மீண்டும் பயிரிடுவதற்கு முதலுக்காக. 2) அடுத்த அறுவடை வரை தானும் தன் குடும்பமும் உண்பதற்கு. 3) மூன்றாம் …
Read More »இலங்கை முஸ்லிம்கள் கவனத்திற்கு – “பொதுபலசேனா” வஹாபிகளுக்கு மட்டும் எதிரான அமைப்பா?
-அஷ்ஷைக் SHM இஸ்மாயில் ஸலபி பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் எமக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் வஹாபி, ஸலபி முஸ்லிம்களைத்தான் எதிர்க்கின்றோம் என்ற போலியான ஒரு புரளியை இனவாத பௌத்த அமைப்புக்கள் கிளறி வருகின்றன. இதற்கு சமூகத் துரோகிகள் சிலர் துணை போயுள்ளனர். இனவாதிகளின் இந்த வாதம் பொய்யானதாகும். முஸ்லிம் சமூகத்தைப் பிளவு படுத்துவதற்காகவே இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். முதன் முதலில் அனுராதபுரத்தில் நானூறு வருடம் பழைமை வாய்ந்த சியாரத்தை …
Read More »இஸ்மாயில் நபியும்… ஆடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-17]
நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நபி ஆவார்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. நன்றாக வயது சென்ற பின்னர்தான் இஸ்மாயில் என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அதற்கும் பல வருடங்கள் கடந்த பின்னர் இஸ்ஹாக் என்றொரு குழந்தையும் கிடைத்தது. இப்ராஹீம் நபி இயல்பிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவர். உங்களைப் போன்ற குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். தனது வயோதிக காலத்தில் கிடைத்த …
Read More »மூஸா நபியும் ஹிள்ர் நபியும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-16]
மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும் முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு …
Read More »குகை தோழர்களின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-15]
அன்புள்ள தம்பி தங்கைகளே! அற்புதமான சில இளைஞர்களின் கதையைக் கூறப் போகின்றேன் வாருங்கள்! 300 வருடங்களாக உறங்கிய இளைஞர்கள் இவர்கள். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றதா? ஆம்! அற்புதமான, அதிசயமான சம்பவம்தான் இது! ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் சர்வாதிகார குணம் கொண்டவன்! சிலைகளை வழிபடுமாறு மக்களை நிர்பந்திப்பவன். அந்தப் பகுதியில் வாழ்ந்த சில இளைஞர்களுக்கு இது பிடிக்கவில்லை. “நாங்களே ஒரு சிலையை வடித்து அதை நாமே …
Read More »குறைந்தபட்ச எண்ணிக்கை | ஜமாஅத்துத் தொழுகை-4 [பிக்ஹுல் இஸ்லாம் – 34]
குறைந்தபட்ச எண்ணிக்கை ஜமாஅத்துத் தொழுகைக்கு ஆகக் குறைந்தது இருவராவது இருக்க வேண்டும். மாலிக் இப்னு ஹவைரிஸ்(ரலி) அறிவிக்கின்றார்: “பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லி, பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” ? புகாரி- 630, அபூ தாவூத்- 589, இப்னு …
Read More »ஆயிஷா(ரலி) அவர்கள் மீதான அவதூறுச் சம்பவம் தரும் படிப்பினைகள்
ஆயிஷா(ரலி) அவர்கள் மீதான அவதூறுச் சம்பவத்தின் மூலம் ‘பிக்ஹ்” சட்ட முடிவுகளை எடுக்கலாம் என்பதை சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில் இச்சம்பவத்தின் மூலம் பெறவேண்டிய சில பண்பாட்டுப் பயிற்சிகளைப் பார்ப்போம். 1. கனி இருக்கக் காய் கவர்தல்: கனி இருக்க காய் கவர்தல் நன்றன்று என்பார்கள். மரத்தில் நல்ல கனி இருக்கும் போது எதற்காக காயைப் பறிக்க வேண்டும்? இதே போன்றுதான் இனிய சொல் இருக்கும் போது கடுமையான, …
Read More »அனுபவப் பகிர்வு: அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்)
சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு அருகில் “அஹ்லே ஹிந்த்” (தவ்ஹீத்) பள்ளி உள்ளது. நான் அங்கு குத்பாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். குத்பா உரை முடிந்ததும் ஒரு பெரியவர் வந்து ஸலாம் கூறி “நீங்கள் கொழும்பா?” என்று கேட்டார். நான் ஆம் என்று கூறியதும் முன்பு கொழும்பில் இருந்து அப்துல் ஹமீத் பக்ரி என்பவர் இங்கு வருவார். உங்கள் குத்பாவைக் கேட்கும் போது அவரின் நினைவு வந்தது என்றார். …
Read More »ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-14]
மூஸா நபியின் சமூகம் பிர்அவ்னின் பிடியில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடல் பிளந்து வழிவிட்டது. மூஸா நபியும் அவரது தோழர்களும் கடலைக் கடந்தனர். பிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டது. மூஸா நபியின் கூட்டத்தினர் வரும் வழியில் சிலை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்டனர். “பார்த்து வணங்க அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கு ஒரு கடவுளை ஏற்பாடு செளியுங்கள்” என்று கேட்டனர். அவர்களின் உள்ளத்தில் சிலை வழிபாட்டின் …
Read More »